Raagi Idiyaappam: ராகி மாவில் உதிரி உதிரியான இடியாப்பம்! இத மட்டும் செஞ்ச போதும் !
Sep 23, 2024, 03:57 PM IST
Raagi Idiyaappam:தினமும் காலை உணவில் ராகியை சேர்த்துக் கொள்வதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. உணவில் கூழாக ராகியை சேர்த்து சாப்பிடும் போது சில நாட்களில் போர் அடித்து விடும். இதனை தவிர்க்க ராகி மாவை வைத்து வித விதாக டிபன் செய்து சுவைக்கலாம்.
உடல் பருமனை குறைக்க டயட் மேற்கொள்ளும் அனைவரது உணவிலும் தவறாமல் இருப்பது இந்த ராகி உணவு தான். இதனை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு தேவையான கலோரிகள் எளிமையாக கிடைக்கின்றன. மேலும் கேட்ட கொழுப்பை சேர விட்டாமலும் இது உதவி புரிகிறது. தினமும் காலை உணவில் ராகியை சேர்த்துக் கொள்வதால் புத்துணர்ச்சி கிடைக்கிறது. உணவில் கூழாக ராகியை சேர்த்து சாப்பிடும் போது சில நாட்களில் போர் அடித்து விடும். இதனை தவிர்க்க ராகி மாவை வைத்து வித விதாக டிபன் செய்து சுவைக்கலாம். ராகி மாவை வைத்து உதிரி உதிரியாக இடியாபாபம் செய்யும் எளிய முறையை தெரிந்து கொள்ள இதை முழுமையயாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ ராகி மாவு, கால் கிலோ அரிசி மாவு, 3 டம்ளர் தண்ணீர், 2 டேபிள் ஸ்பூன் நெய், அரை கப் நாட்டு சர்க்கரை, அரை முடி தேங்காய், சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, அரிசி மாவு ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அவை இரண்டையும் ஒரு கடாயில் போட்டு வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு ஏலக்காய் தூளை போட வேண்டும். வறுத்த மாவை பெரிய பாத்திரத்தில் மாற்ற வேண்டும். அதில் 2 டம்ளர் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பை போட்டு கலக்க வேண்டும். மாவை பிசைய நன்கு கொதித்த நீரை பயன்படுத்த வேண்டும். ஏனெனில் அப்போது தான் மாவு நன்கு மென்மையாக இருக்கும்.
மாவை பிசையும் போது சிறிது சிறிதாக தண்ணீரை ஊற்றி பிசைய வேண்டும். அப்போதுதான் மாவில் அதிக தண்ணீர் சேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள முடியும். முதலில் மாவை சில நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும். பின்னர் அந்த மாவை எடுத்து மீண்டும் பிசைய வேண்டும். கைகளில் எண்ணெய் தடவி இதனை செய்யும் போது மாவு ஒட்டாமல் இருக்கும்.
இடியாப்பம் பிழிய
இடியாப்பம் பிழியும் கருவியை கொண்டு, இடியாப்பம் பிழிய வேண்டும். இதற்கு சிறிய துளை இட்ட தட்டை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் இடியாபாப்ப உதிரி, உதிரியாக வரும். மேலும் இடியாப்ப கருவியினுள் சிறிது எண்ணெய் அல்லது நெய் தடவி பயன் படுத்தும் போது, அதனுள் இடியாப்ப மாவு ஒட்டாமல் பாதுகாக்கும். இதனை இட்லி சட்டியில் வைத்து 15 நிமிடங்கள் நேரம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
இடியாப்பம் சாப்பிடுவதற்கு தேங்காய் பால் தயார் செய்து கொள்ள வேண்டும். அரை முடி தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். பின்னர் அந்த அரைத்த தேங்காயை ஒரு துணியில் போட்டு நன்றாக பிழிந்து பால் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இடியாப்பத்தை தேங்காய் பால், நாட்டு சர்க்கரை போட்டு பரிமாற வேண்டும். சுவையான உதிரி, உதிரியாக இருக்கும் இடியாப்பம் சாப்பிடலாம்.
டாபிக்ஸ்