Idiyappam : நூல் நூலாக உதிரி உதிரியாக இடியாப்பம் வேண்டுமா? ரேஷன் அரிசியே போதும்! இதோ பக்குவம்!
Idiyappam : நூல் நூலாக உதிரி உதிரியாக இடியாப்பம் வேண்டுமா? ரேஷன் அரிசியே பச்சரிசிய போதும். மெனக்கெட்டு பக்குவம் தேவையில்லை. இந்த பக்குவம் மட்டும்போதும்.

இடியாப்பம் அல்லது நூல் புட்டு அல்லது நூலாப்பம் தென்னிந்தியாவில் உருவான உணவு ஆகும். இதில் அரிசி மாவு பயன்படுத்தப்படுகிறது. இதை பிழிந்து எடுக்க பிரத்யோக குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியா, இலங்கை, தெற்காசியா முழுவதிலும் பிரபலமான உணவு. இது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவிலும் உள்ளது. இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பம், வடை ஆகியவை தமிழ் பாரம்பரிய உணவுகளுள் ஒன்றாகும். முதலாம் நூற்றாண்டில் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது. இடியாப்பம் என்ற வார்த்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இருந்து உருவானது. இடியாப்பம் பாயா அல்லது தேங்காய்ப்பால் அல்லது மீன் மற்றும் அசைவ குழம்புகளுடன் பரிமாறப்படுகிறது. இடியாப்பத்தை தேங்காய் துருவல் மற்றும் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்தும் சாப்பிட சுவை அள்ளும்.
அரிசி மாவில் சூடான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து குழாயில் வைத்து பிழிந்தெடுத்து, இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுத்து பலவகையான சைட்டிஷ்களுடன் பரிமாறப்படுகிறது. இந்த இடியாப்பத்திற்கான மாவை நீங்கள் சரியான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இந்த மாவை தயாரிக்க பச்சரிசி தேவைப்படுகிறது. எனவே அரிசி நன்றாக இருந்தால், மாவு நன்றாக வரும். இடியாப்பமும் சுவை நிறைந்ததாக இருக்கும். இடியாப்பத்தை பெரும்பாலும் காலை அல்லது இரவு உணவுக்கு எடுத்துக்கொள்ளவேண்டும். பொதுவாக மதிய உணவுக்கு சாப்பிடப்படுவதில்லை. இந்த இடியாப்பத்தை பிழிந்து எடுத்தால் சேமியா அல்லது நூடுல்ஸ் போன்ற தோற்றத்தில் இருக்கும். மலேசியா மற்றும் சிங்கப்பூரில் புட்டு மையம் என்று அழைக்கப்படும் இடியாப்பம் தெருவோர உணவகங்களில் வெவ்வேறு சுவைகளில் விற்கப்படுகிறது.
இந்த இடியாப்பத்துக்கு பதமாக மாவு அரைக்க வேண்டும் என்றால், அதற்கு மாவை தயார் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதற்கு அரிசி நன்றாக இருக்கவேண்டும். நீங்கள் ரேஷன் பச்சரிசியிலேயே இங்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற தரமான இடியாப்ப மாவை தயாரிக்க முடியும்.