தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  பார்த்தாலே நா ஊறும் பருப்பு போளி! யார் வேணாலும் செய்யலாம் ஈசியா! பக்கா ரெசிபி!

பார்த்தாலே நா ஊறும் பருப்பு போளி! யார் வேணாலும் செய்யலாம் ஈசியா! பக்கா ரெசிபி!

Suguna Devi P HT Tamil

Dec 12, 2024, 09:59 AM IST

google News
நாம் உண்ணும் இனிப்பு உணவுகளில் பிரபலமான ஒரு உணவு தான் பருப்பு போளி, இது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் வெகுவாக உண்ணப்படும் உணவுகள் ஆகும். இந்த பருப்பு போளியை எளிமையாக உங்களது வீட்டிலேயே செய்யலாம். அதன் எளிய செயல்முறையை இங்கு காண்போம். (Divya's Nalabagam)
நாம் உண்ணும் இனிப்பு உணவுகளில் பிரபலமான ஒரு உணவு தான் பருப்பு போளி, இது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் வெகுவாக உண்ணப்படும் உணவுகள் ஆகும். இந்த பருப்பு போளியை எளிமையாக உங்களது வீட்டிலேயே செய்யலாம். அதன் எளிய செயல்முறையை இங்கு காண்போம்.

நாம் உண்ணும் இனிப்பு உணவுகளில் பிரபலமான ஒரு உணவு தான் பருப்பு போளி, இது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் வெகுவாக உண்ணப்படும் உணவுகள் ஆகும். இந்த பருப்பு போளியை எளிமையாக உங்களது வீட்டிலேயே செய்யலாம். அதன் எளிய செயல்முறையை இங்கு காண்போம்.

இந்தியாவில் உள்ள உணவு வகைகளில் இனிப்பு உணவுகளுக்கு என தனி இடம் உண்டு. உலக அளவிலும் இந்திய இனிப்பு உணவுகளுக்கு மிகுந்த வரவேற்பு உண்டு. நமது வீடுகளிலும் கொண்டாட்டங்களின் போதும் இனிப்பு உணவுகள் செய்து சாப்பிடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. நாம் உண்ணும் இனிப்பு உணவுகளில் பிரபலமான ஒரு உணவு தான் பருப்பு போளி, இது தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களில் வெகுவாக உண்ணப்படும் உணவுகள் ஆகும். இந்த பருப்பு போளியை எளிமையாக உங்களது வீட்டிலேயே செய்யலாம். அதன் எளிய செயல்முறையை இங்கு காண்போம். 

தேவையான பொருட்கள்

2 கப் மைதா 

1 கப் கடலை பருப்பு 

கால் டீஸ்பூன் உப்பு

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் 

தேவையான அளவு தண்ணீர்

3 டீஸ்பூன் எண்ணெய்

அரை கப் பொடித்த வெல்லம்

அரை டீஸ்பூன் ஏலக்காய் தூள் 

5 டீஸ்பூன் நெய் 

செய்முறை

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, சிறிது மஞ்சள் தூள் மற்றும் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கலக்க வேண்டும். பின்னர் இதில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து விட வேண்டும். இதனை சப்பாத்தி மாவு பதத்தை விட மென்மையாக பிசைந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் பிசைந்த மாவில் சிறிதளவு எண்ணெய் தடவி 1 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பிறகு கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து எடுக்க வேண்டும். குக்கரில் ஊறவைத்த கடலைப்பருப்புடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 6 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும். பருப்பை நன்கு வெந்த பின்னர் அடுப்பை அணைத்து, பருப்பை நன்கு மசித்து தனியாக வைக்க வேண்டும். 

 பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் வேகவைத்து மசித்த பருப்பு மற்றும் வெல்லம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்த பருப்பு கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். பருப்பு சிறிது கெட்டியான பிறகு, சிறிது ஏலக்காய் தூள் மற்றும் நெய் சேர்த்து கலக்க வேண்டும். பருப்பு நன்கு கெட்டியான பிறகு, அடுப்பை அணைத்து, கலவையை முழுமையாக ஆற விட வேண்டும். இந்த பருப்பு ஆறிய பிறகு, சிறிது சிறிதாக எடுத்து உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும். பிறகு முன்பு செய்த மாவுக் கலவையை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ளவும்.  பிறகு இரண்டு பட்டர் பேப்பர் அல்லது இலையை எடுத்து அதில் ஒரு பக்கம் நெய் தடவவும். மாவுக் கலவையை எடுத்து, நடுவில் குழியாக இருக்கும்படி அழுத்தி பூரணத்தை வைத்து மூடி உருண்டை பிடித்துக் கொள்ளவும். இரண்டு பட்டர் பேப்பர்களுக்கு இடையில் மாவு உருண்டையை வைத்து கையால் அழுத்தி சப்பாத்தி போல் செய்யவும். பிறகு நெய் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் சமமாக வேகவைத்தால் மிகவும் சுவையான பருப்பு போளி தயார். நீங்களும் உங்கள் வீட்டில் செய்து பார்த்து அசத்துங்கள். 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி