Diabetes Remedy : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் ஏலக்காய் டீ! ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் இயற்கை தீர்வு!
Diabetes Remedy : நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் ஏலக்காய் டீ, ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் இயற்கை தீர்வு தரும் இந்த டீயை நீங்கள் சேர்த்துக்கொள்வது உங்கள் உடலுக்கு நல்லது.

இந்தியாவில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் உணவுகளுள் முக்கியமானது ஏலக்காய். இது உடலின் பல்வேறு உபாதைகளுக்கு தீர்வாகிறது என்பதால் உணவாகவே பயன்படுத்தப்படுகிறது. இது பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் சர்க்கரை நோய்க்கும் தீர்வாகிறது. இந்திய சமையலறையில் பல்வேறு உணவுகள் இருந்தாலும், அவையனைத்தும் சேர்த்துதான் இந்திய உணவுகளை சுவையாக்குகின்றன. சில மசாலாக்கள் அன்றாட உணவில் சேர்க்கப்படும். சில மசாலாப்பொருட்கள் குறிப்பிட்ட உணவுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும். ஏலக்காய் பாரம்பரியமாக இனிப்புகளில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். அது பிரியாணி போன்ற குறிப்பிட்ட கார உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. பச்சை ஏலக்காயில் சுவை, மணம் இரண்டும் நன்றாக இருக்கும். இதை சேர்க்கும் உணவில் எல்லாம் அந்த சுவையும், மணமும் கலக்கும். அது உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்கும். சிலர் வாயில் நல்ல மணம் வீச இதை மெல்வார்கள். இதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சுவைக்காக ஏலக்காய்கள் டீயிலும் சேர்க்கப்படுகிறது.
ஏலக்காய்
ஏலக்காய் அதன் மருத்துவ குணங்களுக்காக பாரம்பரிய உணவு முதல் மருத்துவத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை தினமும் தேநீரில் கலந்து பருகும்போது, தேநீர் சுவையானதாகிறது. தொற்றுகளை குணப்படுத்தவும், சளி, இருமலைப் போக்கவும் ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இதன் ஆன்டிபயோடிக் குணம்தான் நோய்களை எதிர்த்து உடல் போராட உதவுகிறது. ஏலக்காய் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. அது உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனஅழுத்தத்தின் அறிகுறிகளைப்போக்குகிறது. நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏலக்காய் உதவுகிறது. இதில் உள்ள ஹைப்போலிபிடெமிக் குணங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள்தான் ரத்தத்தில் சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகின்றன.
நீங்கள் டீ தயாரிக்கும்போது ஏலக்காயை எப்படி பயன்படுத்தவேண்டும்?
கொதிக்கும் தண்ணீரைல் 2 ஏலக்காய்களை பொடித்த போடவேண்டும். பின்னர் டீத்தூள் மற்றும் பாலை சேர்த்து காய்ச்சி இறக்கி வடிகட்டி பருகலாம். இது ஏலக்காய் டீ. இதனுடன் இஞ்சித் துண்டையும் தட்டி கொதிப்பதற்கு முன் சேர்க்கலாம். இது உங்கள் டீயின் சுவையை மட்டுமல்ல ஆரோக்கிய குணங்களையும் அதிகரிக்கும். இதில் தேன் அல்லது நாட்டுச்சர்க்கரை அல்லது மருத்துவர் பரிந்துரைப்படி பருகலாம். மற்றவர்கள் சாதாரணமாக இனிப்பு சேர்த்தே பருகலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் கவனம் தேவை.