தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Immunity Booster : அடிக்கடி தொற்றுகளால் அவதியா? நோய் எதிர்ப்பு இல்லையா? கவலை வேண்டாம்! வாரத்தில் ஒருநாள் இது போதும்!

Immunity Booster : அடிக்கடி தொற்றுகளால் அவதியா? நோய் எதிர்ப்பு இல்லையா? கவலை வேண்டாம்! வாரத்தில் ஒருநாள் இது போதும்!

Priyadarshini R HT Tamil

Jul 27, 2024, 12:59 PM IST

google News
Immunity Booster : அடிக்கடி தொற்றுகளால் அவதிப்படுகிறீர்களா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லையா? கவலை வேண்டாம்! வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த ஒரு பானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
Immunity Booster : அடிக்கடி தொற்றுகளால் அவதிப்படுகிறீர்களா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லையா? கவலை வேண்டாம்! வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த ஒரு பானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

Immunity Booster : அடிக்கடி தொற்றுகளால் அவதிப்படுகிறீர்களா? உடலில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லையா? கவலை வேண்டாம்! வாரத்தில் ஒருநாள் மட்டும் இந்த ஒரு பானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்

உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு எதிராக உங்கள் உடலை போராட வைக்கிறது. எனினும், சில அன்றாட பழக்கங்கள் இந்த முக்கிய மண்டலத்தை வலுவிழக்கச்செய்கிறது. 

இதனால் நமது உடல் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாகிறது. நாம் அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தில் சமரசம் செய்துகொள்ள செய்கிறது. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆழ்ந்த உறக்கமின்மை

ஆற்றலை குறைவாக உபயோகிக்கும் வாழ்க்கைமுறை

அதிக மனஅழுத்தம்

ஆரோக்கியமற்ற உணவுகள்

அதிகளவில் ஆன்டிபயோடிக்குகள் பயன்படுத்துவது

சர்க்கரை அதிகம் உட்கொள்வது

வைட்டமின் டி குறைபாடு

சுகாதாரமற்ற செயல்கள்

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 3

மஞ்சள் தூள் – 2 சிட்டிகை

தேன் – ஒரு ஸ்பூன்

செய்முறை

நெல்லிக்காயை கழுவிவிட்டு துருவி எடுத்துக்கொள்ளவேண்டும். அதை ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்கவேண்டும். அதனுடன் மிளகு, கிராம்பு, ஏலக்காய், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும். அனைத்தின் சாறும் இறங்கும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் கலந்து தினமும் பருகவேண்டும்.

இந்த பானத்தை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். இது உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும். இந்த பானத்தை அடிக்கடி தொற்றுகளால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒருமுறை செய்ய அறிவுறுத்தவேண்டும்.

மேலும் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வழிகள். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்து, நோய் எதிர்ப்பாற்றல் பெறலாம். குறிப்பாக மழைக்காலத்தில் இதை நீங்கள் கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

நெல்லிக்காயின் நன்மைகள்

மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது

நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.

இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.

இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.

ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடும்போது துவர்ப்பு சுவையாக இருக்கும். அதறக்காக அதிலிருந்து பல்வேறு உணவுகளும் செய்யப்படுகின்றன.

அல்சரை குணப்படுத்துகிறது.

இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், துவையல், சாதம், லேகியம், ரசம், தேநீர் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.

நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி