Benefits of Lemon Tea : எலுமிச்சை பழத் தேநீர் பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Lemon Tea : எலுமிச்சை பழத் தேநீர் பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?

Benefits of Lemon Tea : எலுமிச்சை பழத் தேநீர் பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil
Published Apr 12, 2024 04:53 PM IST

Benefits of Lemon Tea : இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் செரிமானத்தை தூண்டுகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Benefits of Lemon Tea : எலுமிச்சை பழத் தேநீர் பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?
Benefits of Lemon Tea : எலுமிச்சை பழத் தேநீர் பருகுவதால் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன?

எலுமிச்சையில் எண்ணற்ற நற்குணங்கள் உள்ளன. சிறுநீரக கற்களை நீக்குகிறது மற்றும் சருமத்தை பளபளபாக்குகிறது மற்றும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது.

எலுமிச்சை பழத் தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் – 1

இஞ்சி – சிறிதளவு

தண்ணீர் - ஒன்றரை கப்

வெல்லம், தேன், நாட்டுச்சர்க்கரை (ஏதேனும் ஒன்று) – சிறிதளவு

எலுமிச்சை ஸ்லைஸ் – 2

செய்முறை

தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் எலுமிச்சை சாறு, இஞ்சி, வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரையை சேர்த்து அனைத்தும் சேரும் வகையில் நன்றாக கலக்க வேண்டும்.

பின்னர் அதை வடித்து எலுமிச்சை ஸ்லைஸ்களை வைத்து அலங்கரித்து பரிமாறவேண்டும்.

மிதமான சூட்டில் இதை பருகினால், உடலுக்கு இதமாக இருக்கும்.

எலுமிச்சையில் அதிகளவில் வைட்டமின் சி சத்து உள்ளது. இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் உள்ள ஃபோலேட் இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியச்சத்து, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களை சமமாக் இருப்பதை முறைப்படுத்துகிறது.

இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் செரிமானத்தை தூண்டுகிறது. வெல்லத்தில் இரும்புச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ரத்த சிவப்பணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது

எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் அதிகம் உள்ளது. அது கல்லீரலை பாதிக்கிறது. வெறும் வயிற்றில் எலுமிச்சை தேநீர் பருகினால் உடலில் தேங்கியுள்ள கழிவுகளும், நச்சுகளும் காலையிலே வெளியேற உதவும். கல்லீரலை பாதுகாக்க உதவும். உடலை முழுமையாக சுத்தம் செய்கிறது.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

எலுமிச்சை தேநீரில் சிறிதளவே கார்போஹைட்ரேட்கள் உள்ளது. அது கொஞ்சம் சர்க்கரை மற்றும் நார்ச்சத்துக்களாக உள்ளன. இந்த நார்ச்சத்துக்கள், குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகின்றன. இது உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஒரு கப் எலுமிச்சை தேநீரை பருகும்போது அதிகமாக சாப்பிட்ட உணவு செரிமானமாவதை அதிகரிக்கிறது.

தொற்றுக்களை எதிர்த்து போராடுகிறது

எலுமிச்சை தேநீரில், தேன் கலந்து உணவு உண்டபின் பருகினால், சளி, இருமல் ஆகியவை ஏற்படும். உடல் வலி மற்றும் மார்புச்சளியை கரைக்கும். எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நெஞ்சில் கட்டிக்கொள்ளும் சளியை போக்குகிறது. தொற்றுகளில் இருந்து விரைவில் நிவாரணம் கொடுக்கிறது. குறிப்பாக மழைக்காலங்களில் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

எலுமிச்சை தேநீரில் உள்ள உட்பொருட்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. உங்கள் முகத்தில் பொலிவை அதிகரிக்கிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், முகப்பருக்களை எதிர்க்கிறது. ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.

இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

எலுமிச்சையில் உள்ள தாவல ஃப்ளேவனாய்ட்கள், கொழுப்பை குறைக்கிறது. தினமுமே மாலையில் எலுமிச்சை தேநீர் பருகுவது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பக்கவாதத்தில் இருந்தும் காக்கிறது.

ஈறுகளில் வீக்கத்தை போக்குகிறது

ஈறுகளில் உள்ள வீக்கத்தை எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் நீக்குகிறது. சிறந்த வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

அறுவைசிகிச்சைக்கு பின் பிரச்னைகளைப் போக்குகிறது

அறுவைசிகிச்சைக்குப்பின், ரத்தம் மற்றும் தசைகளில் கடும் வலி ஏற்படும். இதுதான் அறுவைசிகிச்சையின் பக்கவிளைவுகளாகும். எலுமிச்சை தேநீரில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியத்தை உறிஞ்சுகிறது. இது உடலில் தேவையில்லாத பொருட்களை நீக்குகிறது. இது நல்ல ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் அறுவைசிகிச்சைக்கு பிந்தைய உடல் சோர்வு மற்றும் அசதி ஆகியவை நீங்குகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.