Poondu Milagai Thuvaiyal : நல்ல காரசாரமா பூண்டு மிளகாய்த் துவையல் செய்யலாமா?.. ரொம்ப டேஸ்டா இருக்கும்..எப்படி தெரியுமா?
Poondu Milagai Thuvaiyal : இந்திய சமையல்களில் பெரும்பாலும் பூண்டு இல்லாத சமையலை நினைத்து பார்க்க முடியாது. இந்த பூண்டை வைத்து பூண்டு மிளகாய்த் துவையல் எப்படி செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
பூண்டு மிளகாய்த் துவையல்
தேவையான பொருள்கள்
பச்சை மிளகாய் - 20
பூண்டு - 10 பற்கள்
கல் உப்பு - முக்கால் மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒன்றரைத் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும். பூண்டுப் பற்களை தோலுரித்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அரை மேசைக்கரண்டி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் மீதமுள்ள நல்லெண்ணெயை ஊற்றி, சூடானதும் மிளகாய்களைப் போட்டு கருகிவிடாமல் வறுத்தெடுத்து ஆறவிடவும்.
ஆறியதும் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடியாக்கவும். பிறகு அத்துடன் சிறிது சிறிதாகத் தண்ணீர் சேர்த்து, நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டுப் பற்களையும் சேர்த்து, தேவையான அளவிற்கு தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
பூண்டு மிளகாய்த் துவையல் தயார்
அரைத்த துவையலை தாளித்த கடுகு உளுத்தம் பருப்புடன் சேர்த்து, மிக்ஸியைக் கழுவிய தண்ணீரையும் ஊற்றி, கரைத்துக் கொள்ளவும். சுவையான, காரசாரமான பூண்டு மிளகாய்த் துவையல் தயார். இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.
ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் 4 அல்லது 5 நாட்கள் வரைக்கும் கூட உபயோகப்படுத்தலாம். பூண்டு வாசனையுடன் நன்றாக இருக்கும். அரைத்த அதே தினத்தில், நல்ல காரமாக இருக்கும். அரைத்த மறுநாளிலிருந்து புளிப்புசுவை அதிகரிக்கும்.
பூண்டு நன்மைகள்
இந்திய சமையல்களில் பெரும்பாலும் பூண்டு இல்லாத சமையலை நினைத்து பார்க்க முடியாது. எந்த கறியிலும் பூண்டு இருக்க வேண்டும். முழுமையாக உரிக்கப்பட்ட பூண்டில் ஆரோக்கிய நன்மைகள் எல்லாம் அதிகம் இல்லை. ஆனால் பூண்டைப் பயன்படுத்தும் போது அனைவரும் செய்யும் ஒரு தவறு என்னவென்றால் அதன் மேல் உள்ள தோல் பகுதியாக உரிக்கப்பதுதான்.
உட்புற வெள்ளை மொட்டுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. உண்மையில், பூண்டு தோல்களில் உள்ள அளவுக்கு பூண்டு தோல்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே பூண்டை உரிக்காமல் பயன்படுத்துவது நல்லது. ஆயுர்வேத நிபுணர்கள் இதை ஆதரிக்கின்றனர். பூண்டு தோலைப் பயன்படுத்துவதால் பல உடல்நலப் பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
சரும பிரச்சனைகளை தடுக்கும்
பூண்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதயத்திற்கு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் சரும பிரச்சனைகளை தடுக்கும் கலவைகள் உள்ளன. பூண்டுடன், பூண்டு தோலில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
எனவே பூண்டு பேஸ்ட் செய்யும் போது பூண்டு தோலை சேர்த்து பேஸ்ட் செய்வது நல்லது. இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எந்த சூப், கறி அல்லது குழம்பு பயன்படுத்தப்படும் போது, உமியை பொடியாக பயன்படுத்துவது சிறந்தது.
பூண்டை தோலுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்லது
பூண்டு தண்ணீரில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனைகள் குறையும். பூண்டு வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே பூண்டை தோலுடன் சேர்த்து பயன்படுத்துவது நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்