Cooker Paneer Butter Masala : குக்கரில் 2 விசில் போதும் சட்டுன்னு தயார் பண்ணிடலாம் பன்னீர் பட்டர் மசாலா!
Cooker Paneer Butter Masala : குக்கரில் 2 விசில் போதும் சட்டுன்னு தயார் பண்ணிடலாம் பன்னீர் பட்டர் மசாலா, நிமிடத்தில் தீர்ந்துவிடும். அத்தனை சுவை நிறைந்தது.
பன்னீரில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம், ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது. இது பக்கவாதம் வராமல் தடுக்கிறது. இது தசைகளில் வலி ஏற்படாமல் தடுக்கிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்கு உகந்தது. மெனோபாஸ் நிலையில் உள்ள பெண்கள் அடிக்கடி வலியால் பாதிக்கப்படுவார்கள். பன்னீரை தினமும் எடுத்துக்கொண்டால், அது வலிகளை குறைக்கிறது. இதில் உள்ள அதிகளவிலான கால்சியம், எலும்புகளை காக்கிறது. இதில் அதிகளவில் சிங்க் உள்ளது. அது ஆண்களின் ஸ்பெர்ம் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. பன்னீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பல்வேறு நன்மைகளுக்காக எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் அனைவரும் விரும்பும் ஒன்றாகவும் இந்த பன்னீர் பட்டர் மசாலா இருக்கும். அதை எளிமையாக குக்கரில் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
பன்னீர் – 200 கிராம்
குடை மிளகாய் – 1 (சதுர வடிவில் வெட்டியது)
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 3
வர மிளகாய் – 2 (மிளகாய் எப்போதும் உங்கள் கார அளவுக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளுங்கள்)
முந்திரி – 6
பாதாம் – 6
பிரியாணி இலை – 2
தாளிக்க தேவையான பொருட்கள்
வெண்ணெய் – சிறிதளவு
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
கசூரி மேத்தி – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு குக்கரில் வெங்காயம், தக்காளி, முந்திரி, பாதாம், பிரியாணி இலை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு 2 விசில் விட்டு எடுத்துக்கொள்ளவேண்டும். குக்கர் விசில் நின்றவுடன், பிரியாணி இலையை மட்டும் எடுத்துவிட்டு, ஆறவைத்து மசாலாவை மிருதுவான பேஸ்ட்டாக அரைத்துக்கொள்ளவேண்டும்.
இதில் தேவைப்பட்டால் 6 புதினா இலைகளும் சேர்த்துக்கொள்ளலாம். அது வித்யாசமான சுவையைத்தரும். இல்லாவிட்டாலும் விட்டுவிடலாம்.
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து இஞ்சி - பூண்டு விழுது, மிளகாய்த் தூள், ஒரு ஸ்பூன் கசூரி மேத்தி சேர்த்து தாளிக்கவேண்டும். உப்பு தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பன்னீர் மற்றும் குடை மிளகாயை துண்டுகளாக்கி சேர்த்து சிறிது நேரம் வறுத்துவிட்டு, அரைத்த மசாலாவை சேர்க்கவேண்டும். அனைத்தையும் நன்றாக கொதிக்கவிடவேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் கசூரி மேத்தியை தூவிவிடவேண்டும்.
குக்கர் பன்னீர் பட்டர் மசாலா நிமிடத்தில் தயார். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை பூரி, சப்பாத்தி, ரொட்டி, நாண் என எதனுடன்வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
பன்னீரின் நன்மைகள்
100 கிராம் பன்னீரில் 20 கிராம் கொழுப்பு மற்றும் புரதச்சத்து உள்ளது. இறைச்சிக்கு இணையான புரதச்சத்து நிறைந்த உணவாக கருதப்படுகிறது.
புற்றுநோய் இன்றைய காலத்தில் அதிகளவில் ஏற்படுகிறது. பல்வேறு வகை புற்றுநோய்களுக்கு மத்தியில் சராசரியாக 10 லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மெனோபாஸ்க்கு முந்தைய நிலையில் இந்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பன்னீரில் அதிகளவில் வைட்டமின் டி சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளது. இவையிரண்டும் மார்பக புற்றுநோயை தடுக்கக்கூடியவை. பன்னீரில் உள்ள சிஃபிங்கோலிபிட்ஸ் மற்றும் அதிகளவிலான புரதம் குடல் புரோஸ்டேட் புற்றுநோய் ஆகியவற்றை முதல் நிலையிலே எதிர்த்து போராட உதவுகிறது.
பற்கள் மற்றும் எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
உடல் எடை குறைக்க உதவுகிறது
செரிமான மண்டலத்தின் வழக்கமான இயக்கத்துக்கு உதவுகிறது
நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது
நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது
பன்னீர் நோயிலிருந்து காப்பாற்றுகிறது
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்