கூலி வேலை.. உப்பு தண்ணீர்.. வறுமையின் கோரம்.. விஷ்ணுவிற்கு கீ - போர்டு கொடுத்த டி இமான்
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 - ல் கலந்து கொண்டிருக்கும் விஷ்ணுவிற்கு டி இமான் பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 - ல் கலந்து கொண்டிருக்கும் விஷ்ணுவிற்கு டி இமான் பரிசு ஒன்றை கொடுத்து இருக்கிறார்.
விஜய் டிவி சூப்பர் சிங்கர்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவையில்லை. சிறந்த மழலை பாடகரை தேடும் முயற்சியாக அமையும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பின்னணி கொண்ட குழந்தைகள் தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள். அதில் நன்றாக பாடும் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கிடையில் போட்டி நடத்தப்படும்.
அந்தப்போட்டியில் வெல்லும் போட்டியாளருக்கு, பரிசுத்தொகை வழங்கப்படும். கூடவே இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பிரபலம் கலைநிகழ்ச்சிகள், திரைத்துறையில் பாடும் வாய்ப்புகள் உள்ளிட்டவற்றையும் வழங்கும் என்பதால், இந்த நிகழ்ச்சியில் பாடும் திறமை கொண்ட தங்களுடைய குழந்தைகளை பாட வைக்க பெற்றோர் போட்டி போடுவர். அந்தப்போட்டியும், குழந்தைகளின் பாடும் திறமையும்தான் இந்த நிகழ்ச்சியை அடுத்தடுத்த சீசன்களுக்கு அழைத்து சென்றது.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் 10 வது சீசன் அண்மையில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் விஷ்ணு தற்போது கவனம் பெற்று வருகிறார்.
அவர் நிகழ்ச்சியின் முதல் நாளில் பாடிய “அத்தை மக உண்ண நினைச்சு அழகு கவித எழுதி வெச்சேன்….. அத்தனையும் மறந்துப்புட்டேன் அடியே உன்ன பாத்ததுமே…” என்ற பாடல் அவரது குரலில் அவ்வளவு இனிமையாக இருந்ததாக பார்வையாளர்கள் கூறினர்.
யார் இந்த விஷ்ணு?
விஷ்ணு குருகுளாம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து இந்த போட்டியின் ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வாகி இப்பொது போட்டியாளர்களில் ஒருவராக பாடிக்கொண்டிருக்கிறார்.
பன்னிரண்டு வயது நிரம்பிய இவரது அம்மா, அப்பா இருவரும் கூலி வேலை செய்கின்றனர். அவர்களுக்கு தினக்கூலி வெறும் இருநூறு ரூபாய்.
விஷ்ணு பாடிய நிகழ்ச்சியை கூட அவனால் பார்க்க இயலவில்லை.
என்பது தெரியவந்தது. ஏனென்று கேட்டால் 'எங்க வீட்ல டிவி எல்லாம் கிடையாது அண்ணா' என்றான்.
விஷ்ணுவின் பாடும் திறனை பாராட்டி இசையமைப்பாளர் மற்றும் நிகழ்ச்சியின் நடுவர்களின் ஒருவரான D. இமான் அவனுக்கு கீபோர்டு பரிசாக அளித்தார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மாகாபா ஆனந்த்,.அவனுக்கு டிவியையும் மற்றும் பிரியங்கா அவர்களுக்கு காஸ் அடுப்பையும் பரிசாக கொடுத்தனர். விஷ்ணுவின் பள்ளி படிப்புக்கு தேவையான உதவிகளை பாடகர் மனோவும் சித்ராவும் அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
விஷ்ணு தனக்காக மட்டும் இந்த போட்டியில் பங்குபெறவில்லை தன்னுடைய கிராமத்துக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற ஆசையில் மேடை ஏறியுள்ளார் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர்
அந்த ஊர் மக்களிடம் சூப்பர் சிங்கர் குழு என்னதான் அங்கு தேவை என்று விசாரிக்கப்போனது.
அப்போது, அந்த ஊரில் தண்ணீர் கிடையாது. கிடைக்கும் தண்ணீர் உப்பு நீர். அதை குடித்ததால் பலருக்கு பலவிதமான உடல் நோய்கள் வந்ததும், குடி தண்ணீருக்கு பல கிலோ மீட்டர் நடந்து சென்று எடுத்துவரவேண்டும் என்பதும் தெரிய வந்தது.
அந்த ஊர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நல்ல உள்ளங்கள் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்