World Hunger Day : சோறு போட தாய் இருக்கா பட்டினிய பாத்ததில்ல.. பசி எனும் பிணி போக்கிடுவோம்.. உலக பட்டினி தினம் இன்று!
உலக பட்டினி தினம் இன்று (மே 28) அனுசரிக்கப்படுகிறது. உலகளவில் நீண்டகால பட்டினியால் வாடும் மக்கள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
ஒருவர் கூட பசி பட்டினியால் வாட கூடாது என்கிற கருத்தை வலியுறுத்தியும், ஒவ்வொரு ஆண்டும் மே 28ஆம் தேதி உலக பசி தினம் அல்லது உலக பட்டினி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அன்றே மகாகவி பாரதியார், "தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார்" பசி, உணவின் முக்கியத்தை உணர்த்தவே இத்தனை ஆவேசத்துடன் பாரதி சொல்லியிருப்பார்.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில், தற்போது வரை வறுமையால் பசியால் வாடும் பலர் இருந்து கொண்டு தான் உள்ளனர். ஒரு மனிதன் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு 2100 கலோரி உணவு உட்கொள்ளவேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
இதற்கு தீர்வு கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டினி தினம் கொண்டாடப்படுகிறது. மேலும் ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையிலும், பசியால் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உயிர்கொல்லி நோய்களால் ஆண்டுதோறும் இறப்போர் எண்ணிக்கையை காட்டிலும் பட்டினியால் ஏற்படும் மரணங்களே அதிகம் என ஐ.நா அறிக்கை வெளியிட்டுள்ளது. பசி மற்றும் வறுமைக்கு நிலையான தீர்வுகளை கொண்டுவர வேண்டும் என்பதுதான் இத்தினத்தின் நோக்கம்.
கடந்த ஆண்டு உலக பசிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா மற்ற அண்டை நாடுகளுடன் ஒப்பிடுகையில் மோசமான நிலையில் உள்ளது. குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் கூட பசி எந்தளவு உள்ளது என்பதைக் கண்காணிக்கும் கருவியாகும். இது நான்கு முக்கிய காரணிகளைக் கொண்டு கணக்கிடப்படுகிறது.
1.ஊட்டச்சத்துக் குறைபாடு
2.குழந்தை எடை வளர்ச்சி
3.குழந்தை வளர்ச்சி குறைவு
4.குழந்தை இறப்பு விகிதம் ஆகியவற்றை வைத்துத் தான் இந்த குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் கணக்கிடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டிற்கும் 100 புள்ளி என்ற அளவில் கணிக்கப்பட்டு குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் வழங்கப்படும். இதில் ஜீரோ மதிப்பெண் இருந்தால் பசி இல்லா சிறந்த நாடாகக் கருதப்படும். அதேநேரம் 100 இருந்தால் அது மிக மோசமான நிலையில் இருக்கும் நாடாகக் கருதப்படும். இந்தியாவுக்கு கடந்த வருடம் இதில் 29.1 மார்க் கிடைத்து உள்ளது.
தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரிவில் தான் உள்ளது. அண்டை நாடுகள் இந்தியாவைக் காட்டிலும் நல்ல நிலையிலேயே உள்ளது. பொருளாதார குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கை கூட 64ஆவது இடத்தை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் 5க்கும் குறைவான மதிப்பெண்களைப் பெற்று சீனா சிறப்பாக உள்ளது. உலக பட்டினி தினம் இன்று (மே 28) அனுசரிக்கப்படுகிறது. இன்றைய தினம் பசி எனும் பிணி போக்கிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்