Ragi Puttu : ருசித்து ரசித்து சாப்பிடத்தூண்டும் ராகிப்புட்டு! நெய், தேங்காய், நாட்டுச்சர்க்கரையுடன் சுவை அள்ளும்!
Ragi Puttu : ருசித்து ரசித்து சாப்பிடத்தூண்டும் ராகிப்புட்டு, நெய், தேங்காய், நாட்டுச்சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். ஆரோக்கியமும் நிறைந்தது.

புட்டு, கேரளாவின் புகழ்பெற்ற உணவாகும். இது தமிழ்நாடு மற்றும் இலங்கையிலும் பிரபலமாக செய்யப்படுகிறது. அங்கு பிட்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கு அரிசி மாவு மற்றும் தேங்காய் துருவல்தான் முக்கிய உட்பொருட்கள். புட்டு குழாயில் வைத்து குழாய் புட்டும் செய்யலாம். ஆவியில் வேகவைத்து எடுத்து உதிரிபுட்டாகவும் செய்யலாம். குழாய் புட்டு செய்வதற்கு புட்டு குழல் அல்லது புட்டு குடம் என்ற தனிப்பாத்திரம் உள்ளது. சிறிய கிண்ணம் வடிவிலும் புட்டு குழல் இப்போது வந்துவிட்டது. அதை குக்கரில் வைத்து புட்டு செய்யப்படுகிறது. இதை வைத்துக்கொள்வது எளிது. அரிசி மாவுக்குப் பதில் கோதுமை, ராகி, ரவா, சம்பா அரிசி, சிவப்பரிசி, சாத்து மாவு ஆகியவற்றை வைத்தும் புட்டுதயாரிக்கப்படுகிறது.
புட்டுக்கு தேவையான மாவை நீங்கள் வீட்டிலும் தயாரிக்கலாம். கடையிலும் வாங்கிக்கொள்ளலாம் அல்லது சாதாரண மாவிலும் புட்டு செய்யலாம். அதற்கு அந்த மாவை சிறிது வறுத்துவிடவேண்டும். இப்படி வறுத்து அரைக்கும்போது அந்த மாவு கட்டிப்படாமல் புட்டு உதிரியாக வரும். ராகியில் நீங்கள் வீட்டிலே மாவு தயாரிக்க முடியாது. எனவே ஆர்கானிக் கடைகளில் நல்ல தரமான ராகி மாவு கிடைக்கும் அதை வாங்கிக்கொள்ளலாம். அதை நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ராகிப்புட்டு செய்ய தேவையான பொருட்கள்
ராகி – ஒரு கப்