Cauliflower Pulav: செம ஈசியான லஞ்ச் பாக்ஸ் ரெசிபி! காலிபிளவர் புலாவ் செய்வது எப்படி?
Oct 03, 2024, 01:41 PM IST
Cauliflower Pulav: புலாவ் காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் சாப்பிடலாம். இதன் காரணமாக புலாவை செய்வது எல்லா நேரங்களுக்கும் உகந்த உணவாக இருக்கும். மேலும் இந்த புலாவில் பல வித வகைகள் உள்ளன.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்தே புலாவ் உணவு இந்தியாவில் வழக்கத்தில் உள்ளது. இந்த புலாவ் உணவில் இருந்தே பிரியாணி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் புலாவ் காலை, மதியம், இரவு என அனைத்து வேளைகளிலும் சாப்பிடலாம். இதன் காரணமாக புலாவை செய்வது எல்லா நேரங்களுக்கும் உகந்த உணவாக இருக்கும். மேலும் இந்த புலாவில் பல வித வகைகள் உள்ளன. பல காய்கறிகளை முதன்மையாக கொண்டு புலாவ் செய்யப்படுகிறது. இப்பது காலிபிளவர் வைத்து புலாவ் செய்யும் எளிமையான முறையை இங்கு காண்போம்.
தேவையான பொருட்கள்
ஒரு கப் பாசுமதி அரிசி
ஒரு காலிபிளவர்
2 பெரிய வெங்காயம்
2 தக்காளி
3 பச்சை மிளகாய்
5 பல் பூண்டு
சிறிதளவு இஞ்சி
1 டிஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
1 டிஸ்பூன் கரம் மசாலா
சிறிதளவு கிராம்பு
2 ஏலக்காய்
சிறிதளவு மிளகு
1 நட்சத்திர சோம்பு
சிறிதளவு ஜாதிபத்திரி
பிரியாணி இலை
சிறிதளவு கொத்தமல்லி
தேவையான அளவு நெய்
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு ஊற விடவும். ஒரு குக்கரை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். சூடானது அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, மிளகு, நட்சத்திர சோம்பு, ஜாதிபத்ரி, மற்றும் பிரியாணி இலையை சேர்த்து அதை வதக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். வெங்காயம் பொன்னிறமானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து அதை நன்கு கிளறவும்.
பின் அதில் ஊற வைத்த காலிபிளவர் சேர்த்து கிளற வேண்டும். தேவையான அளவு உப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். சில நிமிடங்கள் கழித்து அதில் நறுக்கிய கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும். அடுத்து அதில் ஊற வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அதை ஒரு கரண்டியின் மூலம் பக்குவமாக அரிசி உடைந்து விடாமல் நன்கு கிளறி விடவும். பின்பு அதில் சுமார் இரண்டு கப் அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் இரண்டு விசில் வரும்வரை அதை வேகவிடவும். இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு அதை சுமார் பத்து நிமிடம் வரை அப்படியே வைக்கவும். பத்து நிமிடத்திற்க்குப் பிறகு மூடியை திறந்து காலிஃப்ளவர் புலாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும். இந்த காலிஃபளவர் புலாவ் பல சத்துக்களை உள்ளடக்கிய ஒரு உணவாகும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்