தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Green Chilly Tomato Chutney : நாலே ஸ்டெப்பில் நச்சுன்னு செஞ்சிடலாம் ஒரு சட்னி! தக்காளி, பச்சை மிளகாய் போதும்! இதோ ரெசிபி

Green Chilly Tomato Chutney : நாலே ஸ்டெப்பில் நச்சுன்னு செஞ்சிடலாம் ஒரு சட்னி! தக்காளி, பச்சை மிளகாய் போதும்! இதோ ரெசிபி

Priyadarshini R HT Tamil
Jun 04, 2024 05:58 AM IST

Green Chilly Tomato Chutney : நாலே ஸ்டெப்பில் நச்சுன்னு செஞ்சிடலாம் இப்படி ஒரு சட்னியை, தக்காளி, பச்சை மிளகாய் இருந்தால் போதும், மற்ற வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே செய்யலாம். இதோ ரெசிபி, செய்து பாருங்கள்.

Green Chilly Tomato Chutney : நாலே ஸ்டெப்பில் நச்சுன்னு செஞ்சிடலாம் ஒரு சட்னி! தக்காளி, பச்சை மிளகாய் போதும்! இதோ ரெசிபி
Green Chilly Tomato Chutney : நாலே ஸ்டெப்பில் நச்சுன்னு செஞ்சிடலாம் ஒரு சட்னி! தக்காளி, பச்சை மிளகாய் போதும்! இதோ ரெசிபி

ட்ரெண்டிங் செய்திகள்

இதுகுறத்து, அவர் கூறுகையில், சட்னி என்றாலே நம் அனைவருக்கும் நினைவில் வருவது தக்காளிச் சட்னிதான். மற்ற சட்னிகளைவிட தக்காளி சேர்த்து செய்யப்படும் சட்னி அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாக உள்ளது. 

தக்காளி சட்னியை நாம் பல்வேறு வழிகளில் செய்கிறோம். பச்சை மிளகாய் சேர்த்து செய்யும் இந்த தக்காளி சட்னி வித்யாசமான சுவையில் இருக்கும். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நாலே ஸ்டெப்பில் பட்டுன்னு செஞ்சிடலாம் நல்ல ஒரு சட்னி. தக்காளி மற்றும் பச்சைமிளகாய் மட்டும் இருந்தால் போதும்.

தேவையான பொருட்கள்

தக்காளி - 4

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 4

மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்

சாம்பார் பொடி – அரை ஸ்பூன்

பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தக்காளி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான சூட்டில் வேகவைக்கவேண்டும்.

தக்காளி வெந்ததும் ஒரு தட்டில் மாற்றி ஆறவைத்து தோலை உரித்துக் கொள்ளவேண்டும். பின் மிக்ஸி ஜாரில் சேர்த்து அதோடு வேகவைத்த பச்சை மிளகாயையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய்விட்டு, சூடானவுடன், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் அரைத்த தக்காளி பச்சை மிளகாய் கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து மிதமான சூட்டில் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவேண்டும். வித்யாசமான தக்காளி பச்சை மிளகாய் சட்னி தயார்.

இதை தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், நீங்கள் வழக்கமாக சாப்பிடும் இட்லி, தோசையைவிட கூடுதலாக 4 சாப்பிடுவீர்கள்.

வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். ஒருமுறை ருசித்தால், மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்பீர்கள். அத்தனை சுவை நிறைந்ததாக இருக்கும்.

எப்போது நாம் வீட்டில் சமைத்து சாப்பிடும் உணவு ருசி நிறைந்ததாக மட்டும் இருக்கக்கூடாது. ஆரோக்கியமானதாகவும் இருக்கவேண்டும். அந்த வகையில் தக்காளியில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது என்று செஃப் முத்துலட்சுமி மாதவக்கிருஷ்ணன் கூறுகிறார்.

தக்காளி நமது சரும பளபளப்புக்கு மிகவும் அவசியமான ஒன்று. இது பழவகையைச் சேர்ந்தது என்றாலும், காயாகத்தான் பார்க்கப்படுகிறது. இதில் எண்ணற்ற ரெசிபிகளை நாம் தயாரிக்க முடியும்.

நமது அன்றாட உணவில் தக்காளியின்றி ஒன்றுமே செய்ய முடியாது. அதேபோல் தக்காளி மட்டும் இருந்து விட்டால் போதும். மூன்று வேளை உணவும் செய்து அசத்திவிட முடியும் என்பது தக்காளியின் சிறப்பு. எனவே இந்த தக்காளி சட்னியை செய்து சாப்பிடுங்கள் என்று அவர் கூறுகிறார்.

WhatsApp channel

டாபிக்ஸ்