Paneer Butter Masala: ஸ்பெஷல் பன்னீர் பட்டர் மசாலா செய்வது எப்படி? ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் அசத்தலாம்!
Paneer Butter Masala: வட இந்திய உணவு வகைகள் கிட்டத்தட்ட தமிழ்நாட்டு உணவு வகைகளுடன் ஒத்த சுவையவை கொண்டுள்ளன. ஒரு சில உணவுகள் முற்றிலும் மாறுபட்டும் இருக்கலாம். அதில் அனைவரும் விரும்பும் ஒரு உணவு தான் பன்னீர் பட்டர் மசாலா. பெரும்பாலான வட இந்திய ஹோட்டல்களில் இது முக்கிய உணவாக இருந்து வருகிறது.
வட இந்திய உணவு வகைகள் கிட்டத்தட்ட தமிழநாட்டு உணவு வகைகளுடன் ஒத்த சுவையவை கொண்டுள்ளன. ஒரு சில உணவுகள் முற்றிலும் மாறுபட்டும் இருக்கலாம். அதில் அனைவரும் விரும்பும் ஒரு உணவு தான் பன்னீர் பட்டர் மசாலா. பெரும்பாலான வட இந்திய ஹோட்டல்களில் இது முக்கிய உணவாக இருந்து வருகிறது. இந்த பன்னீர் பட்டர் மசாலாவை வைத்து ரொட்டி, சப்பாத்தி, பரோட்டாவிற்கு வைத்துக் சாப்பிடலாம் .
நார்த் இந்தியா ஸ்டைலில் பன்னீர் பட்டர் மசாலா செய்யும் சிம்பிள் முறைகளை இங்கு பார்க்க உள்ளோம். வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் போல செய்து தனது உங்களது வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
250 கிராம் பன்னீர், ஒரு பெரிய வெங்காயம், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, இரண்டு தக்காளி, இரண்டு டீஸ்பூன் மல்லி தூள், 2 டீஸ்பூன் மிளகாய் தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள், 1 டீஸ்பூன் சீரக தூள், 10 முந்திரி பருப்புகள், கஸ்தூரி மேத்தி சிறிதளவு, சிறிதளவு கொத்தமல்லி இலை ஆகியவைகளை எடுத்து கொள்ள வேண்டும். 200 கிராம் வெண்ணெய், தேவையான அளவு எண்ணெய், 2 கிராம்பு துண்டுகள், ஒரு பட்டை துண்டுகள், சிறிதளவு ஏலக்காய், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக் கொள்ளவும்.
செய்முறை
முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, அதனை ஒரு கடாயில் சிறிதளவு வெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வதக்கி எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், இரண்டு ஏலக்காய் துண்டுகளை போட்டு நன்கு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கிய பின் நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். இதில் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மல்லி தூள், முந்திரி பருப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். இதனை 2 முதல் 3 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் வதக்க வேண்டும். பின் அதனை நன்கு ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மசாலா தயாரித்தல்
பன்னீர் மசாவிற்கு தேவையான மசாலவை தயார் செய்ய வேண்டும். அதற்கு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கிராம்பு, லவங்க பட்டை, பிரியாணி இலை ஆகியவற்றை போட்டு வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்டை போட்டு வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இறுதியாக அரைத்து வைத்து இருந்த தக்காளி வெங்காய கரைசலை போட்டு வதக்க வேண்டும்.
இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கிரேவி பதத்தில் இருக்கும் போது பன்னீர் மற்றும் கஸ்தூரி மேத்தியை சேர்த்து, மிதமான தீயில் 4 நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் சுவையான பன்னீர் பட்டர் மசாலா தயார்.
டாபிக்ஸ்