Heat Wave Protection : வெப்ப அலை வீசும் கோடை காலத்தில் உங்கள் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்க்கும் வழிகள்!
Apr 13, 2024, 03:04 PM IST
Heat Wave Protection : கோடை காலத்தில் வெப்ப அலை வீசி வரும் வேளையில், உங்கள் உடலின் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.
வெப்ப அலையால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு
இப்போது கடுமையான வெயில் நம்மை தாக்கி வருகிறது. வெப்ப அலையில் சிக்கி மக்கள் தவித்து வருகிறார்கள். எனவே இந்த வெயில் காலத்தில் நாம் நம் உடலின் நீர்ச்சத்தை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம். ஏனெனில், உங்கள் உடல் ஆரோக்கியத்தை காக்க நீர்ச்சத்து அவசியம்.
உடலில் போதிய நீர்ச்சத்து இருந்தால்தான் உடல் சரியான முறையில் இயங்கும். குறிப்பாக வெப்ப அலை வீசும் நாட்களில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே உங்களுக்கு நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக வைத்திருக்க இந்த வழிகளை பின்பற்றுங்கள்.
தண்ணீர் முக்கியம்
ஒரு மடக்கு தண்ணீரை அடிக்கடி பருகுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு தாகம் ஏற்படும்போது கட்டாயம் தண்ணீர் பருகுங்கள். தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் பருகுவது நல்லது.
தாகம் வரும் வரை காத்திருந்தால், உங்கள் உடல் ஏற்கனவே நீர்ச்சத்தை இழந்துவிட்டது என்பதன் அறிகுறியாகும். எப்போதும் உங்களுடன் ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துச்செல்லுங்கள். நாள் முழுவதுமே போதிய அளவு தண்ணீர் பருகுவதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கும் உணவுகள்
உங்கள் உணவில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். தர்ப்பூசணி, வெள்ளரி, ஸ்ட்ராபெடி மற்றும் ஆரஞ்சு பழங்களை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் உள்ளிட்ட நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளையும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த காய்கறிகளும், பழங்களும் சுவையானது மட்டுமல்ல உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கக்கூடியவையும் ஆகும். உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை வழங்கக்கூடியவை.
எலக்ட்ரோலைட்களை உட்கொள்வது
எலக்ட்ரோலைட்கள் அதிகம் நிறைந்த உணவுகளையும், தண்ணீரையும் பருகவேண்டும். இளநீர், விளையாட்டு வீரர்கள் பருகும் பானங்கள், வாழைப்பழம் ஆகியவை எலக்ட்ரோலைட்கள் நிரம்பிவை. இது உங்கள் உடலின் தண்ணீர் சமநிலையை முறையாக பராமரிக்கும்.
சரியான உடைகள்
குறைந்தளவு எடைகொண்ட உடைகள், மூச்சுவிட முடிந்தளவுக்கு இறுக்கமில்லாத உடைகள், உங்கள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத உடைகள் ஆகியவற்றை உடுத்திக்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் சருமம் எளிதாக சுவாசித்து வியர்வையை எளிதாக ஆவியாக்கும்.
வெளிநிறத்தில் தளர்வான ஆடைகள் உடலுக்கு நல்லது. இது உங்களுக்கு சூரிய ஒளியை பிரிதிபலித்து உங்கள் உடலை காக்கும். உடல் வெப்பநிலையை சீராக வைத்து, உடலின் நீர்ச்சத்துக்கள் இழக்காமல் பாதுகாக்கும். அதிக வியர்வையைத் தடுக்கும்.
நிழல் மற்றும் குளிர்ந்த சூழல்
கடும் வெப்ப நேரங்களில் நிழலிலே இருங்கள், வெளியில் இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் நிழலையே தேர்ந்தெடுங்கள். கிடைக்கும்போதெல்லாம் நிழலில் அமர்ந்துகொள்ளுங்கள். வெயிலில் நேரடியாக வேலை செய்யாதீர்கள்.
வெளியில் செல்லவேண்டும் அல்லது வெளியில் வேலை பார்க்க வேண்டுமெனில், அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொண்டு நிழலில் அமர்ந்து இளைப்பாறிக்கொள்ளுங்கள். உடலை குளிர்ச்சியாக்கும் வேலைகளை செய்யுங்கள்.
மது மற்றும் காபி பானங்கள் கூடாது
ஆல்கஹால் மற்றும் காஃபைன் கலந்த பானங்களை அருந்தாதீர்கள். இவை உடல் நீர்ச்சத்தை இழப்பதற்கு காரணமாகின்றன. உங்கள் உடல் அதிக சிறுநீரை வெளியேற்ற காரணமாகி உடல் நீர்ச்சத்தை இழக்க உதவும்.
ஆனால் ஒரு குளிர்ச்சியான பீர் அல்லது குளிர் காஃபியோ கடும் வெயிலில் உங்களுக்கு சாப்பிடும் ஆர்வத்தை ஏற்படுத்தினால், அதிகம் உட்கொள்ளாதீர்கள். குறைவான அளவு மட்டும் எடுத்துக்கொண்டு, அதிக நீரிழிப்பை தவிருங்கள்.
உங்கள் சிறுநீரின் நிறத்தை பாருங்கள்
உங்கள் சிறுநீரின் நிறத்தில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உடலின் நீர்ச்சத்து அளவை காட்டுவதில் சிறுநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரின் நிறம் மற்றும் அளவைப் பொறுத்து அதை நீங்கள் கணித்துவிடலாம். வெளி மஞ்சள் என்பதுதான் சிறுநீரின் நிறம்.
அடர் மஞ்சள் அல்லது வேறு ஏதேனும் நிறங்களில் இருந்தால் உடனே நீங்கள் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். உடல் நீர்ச்சத்தை இழக்கும்போது சிறுநீர் அடர் மஞ்சள் நிறமாகிறது. எனவே அதை வைத்தே நீங்கள் தண்ணீர் அதிகம் பருகவேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
மருந்துகள்
சில மருந்துகள், வியர்வையை வெளியேற்றும் தன்மை கொண்டவை. இதனால் உங்கள் உடலின் தண்ணீர் சத்து வியர்வையானக வெளியேறி, உங்கள் உடலில் நீர்ச்சத்துக்கள் குறைய வாய்ப்பாகிவிடும். எனவே நீங்கள் எதாவது மருந்து வழக்கமாக எடுத்துக்கொள்கறீர்கள் என்றால் உங்கள் மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்