தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கருகருவென முடி வளரும்; பச்சை மிளகாய் - கறிவேப்பிலை தொக்கை செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்! 15 நாட்கள் கெடாது!

கருகருவென முடி வளரும்; பச்சை மிளகாய் - கறிவேப்பிலை தொக்கை செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள்! 15 நாட்கள் கெடாது!

Priyadarshini R HT Tamil

Oct 15, 2024, 01:42 PM IST

google News
கருகருவென முடி வளரும். பச்சை மிளகாய் - கறிவேப்பிலை தொக்கை செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள். 15 நாட்கள் கெடாது, பரபரப்பான நாட்களுக்கு உகந்தது.
கருகருவென முடி வளரும். பச்சை மிளகாய் - கறிவேப்பிலை தொக்கை செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள். 15 நாட்கள் கெடாது, பரபரப்பான நாட்களுக்கு உகந்தது.

கருகருவென முடி வளரும். பச்சை மிளகாய் - கறிவேப்பிலை தொக்கை செய்து வைத்துவிட்டு ரெஸ்ட் எடுங்கள். 15 நாட்கள் கெடாது, பரபரப்பான நாட்களுக்கு உகந்தது.

கறிவேப்பிலை தொக்கை இப்படி செய்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துவிடுங்கள். 15 நாட்கள் வரை வெளியில் வைத்துக்கொள்ளலாம். கெட்டுப்போகாது. சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். எனவே பரபரப்பான வேலை நாட்களில் இந்த தொக்கு, மாவு அரைத்து வைத்துவிடுங்கள். காலை, இரவு டிபஃன், மதியம் சாதம், தயிர், ரசம் வைத்தால் போதும், இந்த ஒன்று தொட்டுக்கொள்ள போதுமானது. சாதத்துக்கு காய்கறி தேவையில்லை. அப்பளம், வடகம் என வறுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம். இதை செய்து வைத்துக்கொண்டு உங்கள் பரபரப்பான நாட்களை கடந்து விடுங்கள். ரிலாக்ஸான நாட்களில் உங்களுக்கு என்ன தேவையான கிராண்ட் மீல்ஸை செய்து சாப்பிட்டுக்கொள்ளலாம். கறிவேப்பிலையிலேயே எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உங்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படாது. எனவே கறிவேப்பிலையை உங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. கறிவேப்பிலை தாளிக்க மட்டும் பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்படும் ஒன்றுதான். எனவே இதுபோல் செய்துவிட்டால் அதன் சத்துக்களும் முழுமையாகக் கிடைத்துவிடும்.

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை – 3 கைப்பிடியளவு

பச்சை மிளகாய் – 15

புளி – எலுமிச்சை அளவு

கல் உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 குழிக்கரண்டி

கடுகு – ஒரு ஸ்பூன்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன்

செய்முறை

கழுவி சுத்தம் செய்த கறிவேப்பிலை, பச்சை மிளகாய், புளி, கல் உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி அரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன் அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பெருங்காயத்தூள் தூவி அரைத்த விழுதை சேர்த்து மூடி வைக்கவேண்டும்.

நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கினால் சூப்பர் சுவையான கறிவேப்பிலை தொக்கை எளிதாக செய்து முடித்துவிடலாம். இதை சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். தயிர் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என அனைத்து வெரைட்டி சாதங்களுடனும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். ஆரோக்கியமும் தரும்.

இதன் சிறப்பே இதை நீங்கள் 15 நாட்கள் வரை வெளியில் வைத்தே பயன்படுத்திக்கொள்ளலாம். ஃபிரிட்ஜில் வைக்க தேவையில்லை. உங்களுக்கு வேலைப்பளு அதிகம் இருக்கும் நாட்களில் இதுபோல் செய்து வைத்துக்கொண்டால் அது உங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். எனவே இந்த ரெசிபியை செய்து கட்டாயம் பலன்பெறுங்கள்.

கறிவேப்பிலையின் நன்மைகள்

கறிவேப்பிலை கொழுப்பை குறைக்க உதவுகிறது. செரிமானத்தை சீராக்குகிறது. கல்லீரலை காக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. தொற்றுகள் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பக்கவிளைவுகளை தடுக்கிறது. காயங்களை ஆற்றுகிறது. நீரிழிவு நோய்க்கு எதிரான உட்பொருட்கள் இதில் அடங்கியுள்ளது. ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் அந்தமான் தீவுகளில் பயரிடப்படுகிறது. இந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஆஸ்திரேலியா, பசிபிக் தீவுகள் மற்றும் ஆப்பிரிக்காவிலும் பயிரடப்படுகிறது.

இதுபோன்ற எண்ணற்ற எளிய ரெசிபிக்கள், தகவல்கள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்களை ஹெச்.டி தமிழ் தொகுத்து வழங்கி வருகிறது. எனவே நீங்கள் இதுபோன்ற தகவல்களைப் பெற எங்கள் இணையப் பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை