திருமண வயதில் உள்ள ஆண்கள், பெண்கள் உளவியல் ரீதியாக எப்படி தயார் ஆக வேண்டும்?

By Marimuthu M
Nov 30, 2024

Hindustan Times
Tamil

திருமணத்துக்கு முன்பு இருந்த வாழ்வு என்பது வேறு, திருமணத்துக்குப் பின் இருக்கும் வாழ்வு என்பது வேறு என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

திருமணம் என்பதில் தான் சொன்னது தான் சரி என்னும் அணுகுமுறை இல்லாமல், மனசாட்சிப்படி எந்தப்பக்கம் நியாயம் இருக்கிறதோ அதன்படி முடிவு எடுக்க வேண்டும். 

ஒவ்வொருவருக்கும் ஒரு பிரைவைசி இருக்கிறது. அதைத்தாண்டி, அதற்குள் போகக்கூடாது. 

 ஒருவரது விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். அதை உதாசீனப்படுத்தக்கூடாது. 

ஒருவரது குடும்பப் பழக்கங்கள், நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஏளனப்படுத்தக் கூடாது. 

கணவன் - மனைவியிடம் இருக்கும் குறைகளை நேரடியாக மனம் நோகாமல் சொல்லவேண்டும். அதைவிட்டு, குடும்ப உறுப்பினர்களிடம் சொல்லக்கூடாது.  

கணவன் மனைவி விவகாரத்தில் மிக முக்கியமானது ஒருவர் மீது மற்றொருவருக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது. அது கிடைக்க மாதங்கள் ஆகலாம், அதற்காக காத்திருக்கும் பக்குவம் வேண்டும். 

 எதற்கெடுத்தாலும் கோபப்படக் கூடாது. பொறுமையும் நிதானமும் தேவை. அதனால் அதற்கும் முன்பே மனதளவில் தயாராக வேண்டும். 

குளிர் காலத்தில் உடல் எடையைக் குறைப்பதற்கான உணவுகள்