தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  என்ன கொடுமை இது! இந்தியாவில் பட்டினியால் வாடும் மனிதகுலம் அதிகம்; உற்பத்தியாகும் உணவு அதிகம்.. வீணாவதும் அதிகம்!

என்ன கொடுமை இது! இந்தியாவில் பட்டினியால் வாடும் மனிதகுலம் அதிகம்; உற்பத்தியாகும் உணவு அதிகம்.. வீணாவதும் அதிகம்!

Priyadarshini R HT Tamil

Mar 28, 2024, 01:48 PM IST

google News
இந்தியாவில், 4ல்1வர் சத்துக்குறைவால் (Malnutrition)பாதிக்கப்பட்டுள்ளார். உணவு பற்றாக்குறையின் காரணமாக நாளுக்கு 3,000 பேர் இறக்கின்றனர். 23 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். தினமும் 15% பேர் உணவின்றி பட்டினியால் தவிக்கின்றனர்.
இந்தியாவில், 4ல்1வர் சத்துக்குறைவால் (Malnutrition)பாதிக்கப்பட்டுள்ளார். உணவு பற்றாக்குறையின் காரணமாக நாளுக்கு 3,000 பேர் இறக்கின்றனர். 23 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். தினமும் 15% பேர் உணவின்றி பட்டினியால் தவிக்கின்றனர்.

இந்தியாவில், 4ல்1வர் சத்துக்குறைவால் (Malnutrition)பாதிக்கப்பட்டுள்ளார். உணவு பற்றாக்குறையின் காரணமாக நாளுக்கு 3,000 பேர் இறக்கின்றனர். 23 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். தினமும் 15% பேர் உணவின்றி பட்டினியால் தவிக்கின்றனர்.

இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் மிக அதிகமாக இருந்தும்,சமீபத்திய ஐக்கிய நாடுகள் சபை -United Nations Food Waste Index Report-அறிக்கையில்,இந்தியாவில் ஒவ்வொரு வருடமும்,78.2 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுவதாக குறைகூறுகிறது.

எதிர்வரும் International Day of zero waste தினத்தை ஒட்டி,ஐ.நா. சூழல் திட்ட அறிக்கையில்,இந்தியாவில், ஒவ்வொரு வருடமும், தலைக்கு 55 கிலோகிராம்/ஆண்டு உணவு வீணடிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில்,பாகிஸ்தானில், ஆண்டுக்கு,தலைக்கு 130 கிலோ உணவு வீணாகிறது என்றும்,பூட்டானில் ஆண்டுக்கு,தலைக்கு 19 கிலோகிராம் உணவு மட்டுமே வீணாவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2023 உலக Hunger Index Reportன் படி உலக அளவில் 783 மில்லியன் பேர் பட்டினியால் வாடுகையில், இந்தியாவில் மட்டும் 233.9 மில்லியன் பேர் பட்டினியால் வாடுவது புள்ளிவிபரமாக உள்ளது.

மொத்தமுள்ள 125 நாடுகளில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் இந்தியா 111ம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு அமைப்புகளால்(உ.ம்.-UN Habitats)உணவு வீணாவது குறித்தான புள்ளிவிபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் உணவு வீணாவது குறித்தான புள்ளிவிபரங்கள், அனைத்து பகுதிகளிலிருந்தும், பெருவாரியான புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படவில்லை என்பதால்,அதனை ஆய்வாளர்கள் "Medium Confidence" என பட்டியலிட்டு, முழு விபரங்கள் சேகரிக்கப்படாமல் போவதை கவலையுடன் தெரிவித்து,முழு புள்ளிவிபரங்களைசேகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் வீணாகும் உணவு குறித்து நம்பத்தகுந்த புள்ளிவிபரங்கள் இல்லை என்றும்,சென்னையில் மட்டும் உற்பத்தியாகும் தினக்கழிவில் 25 டன், உணவு வீணாவதால் உருவாகிறது என்ற புள்ளிவிபரத்தை சில நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆஸ்திரேலியா,ஜப்பான்,இங்கிலாந்து,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் மட்டும் 2030 ம் ஆண்டு வரை வீணாகும் உணவு குறித்தான தெளிவான புள்ளிவிபரங்களை கையில் வைத்துள்ளன.

2022ம் ஆண்டில் உலகம் முழுக்க 1.05 பில்லியன் டன் உணவு வீணாக்கப்பட்டதாகவும், ஆண்டுக்கு,தலைக்கு 132 கிலோகிராம் உணவு வீணாக்கப்பட்டதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

2022ம் ஆண்டில் உணவு வீணாததில்,60%பங்கு வீடுகளிலிருந்தும்,28% பங்கு உணவு சேவைத்துறை மூலமும்,12% பங்கு உணவு சில்லரை வர்த்தக நிறுவனங்களிடமும் இருந்து வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

2022ல் சராசரியாக ஒவ்வொரு குடும்பத்தை உள்ளடக்கிய உலகிலிருந்து 1 பில்லியன் உணவு பொட்டலங்கள் நாள் ஒன்றுக்கு வீணாகியுள்ளது.!

உலக பொருளாதாரத்தில் உணவு பாழாவதும்,வீணடிக்கப்படுவதன் மதிப்பு ஆண்டுக்கு 1 டிரில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில் கொடுமை என்னவெனில் உலகில் 783 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடும் சூழலில், உலகின் மொத்த மக்கள் மக்கள் தொகையில் 3ல் 1 பங்கினர் போதிய உணவு கிடைக்காத சூழலிலும் வாழ்ந்து வரும் வேளையில் இது நடக்கிறது என்பதே.

உலக அளவில் தினமும் உணவு பெருமளவு வீணாகும் சூழலில், மில்லியன் கணக்கில் நாள் ஒன்றுக்கு மக்கள் பட்டினியால் வாடுகின்றனர் என்பதே வேதனையான உண்மை.

உணவு வீணாவதின் மூலம் ஆண்டுக்கு 8-10% பசுமைக்குடி வாயுக்கள் வெளிவந்து புவிவெப்பமடைதல்+ சுற்றுச்சூழல் பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.

உணவு வீணாவது அனைத்து நாடுகளில் நடந்தாலும்,வெப்பம் அதிகமுள்ள நாடுகளில் உரிய பதப்படுத்துதல் வசதிகள் போதுமான அளவு இல்லாததால்,அங்கு உணவு அதிகம் வீணாகிறது.

இந்தியாவில் உற்பத்தியாகும் உணவில் 40% வீணாவதாகவும்,சமீபத்தியஅறிக்கையில் 89,000 கோடி மதிப்புள்ள உணவு வீணாவதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் பொருட்களில் 16% வரை வீணாவதாக மற்றெரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.

உணவு வீணாவதின் மதிப்பு 1% GDP எனவும் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தியாவில், 4ல்1வர் சத்துக்குறைவால் (Malnutrition)பாதிக்கப்பட்டுள்ளார். உணவு பற்றாக்குறையின் காரணமாக நாளுக்கு 3,000 பேர் இறக்கின்றனர். 23 கோடி பேர் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். தினமும் 15% பேர் உணவின்றி பட்டினியால் தவிக்கின்றனர்.

இத்தகைய சூழலில், உணவை வீணாக்காமல் பட்டினியால் வாடுவோருக்கு அதை கிடைக்கும் வண்ணம் செய்தால் மட்டுமே "மனிதம்" இன்னமும் வாழ்வதாகக் கருதமுடியும்.

உணவை வீணாக்காமல்,பட்டினியால் வாடும் பலருக்கும் அதை கிடைக்கச் செய்வதை நாம் அனைவரும் உறுதிசெய்ய முன்வர வேண்டும்.

"தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் ஜகத்தினை அழித்திடுவோம்" எனும் பாரதியாரின் வாக்கை மனதில் கொண்டு,பட்டினிக் கொடுமை தீர அனைவரும் செயல்பட உறுதி ஏற்போம்.

நன்றி - மருத்துவர் வீ.புகழேந்தி.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி