Box office Today: வாழை கொடுத்த உப்புச்சாறு; வெந்து போன கொட்டுக்காளி! - வசூலில் தர்ம அடி வாங்கிய சிவகார்த்திகேயன்!-box office today mari selvaraj vaazhai soori kottukkaali box office collection report on september 4 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Box Office Today: வாழை கொடுத்த உப்புச்சாறு; வெந்து போன கொட்டுக்காளி! - வசூலில் தர்ம அடி வாங்கிய சிவகார்த்திகேயன்!

Box office Today: வாழை கொடுத்த உப்புச்சாறு; வெந்து போன கொட்டுக்காளி! - வசூலில் தர்ம அடி வாங்கிய சிவகார்த்திகேயன்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 04, 2024 02:58 PM IST

Box office Today: மாரிசெல்வராஜின் இயக்கத்தில் வெளியான வாழை மற்றும் சூரியின் கொட்டுக்காளி படங்களின் வசூல் சார்ந்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Box office Today: வாட்டி கொடுத்த உப்புச்சாறு; வெந்து போன கொட்டுக்காளி! - வசூலில் தர்ம அடி வாங்கிய சிவகார்த்திகேயன்!
Box office Today: வாட்டி கொடுத்த உப்புச்சாறு; வெந்து போன கொட்டுக்காளி! - வசூலில் தர்ம அடி வாங்கிய சிவகார்த்திகேயன்!
வாழை
வாழை

Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த வாழைத்திரைப்படம், இரண்டாவது நாளில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், முதல் வார முடிவிலேயே 8.8கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் படம் வெளியான 12 வது நாளான நேற்றைய தினம், வாழைத்திரைப்படம் 1.18 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் வாழைத்திரைப்படம் மொத்தமாக இந்தியாவில் 28 கோடிக்கு மேலேயும், உலகளவில் 32 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறது.

கொட்டுக்காளி திரைப்படம்

இதற்கு போட்டியாக களமிறங்கிய கொட்டுக்காளி திரைப்படம் படம் வெளியான 12 நாளான நேற்று வெறும் 0.01 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆக, மொத்தமாக பார்க்கும் போது இந்தியாவில் இதுவரை கொட்டுக்காளி திரைப்படம் 1.61 கோடி ரூபாயும், உலகளவில் 1.61 கோடியும் மட்டுமே வசூல் செய்திருக்கிறது

கொட்டுக்காளி
கொட்டுக்காளி

முன்னதாக, சூரியின் நடிப்பில், வினோத்ராஜ் இயக்கத்தில் வெளியான கொட்டுக்காளி திரைப்படம் வெளியான அன்றைய தினம் 0.42 கோடி ரூபாயும், இரண்டாவது நாளான நேற்று 0.33 கோடியும் ரூபாய் மட்டுமே வசூல் செய்தது. படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் இந்தப்படம் வசூலில் சரிவை சந்தித்தது. பி.எஸ்.வினோத் இயக்கிய இந்தப்படத்தை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். 

கொட்டுக்காளி தோல்வியடைந்தது ஏன்?

கொட்டுக்காளி தோல்வி குறித்து இயக்குநர் அமீர் பேசும்போது, “சமீபத்தில் வெளியான ‘வாழை’ திரைப்படம் மெயின்ஸ்ட்ரீம் மீடியாவிற்கு பக்கத்தில் இருக்கிறது. அதுதான் அந்த படத்தின் வெற்றி. அதேசமயம் பக்கத்தில் இருக்கின்ற ‘கொட்டுக்காளி’ படம் திரைப்பட விழாக்களுக்கான சினிமா. அதனால் அது நல்ல படம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அப்படி திரைப்பட விழாக்களில் விருதுகளை பெறுவதற்காக எடுக்கப்பட்ட ஒரு படத்தை திரையரங்குகளில் மற்ற படங்களுடன் கொண்டு வந்து போட்டி போட வைப்பதே ஒரு வன்முறைதான்.

அது எனக்கு ஏற்புடையது அல்ல. அப்படி செய்யவே கூடாது. விருதுக்கான படங்களை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியே வரும் பலரும் படத்தைப் பற்றி கடுமையாக விமர்சிக்கிறார்கள். வெட்டுவேன் குத்துவேன் என்று கூட பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதற்கு காரணம், அவர்கள் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு உங்கள் படத்தை பார்ப்பது தான். அதனால் அவர்களுக்கு அந்த உரிமை இருப்பதாக நினைக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை நான் கொட்டுக்காளி படத்தை தயாரித்திருந்தால், அதை திரையரங்குகளுக்கே கொண்டு வந்திருக்க மாட்டேன். இதை வணிக நோக்கத்தில் கொண்டு வந்து திணிக்க வேண்டிய அவசியம் இல்லை என நான் நினைக்கிறேன். சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற படங்களுக்கு அந்த கண்ணியத்தை அப்படியே கொடுத்து விட வேண்டும்.

அந்த படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகராக இருப்பதால் அவரது செல்வாக்கை பயன்படுத்தி, அதை ஒரு பிரபல ஓடிடி தளத்திற்கு விற்றிருக்கலாம். அதிலேயே போட்ட முதலீட்டை எடுத்துவிட்டு பிரச்சினையை முடித்து இருந்தால் தேவைப்படுபவர்கள் ஓடிடி தளத்தில் அந்த படத்தை பார்த்துக் கொள்வார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.