Amla Soup : எலும்பு சூப் சுவையில், குழந்தைகள் விரும்பும் வகையில் துவர்ப்பின்றி நெல்லிக்காய் சூப்!
Amla Soup : எலும்பு சூப் சுவையில், குழந்தைகள் விரும்பும் வகையில் துவர்ப்பின்றி நெல்லிக்காய் சூப் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – கால் கப்
நெல்லிக்காய் – 3
எண்ணெய் – 2 ஸ்பூன்
சோம்பு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
மிளகு – அரை ஸ்பூன்
கிராம்பு – 1
பட்டை – ஒரு இன்ச்
ஏலக்காய் – 1
இஞ்சி – ஒரு இன்ச் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 3 கொத்து
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் குக்கரில் பருப்பை வேகவைத்து ஏடுத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர், குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், அதில் சீரகம், சோம்பு மற்றும் மிளகு சேர்த்து தாளிக்கவேண்டும்.
பின்னர் கிராம்பு, பட்டை, ஏலக்காய் சேர்க்கவேண்டும். அடுத்து வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு, நெல்லிக்காய் சேர்த்து வதக்கி, வேகவைத்த பருப்பு சேர்த்து குக்கரில் இரண்டு விசில் விடவேண்டும்.
கறிவேப்பிலையை கொத்தாக அதன் ஈர்குடனே சேர்க்கவேண்டும். அதன் மணமும் சூப்க்கு வித்யாசமான சுவை தரும்.
சூப் தயாரானவுடன், அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்க்கவேண்டும். பின்னர், உப்பு சரிபார்த்து சாப்பிட பரிமாறவேண்டும்.
இதில் உள்ள நெல்லிக்காயின் துவர்ப்பு சுவை இருக்காது. அது சூப்புடன் கலந்திருக்கும். நெல்லிக்காய் சாப்பிட வித்யாசமான சுவையைத் தரும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு நெல்லிக்காயை சாப்பிட பிடிக்காது. அவர்களுக்கு இது மிகவும் பிடிக்கும். நெல்லிக்காயின் துவர்ப்பு சுவை இருக்காது. சூப்பின் சுவையும் பருப்பு கலந்து அசத்தலாக இருக்கும்.
எனவே கட்டாயம் இந்த சூப்பை நெல்லிக்காயை சாப்பிட மறுக்கும் உங்கள் குழந்தைகளுக்கு அடிக்கடி செய்துகொடுங்கள். அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலும் கிடைக்கும்.
நெல்லிக்காயின் நன்மைகள்
மற்ற பழங்களைவிட நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது
நரை முடி பிரச்னையை சரிசெய்கிறது.
இதை தினமும் எடுத்துக்கொள்வது செரிமான மண்டலத்தில் செயல்பாட்டை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.
உடலின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது. வாந்தி, பித்த பிரச்னைகள், வறட்சி, அனீமியா ஆகியவற்றை தடுக்கிறது.
இதனுடன் திப்பிலி சேர்த்து சாப்பிடும்போது, பசி மற்றும் செரிமானம் அதிகரிக்கிறது.
ஆஸ்துமா, இருமல், முச்சுக்குழாய் வீக்கம் ஆகியவற்றை தடுக்கிறது. நெல்லிக்காயை நேரடியாக சாப்பிடும்போது துவர்ப்பு சுவையாக இருக்கும். அதறக்காக அதிலிருந்து பல்வேறு உணவுகளும் செய்யப்படுகின்றன.
அல்சரை குணப்படுத்துகிறது.
இத்தனை நன்மைகள் நிறைந்த இந்த நெல்லிக்காயில் மேலும் பல ரெசிபிகளும் செய்யலாம். பழச்சாறு, ஊறுகாய், துவையல், சாதம், லேகியம், ரசம், தேநீர் என பல்வேறு வகையாக நாம் இந்த நெல்லிக்காயை உட்கொள்ளலாம்.
நெல்லிக்கனியை தினமும் எடுப்பவர்களுக்கு நரை, திரை, மூப்பு வருவதில்லையென்றும், அவர்களின் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது என்றும் ஆய்வுகளே உறுதிப்படுத்தியுள்ளன. எனவே உங்கள் உணவில் கட்டாயம் நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளுங்கள். இது உங்கள் உடலுக்கு இத்தனை நன்மைகளைக் கொடுக்கிறது.
டாபிக்ஸ்