Benefits of Horse Gram : விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு குதிரை பலத்தைத்தரும் கொள்ளு! தினம் ஒரு தானியம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Horse Gram : விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு குதிரை பலத்தைத்தரும் கொள்ளு! தினம் ஒரு தானியம்!

Benefits of Horse Gram : விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு குதிரை பலத்தைத்தரும் கொள்ளு! தினம் ஒரு தானியம்!

Priyadarshini R HT Tamil
Published Apr 30, 2024 06:00 AM IST

Benefits of Horsegram : இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. உளுந்து மற்றும் பாசிபருப்பு அளவுக்கு பிரபலம் இல்லாத இந்த கொள்ளு பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

Benefits of Horse Gram : விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு குதிரை பலத்தைத்தரும் கொள்ளு! தினம் ஒரு தானியம்!
Benefits of Horse Gram : விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து உடலுக்கு குதிரை பலத்தைத்தரும் கொள்ளு! தினம் ஒரு தானியம்!

குறிப்பாக, கொழுத்தவனுக்கு கொள்ளு இளச்சவனுக்கு எள்ளு என்ற பழமொழிக்கு ஏற்ப உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு உடல் எடையை குறைக்க உதவுகிறது.

இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. உளுந்து மற்றும் பாசிபருப்பு அளவுக்கு பிரபலம் இல்லாத இந்த கொள்ளு பருப்பில் ஏராளமான நன்மைகள் உள்ளன. 

இதன் எண்ணற்ற மருத்துவ குணங்களால், ஆயுர்வேத மருத்துவத்தில் இது மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. உடலுக்கு சூட்டை கொடுக்கக்கூடியது என்பதால் சளிக்கு சிறந்த மருந்தாகிறது.

மழைக்காலத்தில் கொள்ளு சூப், கொள்ளு கஞ்சி ஆகியவை சளி மற்றும் இருமல் தொல்லைகளில் இருந்து நிவாரணம் கொடுக்கிறது. மேலும் இதில் உள்ள பாலிஃபினால்கள், ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலை வலுவாக வைக்கிறது. மேலும் இது மஞ்சள் காமாலை, மூலம் உள்ளிட்ட வியாதிகளுக்கும் மருந்தாகிறது.

கொள்ளு பருப்பின் நன்மைகள்

பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது

ஆஸ்துமா, சிறுநீர் பிரச்னைகள், மூச்சுக்குழாய் வீக்கம், மஞ்சள் காமாலை, அல்சர், ரத்தக்கட்டி, மாதவிடாய் போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. இது சளியை வெளியேற்றுகிறது மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்த உதவுகிறது.

சரும பளபளப்பு

கொள்ளில் உள்ள ஆஸ்டிரின்ஜென்ட் குணங்கள் சரும நோய்களுக்கு சிகிச்சை கொடுக்க உதவுகிறது. லியூக்கோடெர்மா போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. இதை ஃபேசியல் பேக்குகளிலும் பயன்படுத்தி, சரும பிரச்னைகளை தடுத்து, தெளிவான சருமத்தை கொடுக்கிறது.

நீரிழிவை கட்டுப்படுத்துகிறது

இந்திய வேதியல் தொழில்நுட்ப கல்வி மையத்தின் அறிவியலாளர்கள், பச்சை கொள்ளை சாப்பிடும்போது, அது அடுத்து சாப்பிடும் உணவை மெதுவாக ரத்தத்தில் கலக்கச்செய்வதை கண்டு பிடித்துள்ளனர். கார்போஹைட்ரேட் செரிமானத்தை குறைக்கிறது மற்றும் இன்சுலின் எதிர்ப்பையும் குறைக்கிறது.

எடையிழப்பை அதிகரிக்கிறது

கொள்ளு பருப்பில் உள்ள இயற்கையான குணங்கள் கொழுப்பை கரைக்கின்றன. இது எல்டிஎல் கொழுப்பை குறைத்து ஹெச்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது. கொள்ளு, நேரடியாக கொழுப்பு திசுக்களை தாக்குகிறது. கொழுப்பை கரைத்து, நல்ல ஒரு உடலை கட்டுக்கோப்புடன் கொண்டுவருகிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துகிறது

இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலங்கள், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. 

இந்த மினரல்கள், ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் நேர்மறையாக செயல்பட்டு, அந்த உறுப்புக்களுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, இதில் உள்ள அமினோ அமிலங்கள், போதிய எண்சைம்கள் நடவடிக்கையை அதிகரித்து, ஸ்பெர்ம்கள் உற்பத்திக்கு உறுதியளிக்கிறது.

கல்லீரல் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது

பச்சை கொள்ளில் எண்ணற்ற தாவர உட்பொருட்கள் உள்ளது. அவை ஃப்ளேவனாய்ட்கள் மற்றும் பாலிஃபினால்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்தப்பொருட்கள், கல்லீரல் மற்றும் பித்தப்பையை காக்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கிறது. உடலில் உள்ள வேதி கழிவுகளை வெளியேற்றுகிறது.

சிறுநீரக கற்களுக்கு சிகிச்சையளிக்கிறது

உடலில் கால்சியம் பாஸ்பேட் உப்புகள் சேர்வதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கொள்ளு பருப்பில் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது சிறுநீரக கற்கள் கடினமாவதை தடுக்கிறது. இது ஆரோக்கியமான சிறுநீரகத்தை பாதிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நல்ல முறையில் வெளியேற்கிறது. சிறுநீரக கோளாறுகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.