இனி சாப்பாட்டில் இருந்து தூக்கி வீசாதீர்கள்; நன்மைகள் தெரிந்தால் வீட்டிலே வளர்ப்பீர்கள் கறிவேப்பிலையை; இதோ ஐடியா!
இனி சாப்பாட்டில் இருந்து தூக்கி வீசாதீர்கள்; நன்மைகள் தெரிந்தால் வீட்டிலே வளர்ப்பீர்கள் கறிவேப்பிலையை, இதோ ஐடியாக்களை தெரிந்துகொள்ளுங்கள்.

கறிவேப்பிலையை நாம் அனைத்து உணவிலும் தாளிப்புக்காக சேர்த்துக்கொள்வோம். ஆனால் அதை பெரும்பாலானோர் சாப்பிடாமல் தூக்கியெறிவார்கள். ஆனால் கறிவேப்பிலை தலைமுடி வளர்ச்சி, கருமை முதல் செரிமானம், கண் பார்வை என எண்ணற்ற நன்மைகளைத் தரும். இத்தனை நன்மைகள் நிறைந்த கறிவேப்பிலையை வீட்டிலே வளர்க்க முடியும். தாளிப்பில் சேர்க்கும்போதுதாக் வீசியெறிவார்கள். ஆனால் அதில் துவையல், தொக்கு எனவும் செய்து அசத்தலாம். இவை குறித்தெல்லாம் அறிந்துகொண்டால் நீங்கள் கறிவேப்பிலையை வீட்டிலே வளர்க்க ஆசைப்படுவீர்கள். இதோ கறிவேப்பிலையை வீட்டிலே எப்படி வளர்ப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள். அதை நடுவது, பராமரிப்பது, அறுவடை செய்வது அனைத்துமே எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அன்றாட உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலையை பால்கனியில் இருந்தே பறித்துக்கொண்டால் அது எத்தனை மகிழ்ச்சி தரும். இதோ கறிவேப்பிலையை பால்கனியில் வளர்ப்பது எப்படி என்று பாருங்கள்.
இந்த ஃபிரஷ் கறிவேப்பிலை உங்கள் ரெசிபிகளுக்கு புதிய சுவையைத்தரும். செடியில் இருந்து பறித்து தாளிக்கும்போது அதன் மணம் எப்படி இருக்கும் தெரியுமா? இதோ இந்த குறிப்புக்களை பின்பற்றி செடியை வளர்த்து அதை பறித்து தாளித்து பாருங்கள். நீங்கள் சுவை மற்றும் மணத்துக்காக உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வதுடன், சில கறிவேப்பிலை இலைகளை நீங்கள் மென்று சாப்பிடலாம். ஏனெனில் அதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளது.
கறிவேப்பிலைச் செடியை வீட்டில் வளர்ப்பது எப்படி?
கறிவேப்பிலைச் செடியை விதைகள் மற்றும் வெட்டிய பாகங்களில் இருந்தும் நட்டு வளர்க்கலாம். இருமுறைகளிலும் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நடவு செய்யலாம். விதைகள் தூவ விரும்பினால், கறிவேப்பிலை விதைகளை வாங்கி, ஒரு ஈரமான பேப்பரில் வையுங்கள். அதை ஒரு சிஃப் லாக் பையில் வைத்து மூடி, ஒரு ஜன்னலுக்கு அருகில் 15 – 20 நாட்கள் வைக்க வேண்டும். சில நாட்களில் விதைகள் முளைக்கத் துவங்கும். அவற்றை வெளியே எடுத்து ஈரமான மண்ணில் நடவேண்டும். அதற்கு தண்ணீரும் தொடர்ந்து விடவேண்டும். சில வாரங்களில் செடி வளர்ந்து வரும்.