காமெடி சிரிக்க மட்டுமல்ல! சிந்திக்கவும் தான் என நிரூபித்த விவேக் பிறந்தநாள்! சுவாரசிய தகவல்கள் இதோ!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  காமெடி சிரிக்க மட்டுமல்ல! சிந்திக்கவும் தான் என நிரூபித்த விவேக் பிறந்தநாள்! சுவாரசிய தகவல்கள் இதோ!

காமெடி சிரிக்க மட்டுமல்ல! சிந்திக்கவும் தான் என நிரூபித்த விவேக் பிறந்தநாள்! சுவாரசிய தகவல்கள் இதோ!

Nov 19, 2024 04:54 PM IST Suguna Devi P
Nov 19, 2024 04:54 PM , IST

  • காமெடி நடிகனால் என்ன மற்றவர்கள் துன்பங்களை மறந்து சிரிக்க வைக்க முடியும் என்பதையும் கடந்து சிந்திக்க வைக்கவும் முடியும் என்பதை தனது நகைச்சுவைகளின் மூலம் புரிய வைத்ததோடு, செய்தும் காட்டியவராக மறைந்த நடிகர் விவேக் இருந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை என்ற ஒரு தசாப்தத்தின் ஒரு பெரிய அத்தியாயம் தான் விவேக். தமிழ்  திரை ரசிகர்களால் ஹீரோக்கள் அளவிற்கு கொண்டாடப்பட வேண்டிய அத்தனை தகுதியும் உள்ளவர் தான் விவேக். இவரின் வரவு ரசிகர்களுக்கு கிடைத்த பெரும் வரம் என்று தான் கூற வேண்டும். இவரின் கருத்து ஆழம் மிக்க காமெடி காட்சிகள் நெத்தி பொட்டில் அடித்தாற் போல இருக்கும். 

(1 / 7)

விவேக்கை பழம்பெரும் காமெடி நடிகர் என்.எஸ். கிருஷ்ணருடன் ஒப்பிட்டு, அவரை கலைவாணர் என அழைத்தது போல் நடிகர் விவேக் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்டார். தனக்கு மக்களால் கொடுக்கப்பட்ட இந்த அடைமொழிக்கு ஏற்ப சிரக்காமலேயே மற்றவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நடிகராக இருந்து வந்தார்.

(2 / 7)

நடிகர் விவேக் திரைத் துறைக்கு ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்துள்ளார். இவர் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு நடித்த மனதில் உறுதி வேண்டும் படத்தில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் காமெடி பாத்திரத்திலும் சிறப்பாக நடித்து இருப்பார். 

(3 / 7)

நடிகர் விவேக் திரைத் துறைக்கு ஒரு இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் வந்துள்ளார். இவர் முதன் முதலாக 1987 ஆம் ஆண்டு நடித்த மனதில் உறுதி வேண்டும் படத்தில் எழுத்தாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் காமெடி பாத்திரத்திலும் சிறப்பாக நடித்து இருப்பார். (Youtube)

2014 ஆம் ஆண்டு வெளி வந்த சந்திரா என்ற படத்தில் தமிழ் மற்றும் கன்னடம் என இரு மொழிகளிலும் நகைச்சுவை நடிகராக விவேக் நடித்து இருப்பார். கன்னட மொழியை பிழையில்லாமல் அவ்வளவு அற்புதமாக பேசி நடித்து இருப்பார் விவேக். 

(4 / 7)

நடிகர் விவேக்கின் உண்மையான பெயர் விவேகானந்தன். சங்கரன்கோவிலைச் சேர்ந்த விவேக் தனது கல்லூரி படிப்பை முழுவதும் மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் முடித்துள்ளார். தனது நகைச்சுவை உணர்வு மதுரை மக்களிடம் இருந்தே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

(5 / 7)

நடிகர் விவேக் ரஜினி, விஜய், அஜீத் என கிட்டத்தட்ட அனைத்து பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார். அவர் வாழ்நாளில் மொத்தமாக 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆனால் இறுதி வரை கமல் ஹாசனுடன் நடிக்காமல் இருந்தார். இந்தியன் 2 படத்தில் இதனை சமன் செய்யும் விதத்தில் AI தொழில்நுட்பம் உதவியால் அப்படத்தில் விவேக் வந்திருப்பார். 

(6 / 7)

மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த மரியாதையும், பற்றும் கொண்டவராக இருந்து வந்த விவேக், கலாமின் வலியுறுத்தலின்படி தனது வாழ்நாள் லட்சியமாக எடுத்து கொண்டு சுமார் 30 லட்சம் மரங்களை நட்டுள்ளார்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்