தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும்!

Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும்!

Priyadarshini R HT Tamil

Sep 06, 2024, 02:39 PM IST

google News
Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும். உங்கள் வீட்டில் தினமும் பஞ்சு போன்ற இட்லி தினமும் சாப்பிடலாம்.
Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும். உங்கள் வீட்டில் தினமும் பஞ்சு போன்ற இட்லி தினமும் சாப்பிடலாம்.

Idly : இலவம் பஞ்சு போன்ற மிருதுவான இட்லி சாப்பிடவேண்டுமா? இந்த ஒரு பொருளை மட்டும் சேருங்க போதும். உங்கள் வீட்டில் தினமும் பஞ்சு போன்ற இட்லி தினமும் சாப்பிடலாம்.

இட்லி

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான காலை உணவு இட்லி. இலங்கையிலும் இது பிரபலம். அரிசி, உளுந்து சேர்த்து அரைத்த மாவை புளிக்கவைத்து இட்லி தயாரிக்கப்படுகிறது. வெள்ளை உளுந்து அல்லது கருப்பு உளுந்து இரண்டும் இட்லி தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை உளுந்தை அப்படியேவும், கருப்பு உளுந்தென்றால் அதன் தோலை கொஞ்சம் நீக்கிவிட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். புளிக்க வைக்கும்போதும் அதில் உள்ள மாவுச்சத்துக்கள் மற்றும் கஞ்சிப்பதம் நீக்கப்படுகிறது. இதனால் உடல் இதை எளிதாக செரித்துவிடுகிறது. இட்லியில் ரவை, ஜவ்வரிசி, சம்ம ராவை, சேமியா ஆகியவற்றிலும் தயாரிக்கப்படுகிறது. கன்னட மொழியில் வரலாற்று புத்தங்களில் இட்லி வெறும் கருப்பு உளுந்தை மட்டுமே வைத்து தயாரிக்கப்பட்டதாக குறிப்புகள் உள்ளது. கருப்பு உளுந்தை மேரில் ஊறவைத்து அரைத்து இட்லி தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் தயிரின் தண்ணீர் மற்றும் மசாலாக்கள் சேர்த்து இட்லி தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இன்று நாம் சாப்பிடும் நவீன இட்லி நமக்கு இந்தோனேசியாவில் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் அங்குதான் புளிக்க வைத்து உணவு தயாரிக்கும் முறை பாராம்பரியமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் இந்து அரசர்கள் அமர்த்திய சமையல் கலைஞர்கள் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம். அங்கிருந்து இந்த உணவு இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தோனேசியாவில் கெட்லி என்ற உணவு இட்லிபோலேவே இருக்கும் என்று வரலாறு கூறுகிறது. மேலும் புளிக்கவைக்கும் செயல்பாடு இயற்கையில் நடக்கும் ஒன்று என்பதால் அது இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. இங்கு அனைத்து கலாச்சாரங்களிலும் புளிக்க வைக்கும் பழக்கம் உள்ளது.

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி – 3 டம்ளர்

பச்சரிசி – 1 டம்ளர்

வெள்ளை உருட்டு உளுந்து – முக்கால் டம்ளர்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

சாதம் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசியை ஒரு கைப்பிடி உப்பு சேர்த்து அலசிவிட்டு 5 மணி நேரங்கள் நன்றாக ஊறவைக்கவேண்டும். அரிசி ஊறவைத்து 3 மணி நேரம் கழித்து உளுந்தை ஊறவைக்கவேண்டும். உளுந்து 2 மணி நேரம் ஊறினால் போதும். உளுந்துடன் வெந்தயத்தையும் சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

ஊறிய அனைத்தையும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சேர்த்து தனித்தனியாக அரைத்துக்கொள்ளவேண்டும். அரிசியை அரைக்கும்போது கடைசியாக ஒரு கப் சாதத்தை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த சாதத்தை சேர்ப்பதால்தான் இட்லி இலவம் பஞ்சுபோல் மிருதுவாக இருக்கும். பின்னர் உளுந்தை அரைத்து சேர்த்து உப்பும் சிறிதளவு சேர்த்து மாவை நன்றாக கரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இதை 8 மணி நேரம் கட்டாயம் புளிக்கவிடவேண்டும். அதை மிருதுவாக கரைத்துவிட்டு, இட்லி தட்டில் இட்லிகளை ஊற்றவேண்டும்.

இட்லி பாத்திரத்தில் தண்ணீரை சேர்த்து அது கொதிப்பின் ஊற்றிய மாவுத்தட்டை வைத்து இட்லிகளை வேகவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இப்படி செய்தால் மதுரை மல்லிப்பூபோன்ற மிருதுவான இட்லி தயாராகிவிடும்.

இந்த இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார், அசைவ குழம்புகள் மற்றும் குருமாக்கள் ஏற்ற தேர்வாக உள்ளது. இந்தியாவில் பல்வேறு வகை சட்னிகள் உள்ளன. அதில் எதை வைத்தும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். காலையில் இட்லியுடன் ஒரு வடையும் சேர்த்து பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும். பொதுவாக தென்னிந்தியாவில் இட்லி, வடை பொங்கல், சட்னி, சாம்பார், ஒரு ஸ்வீட், ஊத்தப்பம் அல்லது பூரியுடன் காலை உணவு மினி டிஃபனாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி