Horse Gram Vadai : மொறு மொறு கொள்ளு வடை! சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ்! உடல் எடையை குறைக்கவும் உதவும்!
Jun 24, 2024, 03:00 PM IST
Horse Gram Vadai : மொறு மொறு கொள்ளு வடை, சுவையான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகும். இந்த வடை உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் சாய்ஸ்க்கு இந்த வடையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
கொள்ளு வைத்து வடை செய்ய முடியும். சுவையாகவும் இருக்கும். ஆரோக்கியமும் நிறைந்தது. கொள்ளை வைத்து பல்வேறு உணவுகள் செய்ய முடிந்தாலும் இந்த வடை மிகவும் சுவை நிறைந்ததாகவும், ஆரோக்கியம் நிறைந்ததாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
கொள்ளு – ஒரு கப்
(நன்றாக சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
வர மிளகாய் – 4
பூண்டு – 10 பல்
சோம்பு – ஒரு ஸ்பூன்
மிளகு – ஒரு ஸ்பூன்
கரம் மசாலா – ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 2 கப் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
கடலை மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
பச்சரிசி மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு மற்றும் வர மிளகாயை சேர்த்து முதலில் அரைத்துவிடவேண்டும். பின்னர் ஊறவைத்துள்ள கொள்ளு, சோம்பு, மிளகு, கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு என அனைத்தையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொர கொரப்பாக கடலை பருப்பு வடைக்கு அரைக்கும் பக்குவத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அரை மாவை ஒரு பவுலுக்கு மாற்றி அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் கூட சேர்த்துக்கொள்ளலாம். கறிவேப்பிலை, கடலை மாவு, பச்சரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து நன்றாக சூடானவுடன், வடைகளாக தட்டி எடுக்கவேண்டும்.
இந்த வடை எண்ணெய் அதிகம் குடிக்காது. ஆனால் இந்த வடை எண்ணெய் குடிக்காது. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கூட இதை சாப்பிடலாம்.
உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் சுவையான உணவுகளை சாப்பிட முடியாமல் அவதிப்படுவார்கள். அவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வுதான்.
உடலுக்கு கொள்ளு தரும் நன்மைகள்
குதிரைக்கு கொடுக்கப்படும் உணவாக உள்ளது. இதனால் ஆங்கிலத்தில் இது ஹார்ஸ் கிராம் தால் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் மனிதர்களுக்கு இந்த கொள்ளு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது.
குறிப்பாக, கொழுத்தவனுக்கு கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு என்ற பழமொழிக்கு ஏற்ப உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. உளுந்து மற்றும் பாசிபருப்பு அளவுக்கு பிரபலம் இல்லாத இந்த கொள்ளு பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன.
இதன் எண்ணற்ற மருத்துவ குணங்களால், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடியது என்பதால் சளிக்கு சிறந்த மருந்தாகிறது.
மழைக்காலத்தில் கொள்ளு சூப், கொள்ளு கஞ்சி ஆகியவை சளி மற்றும் இருமல் தொல்லைகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபினால்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை வலுவாக வைக்கிறது. மேலும் இது மஞ்சள் காமாலை, மூலம் உள்ளிட்ட வியாதிகளுக்கும் மருந்தாகிறது.
பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது
சரும பளபளப்பு
நீரிழிவை கட்டுப்படுத்துகிறது
எடையிழப்பை அதிகரிக்கிறது
விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது
கல்லீரல் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது
சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்கிறது
டாபிக்ஸ்