Pasipayaru Idly: அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பாசிப்பயறு இட்லி செய்வது எப்படி? சுவையோடு ஆரோக்கியமும் நல்கும்!-how to make pasipayaru idly in easy steps - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Pasipayaru Idly: அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பாசிப்பயறு இட்லி செய்வது எப்படி? சுவையோடு ஆரோக்கியமும் நல்கும்!

Pasipayaru Idly: அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பாசிப்பயறு இட்லி செய்வது எப்படி? சுவையோடு ஆரோக்கியமும் நல்கும்!

Suguna Devi P HT Tamil
Sep 20, 2024 05:59 PM IST

Pasipayaru Idly: உணவே மருந்து என்ற தமிழ் மொழியில் ஒரு கூற்று உள்ளது. ஆதி தமிழர்களும் இதனையே முழு குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து வந்தனர். அந்த வரிசையில் நாம் உணவில் பயன்படுத்தி வரும் பாசிப்பயறு மிகவும் நல்ல பலன்களை அளிக்க கூடியதாகும். இதனை தினமும் சாப்பிடும் போது உடலில் பல உறுப்புகள் வலிமை பெறும்.

Pasipayaru Idly: அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பாசிப்பயறு இட்லி செய்வது எப்படி?  சுவையோடு ஆரோக்கியமும் நல்கும்!
Pasipayaru Idly: அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பாசிப்பயறு இட்லி செய்வது எப்படி?  சுவையோடு ஆரோக்கியமும் நல்கும்!

தேவையான பொருள்கள்

ஒரு கப்  முளை கட்டிய பாசிப்பயறு, 2 டேபிள்ஸ்பூன் புழுங்கல் அரிசி, அரை கப் பொடியாக நறுக்கிய காய்கறிகள்(காரட், பச்சை காய்கறிகள்), 2 பச்சைமிளகாய், ஒரு துண்டு இஞ்சி,சிறிதளவு நறுக்கிய கொத்துமல்லி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

அரிசி, பயறு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அது ஊறியதும், அதில் பச்சைமிளகாய், இஞ்சி இரண்டையும் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். மேலும் இதில் காய்கறிகள், உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். இட்லித் தட்டில் சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைக்க வேண்டும். பின்னர் எடுத்து சுட சுட பரிமாறவும்.

எண்ணெய் சேர்க்காத உணவாதலால் இதயத்துக்கு இந்த இட்லி சிறப்பானதாக இருக்கும். இட்லி தட்டில் எண்ணெய் தடவி மாவை ஊற்றுவதற்கு பதிலாக, துணி போட்டு இந்த இட்லி செய்து தந்தால் இன்னும் நல்லது. குறிப்பாக பயறைத் தோலுடன் அரைத்துச் செய்வதால் அதிக அளவு நார்ச்சத்தும் புரதச் சத்தும் கிடைக்கும்.

பாசிப்பயறு நன்மைகள் 

இந்த பயிரை உணவில் ஏழு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொடுக்கிறது. பாசி பயற்றில் தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ், மக்னீசியம், மாங்கனீசு, செலீனியம், கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், புரதம், நார்ச்சத்து, தாதுப் பொருட்கள், கார்போஹைட்ரேட் ஆகிய உடலின் அத்தியாவசிய செயல்பாட்டுக்கு அவசியமான கனிமச் சத்துகளும் இதில் உள்ளன.

பச்சை பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது ஆகும். பச்சை பயறு உடல் பருமனைக் குறைக்கவும், உடல் எடையை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இது நீண்ட நேரம் வயிறு  பிரச்சனையை தீர்க்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும். உடல் எடையை குறைக்க முயற்சிப்போர், சப்பாத்தி சாப்பிடும் போது, அத்துடன் ஒரு கப் பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.