Weather Update: வெளுத்து வாங்கும் வெப்பம் மேலும் அதிகரிக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை!
”Weather Update: குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 17 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் மலைப்பகுதியான கொடைக்கானலில் 9.9 டிகிரி செல்ஷிஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.”

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பதிவாகும் வெப்பத்தின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேர வானிலை
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி உள்ளது. குறிப்பாக சேலத்தில் அதிகபட்சமாக 38.7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைந்த வெப்பநிலை அளவை பொறுத்தவரை சமவெளி பகுதியான நாமக்கலில் 17 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையும் மலைப்பகுதியான கொடைக்கானலில் 9.9 டிகிரி செல்ஷிஸ் வெப்பநிலையும் பதிவாகி உள்ளது.