Gongura Rice: கண் பார்வையில் பிரச்சனையா.. இந்த கீரையில் அடிக்கடி சாதம் செய்து கொடுங்க.. சிறுநீர பிரச்சினையும் சரியாகும்
Oct 03, 2024, 12:54 PM IST
Gongura Rice: கண் நோய்கள் வராது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே கோங்குராவை ஏதாவது ஒரு வடிவத்தில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களையும் தடுக்கும் ஆற்றல் கோங்குராவுக்கு உண்டு.
Gongura Rice: கோங்குரா பாரம்பரிய உணவு மட்டுமல்ல. சில நவீன உணவுகளிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இது தெலுங்கில் கோங்குரா என்றும் தமிழில் புளிச்ச கீரை என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுக்க வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கோங்குரா சாதம் மிகவும் ருசியானது. கோங்குரா சாதம் சமைத்தால் சைட் டிஷ் இல்லாமல் கூட சாப்பிடலாம். இதை மதிய லஞ்ச் பாக்ஸ்க்கு வைப்பதற்கு பயன்படுத்தலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுவார்கள். காரமாக செய்தால் பெரியவர்களுக்கு பிடிக்கும். மிளகாய் இல்லாமல் செய்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும். நீங்கள் அதை எப்படி செய்ய விரும்புகிறீர்கள் என்பது உங்களுடைய விருப்பம். வாரம் ஒருமுறையாவது கோங்குரா சாப்பிடுவது அவசியம். இதில் ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. கோங்குராவை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு கண்பார்வை சிறப்பாக இருக்கும். கண் நோய்கள் வராது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே கோங்குராவை ஏதாவது ஒரு வடிவத்தில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதய நோய்கள், சிறுநீரக நோய்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களையும் தடுக்கும் ஆற்றல் கோங்குராவுக்கு உண்டு.
கோங்குரா சாதம் செய்ய தேவையான பொருட்கள்
கோங்குரா - 2 கட்டு
சமைத்த சாதம் - இரண்டு கப்
நிலக்கடலை - இரண்டு ஸ்பூன்
உளுந்தம்பருப்பு - இரண்டு ஸ்பூன்
கடலை துருவல் - மூன்று கரண்டி
கடுகு - ஒரு ஸ்பூன்
சீரகம் - ஒரு ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
கருப்பு மிளகு - ஏழு
கொத்தமல்லி தூள் - அரை ஸ்பூன்
எள் தூள் - அரை ஸ்பூன்
கோங்குரா சாதம் செய்முறை
1. கோங்குரா சாதம் செய்முறைக்கு, அரிசியை முன்கூட்டியே சமைத்து உலர்த்தி தயாராக வைத்திருக்க வேண்டும்.
2. இப்போது கோங்குரா இலைகளை கழுவி தனியாக வைக்கவும்.
3. ஒரு கடாயை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கோங்குரா இலைகளை வதக்கவும்.
4. மிதமான தீயில் வைத்து கோங்குரா இலைகளை வேக வைத்த பிறகு அடுப்பை அணைக்கவும். அவற்றை ஆற வைத்து விழுதாக அரைத்து தனியாக வைக்கவும்.
5. இப்போது அடுப்பை சிம்மில் வைத்து கடாயில் எண்ணெய் ஊற்றி நிலக்கடலையை வதக்கவும்.
6. காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வதக்கவும்.
7. கறிவேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து வதக்கவும்.
8. இப்போது அரைத்த கோங்குரா இலைகளின் விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.
9. கொத்தமல்லி தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து கலக்கவும்.
10. இப்போது சுவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
11. இதனுடன் ஏற்கனவே சமைத்த சாதத்தை சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
12. பிறகு அடுப்பை அணைக்கவும். அவ்வளவுதான் சுவையான கோங்குரா சாதம் ரெடி.
13. இதற்கு சைட் டிஷ் எதுவும் தேவையில்லை. கோங்குரா சாதம் மட்டும் சாப்பிட்டால் போதும், சுவை அற்புதமாக இருக்கும். அப்பளம் வடகத்துடன் சாப்பிட ருசி அருமையாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.
அறுசுவை உணவுகளின் குறிப்புகளை நீங்களும் அறிந்து கொள்ள, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்களிலும் எங்களை தொடரலாம்.