விஜய்க்கு மூத்தவர்களின் அரசியல் ஆலோசனை தேவை.. கொச்சைப்படுத்திறது மாதிரி இருக்கு.. இயக்குநர் அமீர் விஜய்க்கு அட்வைஸ்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விஜய்க்கு மூத்தவர்களின் அரசியல் ஆலோசனை தேவை.. கொச்சைப்படுத்திறது மாதிரி இருக்கு.. இயக்குநர் அமீர் விஜய்க்கு அட்வைஸ்

விஜய்க்கு மூத்தவர்களின் அரசியல் ஆலோசனை தேவை.. கொச்சைப்படுத்திறது மாதிரி இருக்கு.. இயக்குநர் அமீர் விஜய்க்கு அட்வைஸ்

Dec 08, 2024 07:52 AM IST Marimuthu M
Dec 08, 2024 07:52 AM , IST

 - விஜய்க்கு மூத்தவர்களின் அரசியல் ஆலோசனை தேவை என்றும்; கொச்சைப்படுத்திறது மாதிரி இருக்கு எனவும் இயக்குநர் அமீர் விஜய்க்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். 

விஜய்க்கு மூத்தவர்களின் அரசியல் ஆலோசனை தேவை என்றும் திருமாவை பேசுவது அவரை கொச்சைப்படுத்திறது மாதிரி இருக்கிறது எனவும் இயக்குநர் அமீர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். 

(1 / 6)

விஜய்க்கு மூத்தவர்களின் அரசியல் ஆலோசனை தேவை என்றும் திருமாவை பேசுவது அவரை கொச்சைப்படுத்திறது மாதிரி இருக்கிறது எனவும் இயக்குநர் அமீர் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளார். 

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவருடைய பேச்சினை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டதற்கு, அரசியல் ஆர்வலரும் இயக்குநருமான அமீர் பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார்.அதில் நடிகர் அமீர் பேசியிருப்பதாவது, ‘’நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றவர்களில் நானும் ஒருவர். தமிழராக, தமிழர் அரசியல் களத்துக்கு அவருடைய வருகையை நான் உளமார வரவேற்கிறேன். அதைத்தாண்டி, திரைத்துறையில் உச்ச நடிகராக இருக்கும்போது, அந்த துறையினை விட்டுவிட்டு, அந்த வருமானத்தை விட்டுவிட்டு, மக்கள் பணி செய்வதாக வந்திருப்பதை நாம் ஏற்புடையதாகப் பார்க்கிறோம்.தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் அம்பேத்கரையும், பெரியாரையும் கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததை உச்சி முகர்ந்து பாராட்டுகிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், புகழ் வெளிச்சத்தில் நிறைய இளைஞர்களின் ஆதரவில் இருக்கும் நபர்கள் அரசியலுக்கு வரும்போது, பல லட்சக்கணக்கான கண்கள் விஜயைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது''.

(2 / 6)

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அவருடைய பேச்சினை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்டதற்கு, அரசியல் ஆர்வலரும் இயக்குநருமான அமீர் பேட்டி ஒன்றினை அளித்திருக்கிறார்.அதில் நடிகர் அமீர் பேசியிருப்பதாவது, ‘’நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றவர்களில் நானும் ஒருவர். தமிழராக, தமிழர் அரசியல் களத்துக்கு அவருடைய வருகையை நான் உளமார வரவேற்கிறேன். அதைத்தாண்டி, திரைத்துறையில் உச்ச நடிகராக இருக்கும்போது, அந்த துறையினை விட்டுவிட்டு, அந்த வருமானத்தை விட்டுவிட்டு, மக்கள் பணி செய்வதாக வந்திருப்பதை நாம் ஏற்புடையதாகப் பார்க்கிறோம்.தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் அம்பேத்கரையும், பெரியாரையும் கொள்கைத் தலைவர்களாக அறிவித்ததை உச்சி முகர்ந்து பாராட்டுகிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால், புகழ் வெளிச்சத்தில் நிறைய இளைஞர்களின் ஆதரவில் இருக்கும் நபர்கள் அரசியலுக்கு வரும்போது, பல லட்சக்கணக்கான கண்கள் விஜயைப் பார்த்துக்கொண்டு இருக்கிறது''.(PTI)

‘’இன்னும் அரசியல் மூலம் ஆதாயம் தேட நினைப்பவர்கள், சமூகத்தில் பிளவினை ஏற்படுத்த நினைப்பவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வீழ்த்த பலவாறு முயற்சிசெய்வார்கள். அதன்படி யாரையாவது வந்து தமிழக வெற்றிக் கழகத்தில் நுழைக்க பார்ப்பார்கள். அதில் விஜய் அவர்கள் மிக கவனமாக இருக்கணும். உங்களிடம் இளைஞர்கள் படை, மக்கள் செல்வாக்கு இருக்குது. 234 தொகுதிகளிலும் மக்களிடம் எளிதில்போய் சந்திக்கமுடியும். உங்களுக்குத் தேவை இப்போது என்னவென்றால், அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்தவர்களின் ஆலோசனை. அவர்களை கேட்டுவிட்டு அரசியல் செய்யவேண்டும் என்பது தான் என்னைப்போன்றவர்கள் சொல்ல வேண்டியது. அதை அறிவுரையாக சொல்லாமல், ஆலோசனையாக சொல்கிறேன்.இரண்டாவது முறையாக அவர் பொதுவெளிக்கு வந்திருக்கார். அந்தக் கூட்டத்தை யார் நடத்துகிறார். அதன்பின்புலம் என்ன எல்லாவற்றையும் நடிகர் விஜய் ஆராயணும். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலிலேயே அவர் எல்லோருக்குமான தலைவர் என்பது தானே. அப்படி இருக்கும்போது ஏன் சுருக்குறீங்க''

(3 / 6)

‘’இன்னும் அரசியல் மூலம் ஆதாயம் தேட நினைப்பவர்கள், சமூகத்தில் பிளவினை ஏற்படுத்த நினைப்பவர்கள், ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் வீழ்த்த பலவாறு முயற்சிசெய்வார்கள். அதன்படி யாரையாவது வந்து தமிழக வெற்றிக் கழகத்தில் நுழைக்க பார்ப்பார்கள். அதில் விஜய் அவர்கள் மிக கவனமாக இருக்கணும். உங்களிடம் இளைஞர்கள் படை, மக்கள் செல்வாக்கு இருக்குது. 234 தொகுதிகளிலும் மக்களிடம் எளிதில்போய் சந்திக்கமுடியும். உங்களுக்குத் தேவை இப்போது என்னவென்றால், அரசியல் அனுபவம் வாய்ந்த மூத்தவர்களின் ஆலோசனை. அவர்களை கேட்டுவிட்டு அரசியல் செய்யவேண்டும் என்பது தான் என்னைப்போன்றவர்கள் சொல்ல வேண்டியது. அதை அறிவுரையாக சொல்லாமல், ஆலோசனையாக சொல்கிறேன்.இரண்டாவது முறையாக அவர் பொதுவெளிக்கு வந்திருக்கார். அந்தக் கூட்டத்தை யார் நடத்துகிறார். அதன்பின்புலம் என்ன எல்லாவற்றையும் நடிகர் விஜய் ஆராயணும். எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற நூலிலேயே அவர் எல்லோருக்குமான தலைவர் என்பது தானே. அப்படி இருக்கும்போது ஏன் சுருக்குறீங்க''(PTI)

‘’பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸை அழைத்து இருக்கலாம்தானே. பல்வேறு ஆதிக்க சாதிகள் என்று சொல்லக்கூடியவர்களை எல்லாம் அழைத்திருக்கவேண்டுமா இல்லையா. அப்போது மீண்டும் அண்ணன் திருமாவை மட்டும் அழைப்பது என்பது அவரை சுருக்குவதாகத் தான் நினைக்கிறேன்.எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அண்ணன் திருமா தான் கலந்துகொள்ளணும் என்று சொல்வது வேறுவிதமான அரசியலை உருவாக்கும் இல்லையா. அதனை கவனமாக கையாண்டு இருக்கணும்''.

(4 / 6)

‘’பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸை அழைத்து இருக்கலாம்தானே. பல்வேறு ஆதிக்க சாதிகள் என்று சொல்லக்கூடியவர்களை எல்லாம் அழைத்திருக்கவேண்டுமா இல்லையா. அப்போது மீண்டும் அண்ணன் திருமாவை மட்டும் அழைப்பது என்பது அவரை சுருக்குவதாகத் தான் நினைக்கிறேன்.எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் அண்ணன் திருமா தான் கலந்துகொள்ளணும் என்று சொல்வது வேறுவிதமான அரசியலை உருவாக்கும் இல்லையா. அதனை கவனமாக கையாண்டு இருக்கணும்''.(PTI)

‘’கிட்டத்தட்ட 35 ஆண்டுகாலம் மக்கள் அரசியலிலும், 25 ஆண்டுகாலம் தேர்தல் அரசியலிலும் இருக்கும் அண்ணன் திருமா தான் ஏன் வரவில்லை என்பதை அறிக்கை மூலம் சொல்லிவிட்டார். அவர் சொன்னதற்குப் பின்னால் நாம் ஒரு உள்நோக்கம் கற்பிக்கிறதை அரசியல் முதிர்ச்சியாக நான் பார்க்கவில்லை. ஒரு பொதுத்தளத்தில் நாம் அப்படி பயணிக்கக் கூடாது. கூட்டணி புற அழுத்தத்தால் தான் என சொல்வது, அவரது மக்கள் பணியைக் கொச்சைப்படுத்துவதுபோல் தான் இருக்கிறது. அதை அக்கட்சியைச் சார்ந்த ஆதவ் அர்ஜூனா சொன்னால் பரவாயில்லை. அக்கட்சியைச் சார்ந்தவர். ஆனால், அதனை புதிதாக கட்சியைத் தொடங்கியிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய் சொல்லக் கூடாது''.

(5 / 6)

‘’கிட்டத்தட்ட 35 ஆண்டுகாலம் மக்கள் அரசியலிலும், 25 ஆண்டுகாலம் தேர்தல் அரசியலிலும் இருக்கும் அண்ணன் திருமா தான் ஏன் வரவில்லை என்பதை அறிக்கை மூலம் சொல்லிவிட்டார். அவர் சொன்னதற்குப் பின்னால் நாம் ஒரு உள்நோக்கம் கற்பிக்கிறதை அரசியல் முதிர்ச்சியாக நான் பார்க்கவில்லை. ஒரு பொதுத்தளத்தில் நாம் அப்படி பயணிக்கக் கூடாது. கூட்டணி புற அழுத்தத்தால் தான் என சொல்வது, அவரது மக்கள் பணியைக் கொச்சைப்படுத்துவதுபோல் தான் இருக்கிறது. அதை அக்கட்சியைச் சார்ந்த ஆதவ் அர்ஜூனா சொன்னால் பரவாயில்லை. அக்கட்சியைச் சார்ந்தவர். ஆனால், அதனை புதிதாக கட்சியைத் தொடங்கியிருக்கும் த.வெ.க. தலைவர் விஜய் சொல்லக் கூடாது''.(PTI)

‘’ஏனென்றால், அவர் உங்களுக்கு முன் மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் தலைவர் திருமாவளவன். அதன்பின் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலை நோக்கி நகரும் தலைவராக தொல்.திருமாவளவன் இருக்குறாங்க. அவரை கூட்டணியில் இருந்து வெளியில் கூப்பிடுவது என்பது திமுக கூட்டணியில் இருந்தா, இல்லை தேசிய கூட்டணியில் இருந்தா என்ற வினா எழுகிறது.அதனால் விஜய்யின் பேச்சு, அம்பேத்கரை புத்தக வடிவில் தமிழக இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது. அந்த நிகழ்வில் அண்ணன் திருமாவை பற்றி பேசியது ஏற்புடையதாக எனக்கு இல்லை’’ என இயக்குநரும் அரசியல் ஆர்வலருமான அமீர் பேசியிருக்கிறார்.

(6 / 6)

‘’ஏனென்றால், அவர் உங்களுக்கு முன் மக்கள் பணியாற்றிக்கொண்டிருக்கும் தலைவர் திருமாவளவன். அதன்பின் மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலை நோக்கி நகரும் தலைவராக தொல்.திருமாவளவன் இருக்குறாங்க. அவரை கூட்டணியில் இருந்து வெளியில் கூப்பிடுவது என்பது திமுக கூட்டணியில் இருந்தா, இல்லை தேசிய கூட்டணியில் இருந்தா என்ற வினா எழுகிறது.அதனால் விஜய்யின் பேச்சு, அம்பேத்கரை புத்தக வடிவில் தமிழக இளைஞர்களிடம் கொண்டு சேர்த்தது பாராட்டுக்குரியது. அந்த நிகழ்வில் அண்ணன் திருமாவை பற்றி பேசியது ஏற்புடையதாக எனக்கு இல்லை’’ என இயக்குநரும் அரசியல் ஆர்வலருமான அமீர் பேசியிருக்கிறார்.

மற்ற கேலரிக்கள்