Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ கார்டனுக்கு மண்ணை தயார்படுத்துதல், உரமிடுதல் எப்படி?
Sep 30, 2024, 07:00 AM IST
Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ உங்கள் வீட்டு கார்டனுக்கு தேவையான மண்ணை தயார்படுத்துதல் மற்றும் உரமிடுதல் எப்படி?
உங்கள் வீட்டில் உள்ள சிறிய தோட்டமோ அல்லது பெரியதோ அதற்கு பராமரிப்பு என்பது கட்டாயம் வேண்டும். உங்கள் தோட்டத்தை பராமரிக்கத் தேவையான குறிப்புகளை நீங்கள் தெரிந்துகொள்வது உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் அனைத்தும் வளர்வதற்கு துணைபுரியும். நீங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்பினால் அது உங்களுக்கு பல்வேறு விஷயங்களை மனதில் ஏற்படுத்தும். அதுவும் உண்மைதான், ஒரு தோட்டம் அமைக்க நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இதுதான். நீங்கள் உங்களின் தாவரங்களை நடவு செய்வது எப்படி? சிறந்த மண் எது? அவற்றை எப்போது வெட்டவேண்டும்? அவற்றுக்கு போதிய தண்ணீர் மற்றும் சூரியஒளி கிடைக்க என்ன செய்யவேண்டும். இயற்கையே சிறந்த ஆசான். நீங்கள் தோட்டம் அமைக்க அமைக்க, உங்களுக்கு எது சரியாக செயல்படும். எது வளராது என்பதை கற்றுக்கொடுத்துவிடும்.
தோட்டக் குறிப்புகள்
உங்களுக்குத் தேவையான தோட்டக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக யாருக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்றால், தோட்டம் அமைக்கும் வேலையை துவங்கியுள்ளவர்களுக்குத்தான். தோட்டத்தை நீங்கள் கஷ்டப்பட்டு நடவேண்டாம். இந்த குறிப்புக்களை பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியுடன் தோட்ட வேலைகளில் ஈடுபட முடியும்.
உங்கள் வீட்டுத்தோட்டத்தில் மண்ணும், தண்ணீரும் எப்படி இருக்கவேண்டும்?
ஒவ்வொரு செடிக்கு மண் மற்றும் தண்ணீர் விடும் அளவு வேறுபடும். எனவே உங்கள் மண் நல்ல தரமானதாக உள்ளதா என்று பாருங்கள். அதில் உங்கள் தாவரங்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள். மேலும் நீங்கள் தண்ணீரை அதிகமும் ஊற்றிவிடக்கூடாது. குறைவாகவும் ஊற்றக்கூடாது.
உங்கள் மண்ணுக்கு 6 மாதத்திற்கு உரங்கள் மற்றும் அழுகிய உரம் இடவேண்டும். புதிய உரங்களில் அதிகளவில் நைட்ரஜன்கள் இருக்கும். எனவே அவை செடிகளை கருக்கிவிடும்.
அதில் ஒட்டுண்ணிகளும், நோய் கிருமிகளும் இருக்கும். பன்றிகள், நாய்கள் மற்றும் பூனைகளின் கழிவுகளை செடிகளுக்கோ அல்லது உரதயாரிப்பிலோ பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள ஒட்டுண்ணிகள் மக்களுக்கு தொற்றுக்களை ஏற்படுத்தும்.
செடிகளை நன்றாக வளர்க்க உரங்கள் மட்டும் தீர்வல்ல; மண்ணின் தரம், அதில் போடப்படும் இயற்கை உரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதை உங்கள் மண்ணில் சிறப்பாக இடவேண்டும். இதற்கான சிறந்த மண் பொலபொலப்பாகவும், தோண்ட எளிதாகவும், தண்ணீர் ஈர்ப்பதாவும் இருக்கவேண்டும்.
உங்கள் செடிகளின் வேர்களுக்கு போதிய ஆக்ஸிஜனைக் கொடுப்பதாக இருக்கவேண்டும். ஆர்கானிக் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் உங்கள் செடிகளுக்கு தேவையான ஹைட்ரஜன், பாஸ்பேட், பொட்டசியச்சத்துக்கள் கிடைக்கும்.
ஈர மண்ணை தோண்டி செடிகளை நடாதீர்கள். இது மண்ணின் குணத்தை மாற்றிவிடும். மண் நன்றாக பொலபொல மாறும் வரை காத்திருக்கவேண்டும். உங்கள் கைகளில் எடுத்து உருட்டினால் உருட்டவரக்கூடாது. அதுதான் மண்ணின் சரியான பதம்.
உங்கள் மண்ணின் கழிவு எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள். ஏனெனில் வேர்களுக்கு ஆக்ஸிஜன் தேவை. உங்கள் மண் எப்போதும் இருக்கும் என்றால், அதில் வேர்களுக்கு தேவையான காற்றோட்டம் கிடைக்காது. எனவே உங்கள் மண்ணில் ஆர்கானிக் உரங்களை தெளித்து அதன் தரத்தை நன்றாக மேம்படுத்திய பின்னர் செடிகளை இடுங்கள்.
வாரத்தில் ஓரிரு நாட்கள் தண்ணீர் விட்டாலே தாவரங்கள் ஓரிரு இன்ச்கள் வரை வளரும். மழை இல்லாவிட்டால் கொஞ்சம் ஆழமாக தண்ணீர் விடவேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தினமும் விடாமல் வாரத்தில் ஒரு நாள் நிறைய தண்ணீர் விடுவது அவசியம்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விடுவது மண்ணின் மேல்புறத்தை மட்டும்தான் ஈரமாக வைத்திருக்கும். ஆனால், வேர்கள் ஆழமாக வளர்வதற்கு பதில் வேரை நகரச் செய்துவிடும். செடிகளில் இருந்து விழும் இலைகளை அகற்றிவிடாதீர்கள். அவற்றை கொத்தி, உரம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
டாபிக்ஸ்