இட்லி மாவு புளிக்காமல் இருக்க; தோசை மொறுமொறுக்க என்ன செய்யவேண்டும்? சமையல் சிறக்க உதவும் குறிப்புகள்!
இட்லி மாவு புளிக்காமல் இருக்க; தோசை மொறுமொறுக்க என்ன செய்யவேண்டும்? என எண்ணற்ற சமையல் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
சமையல் ருசிக்க வேண்டுமெனில் நாம் சில குறிப்புகளை பின்பற்றினால் உங்கள் சமையலின் ருசி அதிகரிக்கும். சமைக்கும்போது சில சிறிய விஷயங்களே உங்கள் சமையலின் ருசியை அதிகரித்துவிடும். சமைப்பது மிகவும் கடினமான விஷயம். ருசியான சமையல் என்பது அதனினும் கடுமையானது. எனவே உங்கள் சமையல் ருசிக்க நீங்கள் சில குறிப்புகளை பின்பற்றவேண்டும். அப்போது உங்கள் சமையலின் ருசி அதிகரிக்கும். சமைக்கும்போது நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று இங்கு தெரிந்துகொள்ளுங்கள். இதன்முலம் உங்கள் சமையலின் ருசி மட்டும் மேம்படாது, சமையலறையில் சில பொருட்களின் சேதமும் குறையும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி பாருங்களேன் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.
சமையல் குறிப்புகள்
உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும். உருளைக்கிழங்கு கழுவி தண்ணீரை பயன்படுத்தி முகம் கழுவினால் முகமும் பளபளக்கும்.
ரசம் செய்யும்போது அதனுடன் தேங்காய் தண்ணீரைச் சேர்த்து படர்ந்து வர இறக்கினால், ரசத்தின் ருசி மிக அருமையாக இருக்கும்.
வாழைப்பழத்தின் காம்பு பகுதியில் ஒரு பாலித்தீன் பையை வைத்து சுற்றி வைதால், நான்கு நாட்கள் வரை கருகாமல் இருக்கும்.
கறிவேப்பிலையை ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் நீண்ட நாட்கள் காயாமல், கருப்பாகாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.
இட்லி, தோசை ரகசியம்
இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் மாவு பாத்திரத்தின் மேல், படர போட்டு வைக்கவேண்டும். இரண்டு நாட்கள் மாவு கெடாமலும், புளிக்காமலும் இருக்கும்.
தோசைகல்லில் தோசை சுடும்போது தோசை மாவில் சிறிது சர்க்கரையைப் போட்டு தோசை சுட்டால் தோசை மொறுமொறுப்பாக இருக்கும்.
கறிவேப்பிலை காய்ந்து விட்டால் அதனை தூக்கி எரிந்துவிடாமல் இட்லி செய்யும்போது, வேகவைக்க பயன்படுத்தும் தண்ணீரில் கறிவேப்பிலையை போட்டு கொதிக்கவிடவேண்டும். இப்போது இட்லி செய்தால், வாசனையாக இருக்கும்.
சாம்பாரின் சுவையை மேலும் அதிகரிக்க அதில் வறுத்த வெந்தயத்தை சேர்க்கவேண்டும். அப்போது சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
கிழங்குகனை வேக வைக்கும்போது, அது விரைவாக வேக வேண்டுமெனில், அவற்றை பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்துவிட்டு வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
பெருங்காயம் டிரிக்ஸ்
வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அதை தவிர்க்க பச்சை மிளகாயை காம்புடன் பெருங்காய டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். அப்போது மீண்டும் கெட்டியாகி வீணாகாமல் இருக்கும்.
சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, சிறுது தூள் உப்பை கையில் தடவிக்கொள்ளவேண்டும். அப்போது மாவு பிசையும்போது கையில் ஒட்டாமல் வரும். உப்பை சேர்த்து பிசைவதற்கு பதில் இப்படி செய்தால், அது சாப்பாத்திக்கும் சுவை சேர்க்கும், கையிலும் ஒட்டாது.
பச்சை மிளகாயை காம்பு நீக்கி நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல இருக்கும்.
கோதுமை மாவில் வண்டு பிடிக்காமல் இருக்கவேண்டுமெனில், அதில் கொஞ்சம் உப்பை கலந்து வைத்தவேண்டும்.
காப்பர் பாட்டம் பாத்திரம் மங்காமல் இருப்பதற்காக சிறிது உப்பையும், வினிகரையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாத்திரம் பளபளவென மின்னும். வெள்ளிப்பாத்திரங்களையும் இப்படி பளபளக்கச் செய்யலாம்.
மிக்ஸி ஜாரில் உள்ள பிளேடை கழட்ட முடியவில்லையென்றால், அது மூழ்கும் அளவுக்கு சூடான தண்ணீரை ஊற்றி சிறிது நேரம் விடவேண்டும். தண்ணீர் ஆறியவுடன், கழற்றினால் பிளேடை எளிதாக கழட்டலாம்.
இட்லி சாம்பார் ருசியாக இருக்க வேண்டுமா? சாம்பார் கொதித்த பின்னர், அதில் மிளகு, சீரகம், வர மிளகாய், வர கொத்தமல்லி போன்றவற்றை ஒரு கடாயில் வறுத்து, மிக்ஸியில் சேர்த்து பொடிசெய்து, சாம்பார் மீது தூவினால் சுவை நன்றாக இருக்கும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்