தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Here Is How To Make Delicious Andhra Gongura Pachadi At Home

Gongura Pachadi: அல்டிமேட் டேஸ்ட் கோங்குரா பச்சடி.. வீட்டிலேயே செய்யலாம்.. ரொம்ப ஈசி

Suriyakumar Jayabalan HT Tamil
Feb 10, 2024 12:34 PM IST

சுவையான ஆந்திரா கோங்குரா பச்சடியை வீட்டில் எப்படி செய்வது என்பது குறித்து இங்கே காணலாம்.

கோங்குரா பச்சடி
கோங்குரா பச்சடி

ட்ரெண்டிங் செய்திகள்

இது மிகவும் சுவையான உணவுகளில் ஒன்றாகும். அங்கு இருப்பவர்கள் வெறும் சோரோடு சேர்த்து நெய் கலந்து இந்த கோங்கிரா பச்சடியை சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த கோங்குரா பச்சடியை நமது வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அது எப்படி செய்வது என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.

கோங்குரா பச்சடி பொருட்கள்

 

 • இரண்டு கப் கோங்குரா இலை
 • 5 பல் உரிக்காத பூண்டு
 • 7 காய்ந்த மிளகாய்
 • 5 பல் உரித்த பூண்டு
 • தேவையான அளவு எண்ணெய்
 • 5 பச்சை மிளகாய்
 • ஒன்றரை டீஸ்பூன் மல்லி விதைகள்
 • அரை டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
 • அரை டீஸ்பூன் கடலைப்பருப்பு
 • அரை டீஸ்பூன் கடுகு
 • கால் டீஸ்பூன் வெந்தயம்
 • ஒரு டீஸ்பூன் சீரகம் தேவையான
 • அளவு கருவேப்பிலை தேவையான
 • அளவு உப்பு

கோங்குரா பச்சடி செய்முறை

 

 • அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாயை அதில் வைக்க வேண்டும் பின்னர் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய், வெந்தயம் கொத்தமல்லி விதைகள் உள்ளிட்டவற்றை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 • ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கோங்குரா இலைகளை நன்றாக வதக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
 • ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மசாலா பொருட்களையும் ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வைத்து ஒரு சுற்று அரைத்து கொரகொரப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 • அதற்குப் பிறகு வதைக்கு வைத்திருக்கக்கூடிய கோங்கர இலைகளில் ஜார்வி போட்டு மாவு போல் அரைத்து கொள்ள வேண்டும். சுவைக்காக தேவை என்றால் சிறிது வெங்காயத்தை அதனோடு சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
 • அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை கொண்டு தாளிப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
 • அதன் பின்னர் அந்த தாளிப்பில் அரைத்து வைத்திருக்கக்கூடிய கோங்குரா பச்சடி விழுதை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். சுவைக்கு ஏற்ப தேவையான அளவு உப்பை கலந்து கடாயில் மிதமான சூட்டில் வதக்கினால் எண்ணெய் தனியாக பிரிந்து வரும்.
 • அவ்வளவுதான் கோங்குரா பச்சடி தயார். அதனை சாதத்தோடு சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

WhatsApp channel