Palm Fruit Kulfi: சுகர் பேசண்ட்களும் சாப்பிடலாம் சுவையான நுங்கு குல்பி! அசத்தலான ரெஸிபி!
Sep 22, 2024, 10:24 AM IST
Palm Fruit Kulfi: வயதானவர்களை தாண்டி சில இளைய தலைமுறையினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இப்போதே இனிப்பு எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டியதாகியுள்ளது. இவர்களுக்காகவே நுங்கு போன்றவை உள்ளன.
இயற்கையான முறையில் ஆரோக்கியமான உணவுகளை நாமே எளிமையாக செய்ய முடியும். வயதானவர்களை தாண்டி சில இளைய தலைமுறையினரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இப்போதே இனிப்பு எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டியதாகியுள்ளது. இவர்களுக்காகவே நுங்கு போன்றவை உள்ளன. இத்தகைய நுங்கு போன்ற உணவுகளை சர்க்கரை நோய் உள்ளவர்களும் தாரளமாக சாப்பிடலாம். இந்த நுங்கை வைத்து எளிமையான முறையில் நுங்கு குல்பி செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
8 நுங்கு,
அரை லிட்டர் பால்
கால் கப் நாட்டு சர்க்கரை
2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
8 ஐஸ்க்ரீம் குச்சிகள்
துண்டுகளாக நறுக்கிய 2 நுங்கு
செய்முறை
முதலில் 8 நுங்குகளை தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரை லிட்டர் பாலை நன்கு காய வைத்து, ஆறிய பின் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பெரிய மிக்ஸி ஜாரில் நுங்கு, பால் மற்றும் சர்க்கரை போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் இந்த அரைத்த கலவையை போட்டு, மிதமான தீயில் வைத்து நன்கு கொதிக்க விட வேண்டும். வேறு பாத்திரத்தில் சோள மாவு மற்றும் பாலை போட்டு, கட்டி வராமல் கலக்கி எடுத்துக் கொள்ளவும்.
இந்த சோள மாவு கரைசலை கொதிக்கும் கலவையில் போட்டு, இடை விடாமல் தொடர்ந்து கிளறி விட வேண்டும். இந்த கலவை சிறிது கெட்டியாக மாறியதும் கடாயை இறக்கவும். இந்த கலவையின் சூடு ஆறிய பின்னர் சிறிய அளவிலான டம்ளர்களில் ஊற்றி, அதனுடன் ஐஸ் குச்சிகளை வைத்து ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும் ஃப்ரீஸரில் 8 மணி நேரம் வைத்து, கட்டியாக மாறிய பின்னர் வெளியே எடுக்கவும். டம்ளரில் இருந்து வெளியே எடுத்து அனைவரும் சாபிடலாம். சுவையான, ஈஸியான குல்பி ரெடி.
நுங்கின் பயன்கள்
நுங்கில் இரும்பு, பொட்டாசியம், விட்டமின் பி, கால்சியம் உட்பட பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் குறைந்த கலோரிகள் மட்டும் இருப்பதாலும், அதிக நீர்ச்சத்து இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகள் இதனை சாப்பிடலாம். எடை குறைப்பு உணவிலும் நுங்கு உள்ளது. உடலின் கேட்ட கொழுப்பை கட்டுபடுத்தவும் பயன்படுகிறது. மலச்சிக்கல் வயிறு சம்பந்தமான கோளாறுகள் என பலவற்றை நுங்கு குணப்படுத்தும் வல்லமை பெற்றுள்ளது.
நுங்கை ஐஸ் ஆப்பிள் என செல்லமாகவும் அழைக்கிறார்கள். நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த ஒரு வரமாகும். இது வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்