கோடைக்கு குளிர்ச்சி தரும் உணவு பொருள்களில் ஒன்றாக பனைமரத்தில் இருந்து பெறப்படும் நுங்கு உள்ளது
By Muthu Vinayagam Kosalairaman Jun 03, 2024
Hindustan Times Tamil
கோடை வெப்பத்தை சமாளிக்க பல்வேறு விஷயங்களை கடைபிடித்து வருகிறோம். உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைக்க உதவும் உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் உரிய பலன் பெறலாம்
ஐஸ் ஆப்பிள் என்று அழைக்கப்படும் நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்
பார்ப்பதற்கு லிச்சி பழம் போல் தோற்றமளிக்கும் நுங்கு, இளநீர் போல் ருசி கொண்டதாக இருக்கிறது
நுங்கு உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள உதவுகிறது
நுங்கில் 95 சதவீதம் வரை நீர் சத்து நிறைந்திருப்பதால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்படுகிறது. குறிப்பாக கோடை காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்து குளிர்ச்சி அடைய செய்கிறது
வயிறு சார்ந்த தொந்தரவுகள், மலச்சிக்கல், குமட்டல், வயிறு உப்புசம் பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக நுங்கு உள்ளது
இயற்கையான எனர்ஜி பூஸ்டராக இருக்கும் நுங்கு, இயற்கையான சர்க்கரை மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்டதாக உள்ளது
அழற்சிக்கு எதிரான பண்புகள் நுங்கில் இருப்பதால் வயது முதிர்வாகும் தன்மை தடுக்கப்படுகிறது
இதில் இருக்கும் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கொலஜன் உற்பத்தியை அதிகரித்து அடிப்படை புரதத்தை தருவதுடன், சருமத்தின் அளவு, அழகை பேனி பாதுகாக்க உதவுகிறது
உங்கள் உணவு டயட்டில் காலிபிளவர் சேர்ப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை பார்க்கலாம்