தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors : உங்கள் வீட்டின் வரவேற்பறையை நேர்த்தியாக அலங்கரிக்க உதவும் டிப்ஸ்கள் இதோ!

Home Decors : உங்கள் வீட்டின் வரவேற்பறையை நேர்த்தியாக அலங்கரிக்க உதவும் டிப்ஸ்கள் இதோ!

Sep 04, 2024, 12:06 PM IST

google News
Home Decors : மிகச் சிறிய வரவேற்பறை என்றால் அந்த அறைக்கு ஏற்ற அளவில் 4 சேர்கள் பயன்படுத்தலாம். நடுவில் பொதுவாக ஒரு மேஜையை வைக்கலாம். இதற்கு மரத்தால் செய்யப்பட்ட சேர்களை வைக்கலாம் அல்லது மூங்கில் கொண்டு செய்யப்பட்டசேர்களை வைக்கலாம். இது மிகவும் அழகாக இருக்கும்.
Home Decors : மிகச் சிறிய வரவேற்பறை என்றால் அந்த அறைக்கு ஏற்ற அளவில் 4 சேர்கள் பயன்படுத்தலாம். நடுவில் பொதுவாக ஒரு மேஜையை வைக்கலாம். இதற்கு மரத்தால் செய்யப்பட்ட சேர்களை வைக்கலாம் அல்லது மூங்கில் கொண்டு செய்யப்பட்டசேர்களை வைக்கலாம். இது மிகவும் அழகாக இருக்கும்.

Home Decors : மிகச் சிறிய வரவேற்பறை என்றால் அந்த அறைக்கு ஏற்ற அளவில் 4 சேர்கள் பயன்படுத்தலாம். நடுவில் பொதுவாக ஒரு மேஜையை வைக்கலாம். இதற்கு மரத்தால் செய்யப்பட்ட சேர்களை வைக்கலாம் அல்லது மூங்கில் கொண்டு செய்யப்பட்டசேர்களை வைக்கலாம். இது மிகவும் அழகாக இருக்கும்.

Home Decors : ஒவ்வொரு வீட்டின் முக்கியமான இடம் என்றால் அது வரவேற்பறைதான். நமது வீட்டின் வரவேற்பறையை (Drawing Room) உருவாக்குவதில் மிகவும் கவனம் செலுத்துவது முக்கியம். நாம் எவ்வளவு செலவு செய்து வீட்டை கட்டினாலும் நமது ரசனையையும் நமது வீட்டின் அழகையும் புதிதாக வீட்டிற்கு வரும் நபர்களுக்கு தெரியப்படுத்துவது இந்த வரவேற்பறை எனலாம். இதனால் வீடு கட்டும் போது வரவேற்பறையை வடிவமைக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வரவேற்பறையை வடிவமைக்கும் முன்னரே வீட்டின் படிக்கட்டுகள் எங்கு வரும் என்பதை தீர்மானிக்க வேண்டும். வீட்டின் உட்புறமாக வைத்து படிகட்டுகளை அமைத்தால் முன்னதாகவே அதற்கு ஏற்ப திட்டமிட்டு வேலையை தொடங்க வேண்டும். அதேபோல் வீட்டின் வரவேற்பறை அளவை பொறுத்து அங்கு இருக்கும் சாமான்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

அளவான சாமான்கள்

மிகச் சிறிய வரவேற்பறை என்றால் அந்த அறைக்கு ஏற்ற அளவில் 4 சேர்கள் பயன்படுத்தலாம். நடுவில் பொதுவாக ஒரு மேஜையை வைக்கலாம். இதற்கு மரத்தால் செய்யப்பட்ட சேர்களை வைக்கலாம் அல்லது மூங்கில் கொண்டு செய்யப்பட்டசேர்களை வைக்கலாம். இது மிகவும் அழகாக இருக்கும். பெரிய அறை என்றால் 6 சேர்கள் வரை வைக்கலாம்.

காற்றோட்டம்

வீட்டில் வரவேற்பறையை வடிவமைக்கும் போது எப்போதும் வெளிச்சமும் காற்றும் வந்து செல்லும் வகையில் அமைக்க வேண்டும். பொதுவாக வீட்டை திறந்த உடன் வரவேற்பறை இல்லாமல் முன் பகுதியில் ஒரு சிறிய இடம் இருக்கும் படி பார்ப்பது நன்றாக இருக்கும். அதேபோல் வரவேற்பறையின் உயரத்தை கூடுதாலாக அமைப்பது நமது வரவேற்பறையை பிரம்மாண்டமாகவும் விசாலமானதாகவும் காட்டும். மேலும் வரவேற்பறையில் கழிவறை இல்லாமல் பார்த்து கொள்ளலாம். வீட்டில் உட்பகுதியில் படிக்கட்டுகள் வைக்கும் பழக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி உங்கள் வீட்டின் உட்பகுதியில் மாடிப்படி வைக்கிறீர்கள் என்றால் படிக்கட்டுகள் அமைப்பதில் கவனமாக இருங்கள். படிக்கட்டுகள் நேர்த்தியாக இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். படிக்கட்டுகளுக்கு அழகான கைபிடிகளை தேர்ந்தெடுங்கள்.

வரவேற்பறையிலும் செடிகள்

வரவேற்பறையில் நீங்கள் மணிபிளாண்ட், கற்றாழை போன்ற குறைவான பராமரிப்பு கொண்ட தாவரங்களை வளர்க்கலாம். காலையில் எழுந்து வந்தவுடன் வரவேற்பறையில் இப்படி பசுமையான சூழலுக்கு மத்தியில் அமர்ந்து ஒரு காபியோ, டீயோ குடித்தால் அன்றைய நாள் மிகவும் மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் தொடங்கும்.

வண்ணங்கள்

நாம் என்னதான் பிளான் செய்து வீட்டை வடிவமைத்தாலும் அதில் இருக்கும் வண்ணங்கள் தான் அதன் அழகுக்கு மேலும் மெருகூட்டுகிறது. இதனால் பல வண்ணங்களில் நிறங்களை தேர்ந்தெடுக்கலாம். இப்போது பெரும்பாலும் சுவர்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகிறது. இப்படி வித்தியாசமான டிசைன்கள் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டலாம். சுவரில் அழகான ஓவியங்களை மாட்டி வைப்பது இன்னும் அதன் அழகை அதிகரிக்கும். அதேசமயம் அறை முழுவதும் ஒரே வண்ணத்தையும் தேர்ந்தெடுக்கலாம். வரவேற்பறையில் இருக்கும் பொருட்களும். அதே வண்ணத்தில் இருந்தால் பார்க்க அழகாக இருக்கும். அதேபோல் வரவேற்பறையை வடிமைக்கும் போதே அங்கு சிறிய புத்தக அலமாரியை வடிவமைக்கலாம். அதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை தூண்டலாம்.

சுவரில் அழகான கண்ணாடி

அதேபோல் வரவேற்பறையில் அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய கண்ணாடி பொருட்களை வைக்கலாம். இது அழகாக இருக்கும் மேலும் அந்த அறை விசாலமாக இருப்பது போன்ற உணர்வை தரும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை