சூர்யா 45ல் அதிரடி மாற்றம்! இசைப் புயல் இடத்தை நிரப்ப வந்தது இவரா? என்ன நடந்தது?
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

கங்குவா திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சூர்யா தரப்பிலிருந்து வந்ததோ வேறு பதில்கள்.
சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் இந்த 45வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் திரைப்படத்திற்குப் பின்னரே சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர் கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் நடித்து முடித்த திரைப்படம் விரைவில் வெளியீட்டிற்கு வரவுள்ளது.
சூர்யா 45
இப்போது இந்தத் தகவலை படக்குழு உறுதி செய்தது மட்டுமின்றி, சூர்யா 45 படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு பூஜை, படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.