Home Decors Idea : பழைய பெட் ஷீட், பெட் ஸ்பிரட், போர்வைகளை தூக்கி வீசப்போகிறீர்களா? இதோ இதுபோல் செய்து பாருங்கள்!
Aug 26, 2024, 04:00 PM IST
Home Decors Idea : பழைய படுக்கை விரிப்பை தூக்கி வீசப்போகிறீர்களா? இதோ இதுபோல் செய்து பாருங்கள், உங்கள் வீட்டுக்கு உபயோகமான பொருட்களும் தயாரிக்கலாம்.
உங்கள் படுக்கையறையின் விரிப்பை நீங்கள் மீண்டும் பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு எளிய தையல் வேலை தெரிந்திருந்தால் போதும். உங்களிடம் தையல் இயந்திரம் இருந்தால் மிகவும் சிறப்பு. உங்கள் பழைய படுக்கை விரிப்பை பயன்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் வீட்டில் பழைய பெட் ஸ்பிரட்கள் மடித்து உங்கள் அலமாரியின் மேலே வைக்கப்பட்டுள்ளதா? அவற்றில் இருந்து வீட்டுக்கு உபயோகமான எண்ணற்ற பொருட்களை உருவாக்க முடியும். அவற்றை நீங்கள் மீண்டும் பயன்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
பை
உங்கள் பழைய பெட் ஸ்பிரட்டை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அதை மீண்டும் உபயோப்படுத்த போவதில்லையென்றால், அவற்றை பெரிய சதுரங்களாக வெட்டிக்கொள்ளுங்கள். அதன் ஓரங்களில் தைத்துவிடுங்கள். மூன்று ஓரங்களை மூடிவிட்டு, ஒரு புறத்தை மட்டும் திறந்துவிடுங்கள். அதற்கு ஏற்ப கைப்பிடியை நீளவாக்கில் வெட்டி தைத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு வீட்டிலேயே தயாரிக்கப்படும் பைகளை நீங்கள் சந்தைக்கு பொருட்கள் வாங்க எடுத்துச்செல்லாம். இதுபோல் இரண்டு அல்லது மூன்று அளவுகளில் தைத்து வைத்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் எப்போது கையில் வைத்திருப்பதால் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் குறையும்.
துடைக்கும் துணி
உங்கள் வீட்டில் பழைய பெட் ஷீட்கள் இருந்தால், அவற்றை சிறிதாக வெட்டி, இரண்டு துணிகளை சேர்த்து கொஞ்சம் மொத்தமாக தைத்து வைத்துக்கொண்டு, அவற்றை துடைப்பதற்கு பயன்படுத்தலாம். இவற்றை நீங்கள் வாஷிங் மிஷினிலே போட்டு துவைத்தும் கொள்ளலாம். அதனால் அது அழுக்கானாலும் பயப்பட தேவையில்லை.
குழந்தைகளுக்கான நாப்கின்கள்
பழைய பெட் ஸ்பிரட்கள் மிருதுவாகத்தான் இருக்கும். இது உங்கள் குழந்தைகளுக்கு நாப்கின்களாக உபயோகமாகும். இவற்றை சிறிய சதுரங்களாக வெட்டி, ஓரங்களைத் தைத்துக்கொள்ளவேண்டும். இவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவை மற்றும் இதை நீங்கள் அலசி மீண்டும் உபயோகிக்கலாம்.
குவில்ட்
7 அல்லது 8 என பெட் ஸ்பிரட்கள் சேர்ந்துவிட்டால், அவற்றை நீங்கள் மீண்டும் உபயோகிக்கவில்லையென்றால், அவற்றில் இருந்து குவில்ட்கள் தயாரிக்கலாம். அதை நீங்கள் தையல் கலைஞர்களின் உதவியுடன்தான தைக்கவேண்டும். உங்கள் பழையப்பொருட்களை வீட்டு உபயோகப்பொருளாக்கும் முக்கிய வழிகளுள் ஒன்றாகும்.
துணி
உங்கள் பெட் ஷீட்கள் பழசாகிப்போனாலும், பொலிவை இழக்கவில்லையென்றால், அவற்றை நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள பழைய, தேவையற்ற துணிகளை மூட்டை கட்ட உபயோகித்துக்கொள்ளலாம் அல்லது அவற்றை உங்கள் பரிசுப்பொருட்களின் கிஃப்ட் ராப்பாகவும் பயன்படுத்தலாம். அவற்றை கொடுப்பவர்களுக்கும் அது உதவும்.
வளர்ப்புப் பிராணிகளுக்கு போர்வை
உங்கள் வீட்டில் வளர்ப்பு பிராணிகள் இருந்தால், உங்களின் பழையை போர்வைகளை அவற்றுக்கு போர்வையாக்கலாம். அவற்றுக்குள் குளிர் காலத்தில் குளிரச்செய்யும். மேலும் இதைப் பயன்படுத்தி நீங்கள் அவற்றை வைத்துக்கொள்வதன் மூலம் அவை மேலும் அழகாகவும் இருக்கும். அவற்றுக்கு தேவையான அளவில் நீங்கள் அந்தப்போர்வையை வெட்டிக்கொள்ளவேண்டும்.
டேபிள் கிளாத்
உங்களின் பழைய பெட் ஸ்பிரட்கள் மற்றும் போர்வைகளை நீங்களே நன்றாக மொத்தமாக தைத்து டேபிள் கிளாத்தாக உபயோகிக்கலாம். உங்கள் வீட்டு டேபிள்களின் அளவுக்கு அவற்றை வெட்டி தைத்து அதில் போட்டு பயன்படுத்தலாம்.
தாவரங்களுக்கான போர்வை
உங்கள் வீட்டில் தோட்டம் உள்ளது என்றால், கோடை காலத்தில் தாவரங்களை வெயில் நேரடியாக கடுமையாக தாக்காமல் அதில் இருந்து தப்பிக்க பயன்படுத்தலாம். இதனால் உங்களின் பழைய பெட் ஸ்பிரடுக்கும் நல்லது. இது உங்கள் தாவரங்களை நேரடி சூரிய ஒளி தாக்கி அழிக்காமல் பாதுகாக்க பயன்படும்.
சுற்றுலா ஷீட்
நீங்கள் சுற்றுலா செல்லும்போது, எங்கும் தரையில் அமர்ந்து சாப்பிடுவதற்கு இந்த போர்வைகளை உபயோகிக்கலாம். அதற்காக அவற்றை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பழைய போர்வை துணிகளில் மெல்லிசாகம், சுத்தம் செய்ய எளிதாகவும் இருக்கும். இதை நீங்கள் வீட்டின் வெளிப்புறத்தில் அமர்வதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் புதிய போர்வைகளை கீழே விரித்து அவற்றை அழுக்காக்க தேவையில்லை.
ஹேண்ட் பேகுகள்
அழகான வண்ணங்களில் உங்களிடம் பழைய பெட் ஷீட்கள் உள்ளதென்றால், அவற்றை நீங்கள் ஹேண்ட் பேக்குகளாக மாற்றலாம். உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அதில் எம்ராய்ட்ரியிடலாம். நீளவாக்கில் வாட்டல் பாட்டில், பெரிய புத்தகங்கள் என வைக்க ஏதுவாக பைகளாக வித்யாசமாக தைத்துக்கொள்ளலாம். இதுபோல் நீங்கள் தயாரிக்கும் பேகுகள் உங்களுக்கு தனித்துவ லுக்கைத்தரும். பார்க்க வித்யாசமாகவும் இருக்கும்.
டாபிக்ஸ்