தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Home Decors Idea : சிறிய படுக்கையறை சிங்கார படுக்கையறை என்று மற்றவர்கள் வியக்கவேணடுமா? இதோ ஐடியாக்கள்!

Home Decors Idea : சிறிய படுக்கையறை சிங்கார படுக்கையறை என்று மற்றவர்கள் வியக்கவேணடுமா? இதோ ஐடியாக்கள்!

Priyadarshini R HT Tamil

Aug 30, 2024, 05:02 PM IST

google News
Home Decors Idea : சிறிய படுக்கையறை சிங்கார படுக்கையறை என்று மற்றவர்கள் வியக்கவேணடுமெனில், இந்த ஐடியாக்களை பின்பற்றுங்கள் போதும்.
Home Decors Idea : சிறிய படுக்கையறை சிங்கார படுக்கையறை என்று மற்றவர்கள் வியக்கவேணடுமெனில், இந்த ஐடியாக்களை பின்பற்றுங்கள் போதும்.

Home Decors Idea : சிறிய படுக்கையறை சிங்கார படுக்கையறை என்று மற்றவர்கள் வியக்கவேணடுமெனில், இந்த ஐடியாக்களை பின்பற்றுங்கள் போதும்.

உங்கள் படுக்கையறை சிறியதோ அல்லது பெரியதோ அதற்கு ஒரு சின்ன அலங்காரம் செய்தாலே போதும் அது பிரமாண்டமானதாகிவிடும். அது என்ன என்று தெரிந்துகொள்ள உங்களுக்கு சில ஐடியாக்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று பாருங்கள். சின்ன படுக்கை சிங்கார படுக்கை என்று உங்கள் படுக்கையறையைப்பார்த்து அனைவரும் வியக்கவேண்டுமா? இதோ இவற்றை பின்பற்றுங்கள். நீங்கள் வீடு மாற்றுகிறீர்கள் என்றால் அங்கு சிறிய படுக்கை அறைதான் உள்ளது. இத்தனை நாள் நீங்கள் பயன்படுத்தியது பெரிய அறை, ஆனால் இதில் என்ன அலங்காரம் செய்வது, சிறிய இடத்தை எப்படி பயன்படுத்துவது என்ற குழப்பங்கள் உங்களுக்கு உள்ளதா, அதைப்போக்கத்தான், உங்கள் சிறிய படுக்கை அறையைக்கூட சிறப்பாக அலங்கரிக்க உங்களுக்கு ஏற்ற பட்ஜெட்டிலே செய்துகொள்ள இங்கு யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மிதக்கும் ஷெல்ஃப்கள்

உங்கள் படுக்கையறை சிறியதாக உள்ளது. ஆனால் உங்களிடம் அலங்கரிக்க எண்ணற்ற பொருட்கள் உள்ளது எனில், உங்கள் படுக்கையறையில் அழகாக மிதக்கும் ஷெல்ஃப்களை உருவாக்குங்கள். அது உங்களுக்கு தேவையான பொருட்களை வைக்கவும், அழகாகவும் இருக்கும். புத்தகங்களை அடுக்கிக்கொள்ளுங்கள். குறிப்பாக நீங்கள் உறங்கச்செல்லும்முன் படிக்கும் புத்தகங்களை அதில் வைத்தால் படித்துவிட்டு படுக்க ஏதுவாக இருக்கும்.

பர்னிச்சர்கள்

சிறிய படுக்கையறை என்றால், நீங்கள் அதில்தான் குறைந்தபட்சம் படுக்க உதவும் படுக்கைகள், பாய்கள், மெத்தைகள், போர்வைகள், தலையணைகள் என அடுக்கிவைக்கவேண்டும். எனவே அதற்கு ஏற்றாற்போல் நீங்கள் உங்கள் படுக்கையறையில் பர்னிச்சர்களை வாங்குகள், அடியில் டிராவைத்த கட்டிகள், ஷெல்ஃப்கள், அறைகள் கொண்ட டேபிள்கள், தேவையில்லையென்றால் மடித்து வைக்கும் வகையில் உள்ளதை வாங்கிக்கொள்ளுங்கள்.

கண்ணாடி

உங்கள் படுக்கையறையில் சுவருடன் ஒட்டிய கண்ணாடிகளை வைத்தால், அது உங்கள் படுக்கையறையை விசாலமாகக் காட்ட உதவும். இதனால் உங்களுக்கு கூடுதல் இடம் கிடைக்கும். அதனுடனே வார்ட்ரோப்களை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எளிதாக இருக்கும்.

சுவர்

படுக்கையறை சுவர்களில் வண்ணங்கள் புதிதாகவும், தற்போது டிரெண்டிங்கில் உள்ளதாகவும் இருக்கட்டும். சிவப்பு, ஊதா போன்ற வழக்கமான வண்ணங்களாக இல்லாமல் அவை வேறு வகையில் இருக்கட்டும். சுவர்களுக்கு நீங்கள் டெக்ஸ்சர்கள் கொடுக்கலாம்.

அழகான கர்டன்கள்

உங்கள் படுக்கையறையின் அழகை மேலும் அதிகரிக்க அதன் ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு மாற்றப்படும் கர்டன்கள் அழகானதாக இருக்கட்டும். உங்கள் கர்ட்டன்களை சிலிங்சில் இருந்தே தொங்கட்டும். கதவுகளிலும், ஜன்னல்களில் இருந்தும் வேண்டாம்.

சுவர்களில் ஓவியங்கள்

உங்கள் படுக்கையறை சுவர்களில் அழகான ஓவியங்களை நீங்கள் தீட்டினால், அது உங்கள் படுக்கையறைக்கு அழகிய தோற்றத்தைதரும்.

சுவர்களில் போஸ்ட் கார்ட்கள்

உங்கள் சுவர்களில் ஒட்டுவதற்கு ஏதுவான போஸ்ட் கார்ட்டுகளை வித்யாசமான முறையில் வண்ணமயமாக வழங்குகின்றன. எனவே அவற்றை வாங்கி பயன்படுத்துங்கள். இது பல்வேறு வடிவங்களில் வருகிறது. இது உங்கள் சுவரின் பெரும்பாலான இடத்தை பிடித்துக்கொள்ளும்.

விளக்குகள் மாற்றம்

உங்கள் படுக்கையறைக்குள் அழகிய விளக்குகளை பொருத்துங்கள். அது உங்கள் வீட்டுக்கு அழகான தோற்றத்தை தரும். அந்த விளக்குகள் மிகவும் பிரகாசமானதாக இருக்கக்கூடாது. அது மிகவும் மைல்ட்டான வெளிச்சத்தை பரப்புவதாக இருக்கவேண்டும்.

தரைவிரிப்புகள்

அழகான தரைவிரிப்புகள், ஜமுக்காளங்களை பயன்படுத்துங்கள். உங்கள் தரையை அவை அழகாக காட்டுவதுடன், சின்ன படுக்கையறையைக் கூட சிங்காரமானதாகக் காட்டும். எனவே நல்ல தேர்ந்தெடுத்த தரைவிரிப்புக்களை பாருங்கள்.

தாவரங்கள்

உங்கள் படுக்கையறை சிறியதாக இருந்தாலும், அதில் உள்ள ஜன்னல்கள் மற்றும் கிடைக்கும் இடங்களில் எல்லாம், தொட்டிகளில் செடிகளை நடுங்கள். அவை எந்த மாதிரியான மலர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். செயற்கை தொட்களாகக் கூட இருக்கலாம் அல்லது இயற்கை செடிகளைக் கூட வைத்துக்கொள்ளலாம். உங்கள் படுக்கையறைக்கு நல்ல அழகைத்தரும். அவற்றை தொங்கும் ஷெல்ஃப்கள் அல்லது படுக்கையறையோர டேபிள்கள் என அதில் வைத்துக்கொள்ளலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை