தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bread Pizza: சட்டுனு செஞ்சு சாப்பிடலாம் பிரட் பீட்ஸா! ஈஸியான ரெஸிபி இதோ!

Bread Pizza: சட்டுனு செஞ்சு சாப்பிடலாம் பிரட் பீட்ஸா! ஈஸியான ரெஸிபி இதோ!

Suguna Devi P HT Tamil

Sep 23, 2024, 01:08 PM IST

google News
Bread Pizza: ஹோட்டல்களில் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் பீட்ஸா, இந்த உணவு மீதான ஒரு வகையான ஈர்ப்பு காரணமாக பல நகரங்களில் இது பிரதான உணவாக இருந்த வருகிறது.
Bread Pizza: ஹோட்டல்களில் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் பீட்ஸா, இந்த உணவு மீதான ஒரு வகையான ஈர்ப்பு காரணமாக பல நகரங்களில் இது பிரதான உணவாக இருந்த வருகிறது.

Bread Pizza: ஹோட்டல்களில் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் பீட்ஸா, இந்த உணவு மீதான ஒரு வகையான ஈர்ப்பு காரணமாக பல நகரங்களில் இது பிரதான உணவாக இருந்த வருகிறது.

இந்திய உணவுகளில் பலவகை இருக்கும் போதும், வெளிநாடு உணவுகள் மீதான பிரியம் நாளுக்கு  நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வகையில் பீட்ஸா, பர்கர்கள் போன்றவை மிகவும் பிரபலமானவை ஆகும். ஹோட்டல்களில் அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் பீட்ஸா, இந்த உணவு மீதான ஒரு வகையான ஈர்ப்பு காரணமாக பல நகரங்களில் இது பிரதான உணவாக இருந்த வருகிறது. இந்த பீட்ஸாவை அதிக விலையில் வெளியில் வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக நாமே வீட்டில் பிரட்டை வைத்து சுவையான பீட்ஸா செய்யலாம். 

அடிக்கடி வெரைட்டியான உணவுகளை சாப்பிட விரும்பும் பிள்ளைகளுக்கு இந்த பிரட் பீட்ஸா செய்து கொடுத்து அசத்தலாம். அவர்களும் விரும்பி சாப்பிடுவார். இந்த ரெஸிபியில் சொல்லபபட்ட சில பொருட்கள் உங்களது வீடுகளில் இல்லாமல் இருக்கலாம். இப்போது இதனை வாங்குவது எளிதாக்கி  விட்டது. எனவே அனைவரும் இதனை செய்து பயன் அடையலாம். இந்த பிரட் பீட்ஸா செய்வதற்கான செய்முறைகளை தெரிந்து கொள்ள இதனை முழுவதுமாக படியுங்கள். 

தேவையான பொருட்கள் 

சாண்ட்விச் செய்யும் அளவிலான 5 பிரட் துண்டுகள், ஒரு குடைமிளகாய், ஒரு பெரிய வெங்காயாம், ஒரு தக்காளி, 100 கிராம் அளவுள்ள பட்டர், தேவையான அளவு சீஸ் (Cheese)துண்டுகள், 2 டேபிள் ஸ்பூன் பீட்ஸா சாஸ், 2 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.    

செய்முறை 

வெங்காயம், தக்காளி, குடை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  முதலில் பிரட்டின் பிரெட்டின் ஒருபக்கத்தில் சிறிதளவு பட்டரை தடவ வேண்டும். அடுத்ததாக பீட்சா சாஸ், டொமேட்டோ சாஸ் பரவலாக தடவி விட வேண்டும். மற்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். அதன்மேல் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை வைக்க வேண்டும். மேலும் சில்லி ஃப்ளேக்ஸ் சிறிதளவு தூவி விட வேண்டும். 

பிறகு இட்டாலியன் சீசனின் சிறிதளவு தூவி விட்டு சீஸை துருவி தேவைகேற்ப சேர்க்க வேண்டும். பிறகு தோசை தவாவில் ஒரு ஸ்பூன் பட்டர் சேர்த்து அதன் மேல் பிரட் பிட்சாவை மெதுவாக எடுத்து வைக்கவும்.இதனை ஒரு மூடிக்கொண்டு மூடி மிக மிதமான தீயிலேயே 5 முதல் 10 நிமிடங்கள் வைக்கவும். பிரட்டில் தடவி இருக்கும் சீஸ் உருகும் வரை காய விட வேண்டும். பின்னர் இதனை ப்ளேடஂடிற்கு மாற்றி இரண்டாக கட் செய்து வைக்கவும். இதனை சூடாக சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும். மாலை நேரங்களில் வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கும், அலுவலகங்களில் வேலை முடித்து திரும்பி வருபவர்களுக்கும் இதனை செய்து கொடுக்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் ஆக இருக்கும். 

இந்த ரெசிபியை செய்வதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் எடுக்கும். உங்கள் வீட்டிலேயே செய்வதால் தேவையற்ற நிறமிகள் சேர்க்கப்படுவதில்லை. மேலும் குழந்தைகளுக்கு இது பாதுகாப்பான உணவாக இருக்கும். இதனை வீட்டில் உள்ள பெரியவர்களும் சாப்பிடலாம். சூடாக, சுவையாக இருப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சப்பிடுவர். 

 

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
அடுத்த செய்தி