தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Curry Leaves Pepper Chicken : கறிவேப்பிலை, மிளகு கோழி வறுவல்! சூப்பர் சுவையில் ஒரு அசத்தலான் சிக்கன் ரெசிபி இதோ!

Curry Leaves Pepper Chicken : கறிவேப்பிலை, மிளகு கோழி வறுவல்! சூப்பர் சுவையில் ஒரு அசத்தலான் சிக்கன் ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Jun 10, 2024 10:41 AM IST

Curry Leaves Pepper Chicken : கறிவேப்பிலை, மிளகு கோழி வறுவல் செய்வது எப்படி? சூப்பர் சுவையில் ஒரு அசத்தலான் சிக்கன் ரெசிபி இதோ, கட்டாயம் செய்து மகிழுங்கள்.

Curry Leaves Pepper Chicken : கறிவேப்பிலை, மிளகு கோழி வறுவல்! சூப்பர் சுவையில் ஒரு அசத்தலான் சிக்கன் ரெசிபி இதோ!
Curry Leaves Pepper Chicken : கறிவேப்பிலை, மிளகு கோழி வறுவல்! சூப்பர் சுவையில் ஒரு அசத்தலான் சிக்கன் ரெசிபி இதோ!

ட்ரெண்டிங் செய்திகள்

ஆனால், இல்லாவிட்டாலும் பரவாயில்லை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளலாம். இந்த மசாலாவின் பக்குவம்தான் இந்த குழம்பின் சுவையை அதிகரிக்கச்செய்கிறது.

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்

தேவையான பொருட்கள்

இஞ்சி – ஒரு இன்ச்

பூண்டு – 10 பல்

பச்சை மிளகாய் – 2

மிளகு – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

கறிவேப்பிலை – 5 கொத்து

சின்ன வெங்காயம் – இரண்டு கைப்பிடியளவு

செய்முறை

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு என அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். கடைசியாக சின்ன வெங்காயத்தை வைத்து அதை மட்டும் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். சின்ன வெங்காயம் மசியக்கூடாது.

இந்த மசாலாவை அம்மியில் அரைக்கும்போது, முதலில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை வைத்து நன்றாக அரைக்கவேண்டும். அடுத்து மிளகு, சீரகம், சோம்பை வைத்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

கறிவேப்பிலையை வைத்து அரைத்துவிட்டு, சின்ன வெங்காயத்தை கடைசியாக சேர்த்து ஒன்றிரண்டாக தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்.

ஊறவைக்க தேவையான பொருட்கள்

சிக்கன் (எலும்பு இல்லாதது) – அரை கிலோ

அரைத்த மசாலா விழுது

மிளகாய்ப் பொடி – ஒரு ஸ்பூன்

மஞ்சள் பொடி – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எலுமிச்சை சாறு – அரைப்பழம்

சிக்கனை மேரியனேட் செய்வது எப்படி?

ஒரு பாத்திரத்தல் சுத்தம் செய்த சிக்கனை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் மிளகாய்ப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, எலுமிச்சை பழச்சாறு, அரை மசாலா விழுது என அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும்.

தாளிக்க தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பட்டை – 1

கிராம்பு – 2

ஸ்டார் சோம்பு – 1

ஏலக்காய் – 2

பிரியாணி இலை – 1

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் – கைப்பிடியளவு

தக்காளி – 2 (நறுக்கியது)

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் பட்டை, கிராம்பு, ஸ்டார் சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கிய பின், மேரியனேட் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, போதியளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால், சுவையான கோழி, மிளகு வறுவல் தயார்.

இதை சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை உள்ளிட்ட டிபஃன் வகைகளுக்கும் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். ஒருமுறை இதை ருசித்துவிட்டால் அடிக்கடி செய்து சாப்பிடுவீர்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது, பெரியளவில் காரம் இல்லாமல் இருப்பதால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

WhatsApp channel

டாபிக்ஸ்