Mushroom Green Masala: மண மணக்கும் மஷ்ரூம் க்ரீன் மசாலா ரெசிபி! எல்லாத்துக்கும் இது தான் பெஸ்ட்!
Sep 25, 2024, 10:19 AM IST
Mushroom Green Masala: அசைவ உணவுகள் சாப்பிடாதவர்கள், அசைவ உணவுகள் சாப்பிட முடியாத சமயங்களில் அதற்கு மாற்றாக காளான் உணவுகள் உள்ளன.
நாம் எப்போதும் வீடுகளில் சமைக்கும் ரெகுலர் உணவுகள் சலிப்பை தரும் வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த உணவுகளில் இருந்த மாற்றாக வாரத்தில் சில நாட்கள் அசைவ உணவுகளை சமைக்கலாம். இது போன்ற புரட்டாசி மாதத்தில் சில வீடுகளில் அசைவ உணவுகள் சமைப்பதற்கும் தடை உள்ளன. இந்த சூழ்நிலையில் அசைவ உணவவுகளுக்கு மாற்றாக பல உணவுகள் உள்ளன. அசைவ உணவுகள் சாப்பிடாதவர்கள், அசைவ உணவுகள் சாப்பிட முடியாத சமயங்களில் அதற்கு மாற்றாக காளான் உணவுகள் உள்ளன.
காளான், மீல்மேக்கர் போன்றவை அசைவ உணவுகளின் சுவையை ஒத்த சுவையை கொண்டுள்ளன. எனவே நாங்கள் சுவையான மஷ்ரூம் க்ரீன் மசாலா ரெஸிபியை கொண்டு வந்துள்ளோம். வீட்டில் சாதம், சப்பாத்தி, தோசை என அனைத்து உணவுகளுக்கு சிறந்த சைட் டிஷாக இருக்கும். இதனை செய்யும் எளிய முறைகளை காண இதை முழுமையாக படிக்கவும்.
தேவையான பொருட்கள்
400 கிராம் மஷ்ரூம்
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
ஒரு கைப்பிடி புதினா
ஒரு கைப்பிடி கொத்த மல்லி
சிறிதளவு கறிவேப்பிலை
4 பச்சை மிளகாய்
5 பல் பூண்டு
4 ஏலக்காய் துண்டுகள்
சிறிதளவு இஞ்சி
சிறிதளவு கரம் மசாலா
பிரியாணி இலை
சிறிதளவு கிராம்பு
சிறிதளவு பட்டை
50 கிராம் மிளகு
50 கிராம் சீரகம்
50 கிராம் சோம்பு
3 டம்ளர் தண்ணீர்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
மஷ்ரூம் மசாலா தயாரித்தல்
முதலில் இகற்கு தேவையான மசாலாவை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், ஆகியவற்றை தூசி நீக்கி கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் பூண்டு, இஞ்சி ஆகியவரை தோல் நீக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸியில் இவை அனைத்தையும் போட்டு, அதன் உடன் பிரியாணி இலை, கிராம்பு, பட்டை, பச்சை மிளகாய், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மஷ்ரூமை போட்டு சிறிது நேரம் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் மேலும் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளியை பொடி பொடியாக நறுக்கி போட வேண்டும். இது நன்கு வதங்கியதும் அரைத்து வைத்திருந்த மசலாவை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர் அதனை மூடி வைத்து மூட வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து அதனை திறந்து அதனுள் வதக்கி வைத்திருந்த மஷ்ரூமை போட வேண்டும். இதனை 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேக விட வேண்டும். பின்னர் இறுதியாக ஒரு பச்சை மிளகாய், கரம் மசாலா போட்டு இறக்க வேண்டும். சூடாக பரிமாறினால் சுவையாக இருக்கும்.
சூடான சோறு, சப்பாத்தி, தோசை, பரோட்டா என எல்லா வற்றிற்கும் சிறந்த உணவாக இது இருக்கும். புரட்டாசி மாத்திலும் சுவையான அசைவ உணவு சாப்பிட்ட திருப்தி கிடைக்க வேண்டுமா. உடனே இந்த மஷ்ரூம் க்ரீன் மசாலா செஞ்சு சாப்பிடுங்க.
டாபிக்ஸ்