Carrot : உங்க வீட்டு குட்டீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு கலர் புல்லான கேரட் நிலக்கடலை சாதம்.. ஈசியா செய்யலாம் பாருங்க!-carrot for your home cuties lunch box you can make carrot peanut rice with colorful grass check it out - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Carrot : உங்க வீட்டு குட்டீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு கலர் புல்லான கேரட் நிலக்கடலை சாதம்.. ஈசியா செய்யலாம் பாருங்க!

Carrot : உங்க வீட்டு குட்டீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு கலர் புல்லான கேரட் நிலக்கடலை சாதம்.. ஈசியா செய்யலாம் பாருங்க!

Pandeeswari Gurusamy HT Tamil
Sep 05, 2024 05:31 PM IST

Carrot : கேரட் நிலக்கடலை சாதம் செய்து கொடுத்து பாருங்க அடிக்கடி செய்து தர சொல்லி ஆசையா கேட்பாங்க.. கலர்புல்லாக இருப்பதால் விரும்பி சாப்பிடுவாங்க. அது மட்டுமில்லை. இது ருசியானது என்பதை தாண்டி கேரட் மற்றும் நிலக்கடலை குழந்தைகளுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

Carrot : உங்க வீட்டு குட்டீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு கலர் புல்லான கேரட் நிலக்கடலை சாதம்.. ஈசியா செய்யலாம் பாருங்க!
Carrot : உங்க வீட்டு குட்டீஸ் லஞ்ச் பாக்ஸ்க்கு கலர் புல்லான கேரட் நிலக்கடலை சாதம்.. ஈசியா செய்யலாம் பாருங்க!

கேரட் நிலக்கடலை சாதம் செய்ய தேவையான பொருட்கள்

துருவிய கேரட் - 2

நிலக்கடலை - 3 மேசைக்கரண்டி

தேங்காய் எண்ணெய் /நெய் - 3 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்தம்பருப்பு- 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை

காய்ந்த மிளகாய் - 2

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவும்

செய்முறை

நாம் எப்போதும் போல் வீட்டில் சாதத்தை வடித்து எடுத்து கொள்ள வேண்டும். இப்போது அடுப்பில் ஒரு கடாயை சூடாக்க வேண்டும். அதில் 3 ஸ்பூன் நெய் விடவும். நெய் சூடானதும் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். சோம்பு பொரிய ஆரம்பிக்கும் போது கடுகு சேர்க்க வேண்டும். கடுகு பொரிந்து வரும் போதும் உளுந்து நிலக்கடலையை சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். 

அதில் ஒரு வெங்காயம் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். வெங்காயம் நிறம் மாற ஆரம்பிக்கும் போது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். இஞ்சு பூண்டு பச்சை வாடை போன பிறகு துருவிய கேரட்டை சேர்த்து லேசாக வதக்க வேண்டும். பின்னர் தேவையான அளவு உப்பை சேர்த்து கலந்து விட வேண்டும். ஏற்கனவே வேக வைத்து எடுத்த சூடான சாதத்தை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக மல்லி இலை தூவி இறக்கினால் ருசியான கேரட் நிலக்கடலை சாதம் ரெடி. இது ருசியானது மட்டும் அல்ல சத்தானதும் ஆகும்.

குறிப்பு : விருப்பம் உடையவர்கள் இதில் தேங்காய் துருவலை சேர்த்து கொள்ளலாம். நெய்க்கு பதிலாக தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம்.

தினமும் கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

தினமும் கேரட் சாப்பிட்டால் கண் பிரச்சனைகள் குறையும். நோயெதிர்ப்பு அமைப்பு வலுவடைகிறது. உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் கேரட்டை சாப்பிட்டு வந்தால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கும் இது ஒரு நல்ல உணவாகும். கேரட் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. எடை இழப்புக்கு இது சிறந்த உணவு. கேரட்டை சமைக்காமல் நேரடியாக சாப்பிடுவதால் அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.

கேரட்டில் உள்ள நார்ச்சத்து விரைவில் நிறைவான உணர்வைத் தருகிறது. அதனால் தான் மற்ற உணவுகளை சாப்பிட விரும்பவில்லை. எனவே மற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும் கேரட் சாப்பிட்டால் நொறுக்குத் தீனி சாப்பிடும் ஆசை குறைகிறது. ஆரோக்கியமான உணவை உண்ணும் ஆசை அதிகரிக்கும்.

அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.