Goli Soda Rising Review: ஸ்லோவாக தொடங்கி திருப்புமுனை தரும் காட்சியுடன் முடிவு..கோலி சோடா ரைசிங் எப்படி இருக்கிறது?-goli soda rising review vijay milton reboot series begins with a slow pace sets the tone for a bigger battle - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Goli Soda Rising Review: ஸ்லோவாக தொடங்கி திருப்புமுனை தரும் காட்சியுடன் முடிவு..கோலி சோடா ரைசிங் எப்படி இருக்கிறது?

Goli Soda Rising Review: ஸ்லோவாக தொடங்கி திருப்புமுனை தரும் காட்சியுடன் முடிவு..கோலி சோடா ரைசிங் எப்படி இருக்கிறது?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 14, 2024 11:52 AM IST

Goli Soda Rising Review: ஸ்லோவாக தொடங்கி திருப்புமுனை கட்டத்துடன், அடுத்த என்ன நடக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பை எகிற வைக்கும் விதமாக கோலி சோடா ரைசிங் முதல் மூன்று எபிசோடுகள் அமைந்துள்ளது. அடுத்த வாரம் எபிசோடுகள் பரபர காட்சிகளோடு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Goli Soda Rising Review: ஸ்லோவாக தொடங்கி திருப்புமுனை தரும் காட்சியோடு முடிவு..கோலி சோடா ரைசிங் எப்படி இருக்கிறது?
Goli Soda Rising Review: ஸ்லோவாக தொடங்கி திருப்புமுனை தரும் காட்சியோடு முடிவு..கோலி சோடா ரைசிங் எப்படி இருக்கிறது?

கோலி சோடா படத்தில் இடம்பிடித்த கதாபாத்திரங்கள் இந்த வெப் சீரிஸிலும் இடம்பிடித்துள்ளனர். கூடுதலாக இயக்குநர் சேரன், நடிகர் ஷாம், குக் வித் கோமாளி புகழ், ரம்யா நம்பீசன் என புதிய கேரக்டர்களும் இடம்பிடித்துள்ளனர். மேலும், நடிகை அபிராமி, ஜான் விஜய், அவந்திகா மிஷ்ரா, அம்மு அபிராமி உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வெப் சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. தற்போது முதல் மூன்று எபிசோடுகள் வெளியாகி இருக்கும் நிலையில், அடுத்தடுத்த எபிசோடுகள் வரும் வாரங்களில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

கோலி சோடா பட கதையின் தொடர்ச்சியாக புதிய கதைக்களத்துடன், புதிய சாகசங்களுடன் ஆச்சியுடன் இணைந்து இளைஞர்கள் மூன்று ஃபுட் டிரக் தொடங்க முயற்சிப்பது போல் கதை அமைந்துள்ளது.

கோலி சோடா ரைசிங் எப்படி இருக்கிறது?

கோலி சோடா படத்தில் வரும் புலி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி என நான்கு கதாபாத்திரங்களுக்கு இதில் வருகிறார்கள். கோயம்பேடு சந்தையில் உழைத்து வந்த இவர்கள் சில நல்ல உள்ளங்களின் உதவியால் ஆச்சி மெஸ் என்ற உணவகத்தை நடத்துகிறார்கள். இதில் இருவருக்கு கேர்ள் பிரண்ட் இருக்கிறார்கள். கோலி சோடாவில் தோன்றி ஏடிஎம், யாமினி கதாபாத்திரங்கள் இதிலும் வருகிறார்கள்.

அதேபோல், நாயுடுவாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த மதுசூதன ராவ், ஆச்சியாக நடித்த சுஜாதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, ஆர்.கே. விஜயமுருகன் ஆகியோரும் தோன்றுகிறார்கள்.

கோலி சோடா ரைசிங்கில் முதல் மூன்று எபிசோடுகளிலும் இந்த இளைஞர்களின் வாழ்க்கையை ஆராயும் பல்வேறு காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.

புதிய கேரக்டர்களாக ஷாம் நடித்திருக்கும் ரவி என்ற கதாபாத்திரம் ஹார்பரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவராகவும், சேரன் நடித்திருக்கும் தில்லை என்ற கதாபாத்திரம் ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி வந்தவராகவும் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் குக் வித் கோமாளி புகழ், உருண்டை என்ற கேரக்டரில் பெட்டி கேங்க்ஸடாராக வருகிறார். ரவியின் ஏவலாளியாகவும் இருக்கிறார்.

ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்ரீட்

கோலி சோடா ரைசிங்கின் மூன்று எபிசோடுகள் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரங்களின் அறிமுகம், அவர்களின் பின்னணி, வாழ்கை பற்றி எடுத்துகாட்டும் விஷயங்கல் விறுவிறுப்பை குறைத்தாலும் அடுத்த வாரத்தில் நடக்க இருக்கும் திரும்ப்புமுனையை எதிர்நோக்கும் விதமாக முடித்துள்ளார்கள்.

கோயம்பேடு பாய்ஸ் ஃபுட் டிரக் வைக்க வேண்டும் என்ற லட்சத்தியத்துடன் இருக்கிறார். கேங்ஸ்டர்களுடன் மோதி அவர்கள் இலக்கை எப்படி அடைகிறார்கள் என்பதை காட்டும் விதமாக கோலி சோடா ரைசிங் முதல் மூன்று எபிசோடு முடிந்துள்ளது.

இன்னும் ஏராளமான எபிசோடுகள் உள்ளது பரபர திரைக்கதை, காட்சி அமைப்புகளுடன் ரசிகர்களுக்கு வரும் வாரங்களில் ட்ரீட் காத்திருக்கிறது என எதிர்பார்க்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.