தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pepper For Health: பருவமழை தொற்று பாதிப்பை விரட்டுவது முதல்..! மிளகு தரும் ஆரோக்கிய மகத்துவங்கள் இதோ

Pepper for Health: பருவமழை தொற்று பாதிப்பை விரட்டுவது முதல்..! மிளகு தரும் ஆரோக்கிய மகத்துவங்கள் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jul 09, 2024 10:56 AM IST

பருவ மழை காலத்தில் தொற்று பாதிப்பை விரட்டுவது முதல் உடல் ஆரோக்கியத்தை பேனி பாதுகாப்பது வரை மிளகு எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

பருவமழை தொற்று பாதிப்பை விரட்டுவது முதல், மிளகு தரும் ஆரோக்கிய மகத்துவங்கள்
பருவமழை தொற்று பாதிப்பை விரட்டுவது முதல், மிளகு தரும் ஆரோக்கிய மகத்துவங்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

பருவமழை நேரத்தில் உங்கள் உணவில் மிளகு ஏன் கட்டாயம் சேர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.

இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மையை கொண்டதாக மிளகு உள்ளது அதிக அளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி அதிகமாக இதில் இடம்பிடித்திருப்பதால் உடலின் பாதுகாப்பு நுட்பத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு அமைப்பை வலுப்படுத்துகிறது. 

சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கிறது

பருவ மழை காலங்களில் சளி, இருமல் போன்ற சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவது இயல்புதான். சளி, இருமல் பாதிப்பை தடுக்கும் வல்லமை கொண்டதாக மிளகு இருப்பதுடன், அதை நீக்கவும் செய்கிறது

ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது

மிளகுகளில் உள்ள பைப்ரின், வைட்டமின், தாதுக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

பருவமழை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது

இதில் இடம்பெற்றிருக்கும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள், இயற்கையான ஆன்டிபயாடிக்காக செயல்படுவதுடன், பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. குறிப்பாக மழை நேரத்தில் தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது

வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் சுரப்பை அதிகரிக்கிறது. இவை செரிமானத்தை மேம்படுத்துகிறது. நாம் சாப்பிடும் பாலில் மிளகு கலந்து சாப்பிடுவதால் நிம்மதியான உறக்கத்தை பெறலாம். 

மிளகில் ஆன்ட்டி ஆக்ஸிடன்டாக செயல்படும் பைபரின் உள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இது இதய பிரச்னைகள், புற்றுநோய், மூட்டுவலி, ஆஸ்துமா, நீரிழிவு உள்ளிட்ட பல நோய்களை குணப்படுத்துகிறது.

மிளகில் உள்ள பைபரின் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. புரோஸ்டேட் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதிலும் இந்த மிளகுக்கு பங்கு உண்டு.

மிளகுத்தூள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும். இதன் விளைவாக, நீரிழிவு பிரச்னை குறைகிறது. ரத்தத்தில் பீட்டா கரோட்டின் அளவை அதிகரிப்பதில் மிளகுக்கும் பங்கு உண்டு. அடிக்கடி சளி, தும்மல் வருபவர்கள் தினமும் சிறிது மிளகை மென்று சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும். 

கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கலாம். இந்த மசாலா பல்வேறு தோல் பிரச்னைகளையும் குறைக்கும். இது மூட்டுவலி வலியைக் குறைக்கும். மிளகுப் பொடியை வெதுவெதுப்பான நீரில் போட்டு சிறிது குலுக்கி லேசாக பருகினால் உடலில் ஆற்றல் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். வேலை செய்ய ஆற்றல் கிடைக்கும். காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.