HT Yatra: காமத்தில் திரிந்த மக்கள்.. நெற்றிக்கண்ணை திறந்த சிவபெருமான்.. கடுமையான தவத்தில் இறங்கிய ரதிதேவி..!
தமிழ்நாட்டில் சிவபெருமான் கோயில்கள் இல்லாத இடமே கிடையாது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயில்களில் ஒரு சிறப்பு மிகுந்த கோயில்தான் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில்.
உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்களை, ஆத்மார்த்தமான பக்தர்களை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான். உலகெங்கிலும் கோயில் கொண்டு பக்தர்களை அருள்பாலித்து வருகிறார் சிவபெருமான். இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொரு சிவபெருமான் கோயில்களுக்கும் ஒவ்வொரு புராண வரலாறு இருந்து வருகிறது.
தமிழ்நாட்டில் சிவபெருமான் கோயில்கள் இல்லாத இடமே கிடையாது. பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கோயில்களில் ஒரு சிறப்பு மிகுந்த கோயில்தான் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பாலாம்பிகா சமேத கார்க்கோடேஸ்வரர் திருக்கோயில். கடக ராசிக்காரர்களுக்கு ஏற்ற தலமாகவும், சர்வதேசத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு தோஷ நிவர்த்தி தலமாகவும் இந்த கோயில் விளங்கி வருகின்றது.
தல பெருமை
இந்தக் கோயிலில் சிவபெருமான் கார்கோடேஸ்வரர் என்ற பெயரிலும் பார்வதி தாயார் பாலாம்பிகா என்ற பெயரிலும் அருள்பாலித்து வருகின்றனர். கார்கோடன் என்பவர் நாகங்களின் அசுரனாக இருந்து வந்துள்ளார் தனது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானை தவம் இருந்து பூசித்துள்ளார். நாகங்களின் தலைவனான கார்கோடன் வழங்கிய தளம் என்பதால் இவர் கார்க்கோடேஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.
இருப்பினும் இங்கு இருக்கக்கூடிய கல்வெட்டுகள் இன்று கோயிலை கட்டியது ராஜகேசரி வர்மன் என சுட்டிக்காட்டுகிறது. இவர் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் தாத்தாவாகும்.
தல வரலாறு
உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்கள் அனைத்தும் இன்பமாக வாழ வேண்டும் என பூலோகத்தை படைத்தார். மனித குலம் உருவான பிறகு காம எண்ணத்தில் படாத பாடு பட்டு மிக மோசமான சூழ்நிலையை நோக்கி பயணம் செய்து வந்துள்ளார்கள். அப்படிப்பட்ட மக்கள் இருக்கும் சூழ்நிலையிலும் சில சான்றோர்கள் மற்றும் முனிவர்கள் எப்படி இயங்கும் காம இச்சையிலிருந்து மனித குலத்தை காப்பாற்ற வேண்டும் என நினைத்துள்ளனர்.
இதுகுறித்து அனைவரும் சேர்ந்து பூலோகத்தின் நிலை பற்றி சிவபெருமானிடம் கூறியுள்ளனர். இதன் காரணமாக சூரிய பகவான் தனது நெற்றிக்கண்ணால் காம தேவன் எனக் கூறப்படும் மன்மதனை எரித்தார். மன்மதனான தனது கணவனை இழந்த ரதிதேவி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். தனது கணவன் மீண்டும் மீண்டும் எனக்கூறி தனது தவத்தை மேற்கொண்டார்.
காம தேவனை வதம் செய்த காரணத்தினால் பூலோகத்தில் இனப்பெருக்கம் குறைந்து போனது. ரதிதேவி ஒரு பக்கம் தனது கணவன் வேண்டுமெனக் கூறி தவம் இருந்தார். இனப்பெருக்கத்தை மீண்டும் கொண்டு வருவதற்காகவும் ரதிதேவியின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காகவும் சிவபெருமான் இறங்கி வந்தார்.
ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரிவது போல் மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்தார் சிவபெருமான். தற்போது கோயில் இருக்கக்கூடிய இடத்தில் தான் ரதிதேவிக்கு சிவபெருமான் வரத்தை கொடுத்துள்ளார். காமனின் மனைவியான ரதிதேவி தவம் செய்த தலம் என்கின்ற காரணத்தினால் இந்த ஊர் காமரதிவல்லி என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் அது காமரசவல்லி என்று மருவியது.
இது புராண கதையாக இருந்தாலும் இதை உறுதி செய்வது போல் இந்த கோயிலில் தனது கணவனை உயிர்ப்பிக்க வேண்டி இறைவனிடம் இரு கரங்களை ஏந்தி ரதிதேவி மாங்கல்ய பிச்சை கேட்பது போல் செப்புத் திருமேனி உள்ளது. இந்த ஊரில் மாசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று காமன் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
தல சிறப்புகள்
குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்படக்கூடிய சிக்கல்கள், பிரிந்து வாழக்கூடியவர்கள், கருத்து வேறுபாடு உள்ளவர்கள் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் தளமாக இந்த கோயில் விளங்கி வருகின்றது. இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய கார்கோடேஸ்வரரை சிக்கலில் இருக்கக்கூடியவர்கள் வழிபட்டால் வாழ்க்கையில் வெளிச்சம் உண்டாகும் என்பது ஐதீகமாக உள்ளது.
தல அமைவிடம்
இந்த திருக்கோயில் அரியலூர் மாவட்டத்தில் காமரசவல்லி என்ற ஊரில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9