Bread Upma: இனி உப்புமா செய்ய ரவை தேவையில்லை! பிரட் மட்டும் போதும்! செம ரெசிபி!-how to prepare upma in bread for breakfast - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Bread Upma: இனி உப்புமா செய்ய ரவை தேவையில்லை! பிரட் மட்டும் போதும்! செம ரெசிபி!

Bread Upma: இனி உப்புமா செய்ய ரவை தேவையில்லை! பிரட் மட்டும் போதும்! செம ரெசிபி!

Suguna Devi P HT Tamil
Sep 29, 2024 10:13 AM IST

Bread Upma: இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக உப்புமா இருக்கிறது. இந்த உணவு செய்வதற்கு சில நிமிடங்களே போதும். சில வீடுகளில் உப்புமாவை யாருக்கும் பிடிப்பதில்லை.

Bread Upma: இனி உப்புமா செய்ய ரவை தேவையில்லை! பிரட் மட்டும் போதும்! செம ரெசிபி!
Bread Upma: இனி உப்புமா செய்ய ரவை தேவையில்லை! பிரட் மட்டும் போதும்! செம ரெசிபி!

தேவையான பொருட்கள்

10 பிரட் துண்டுகள் 

அரை கப் பச்சை பட்டாணி

ஒரு உருளைக்கிழங்கு

ஒரு கேரட்

சிறிதளவு பீன்ஸ்

ஒரு பெரிய வெங்காயம்

இரண்டு தக்காளி

பச்சை மிளகாய்

 எலுமிச்சம் பழம்

சிறிதளவு இஞ்சி

அரை டீஸ்பூன் கடுகு

அரை டீஸ்பூன் சீரகம்

அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்

சிறிதளவு மிளகாய் தூள்

சிறிதளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு நெய்

சிறிதளவு கறிவேப்பிலை

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் பட்டாணியை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பினார் தக்காளி, உருளை கிழங்கு, பச்சை மிளகாய், பீன்ஸ், இஞ்சி, கொத்தமல்லி, ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பட்டாணியை போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் பிரட் துண்டுகளை சூடாக்கி எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடாக்கவும். அவை சூடானதும் சீரகம், கடுகை போட்டு வறுக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். அதில் இஞ்சி, கறிவேப்பிலையை போட்டு இஞ்சியின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.  அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, மற்றும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பட்டாணியை போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை வேக விடவும்.

நன்றாக வெந்த பின்னர் அதில் நறுக்கிய தக்காளியை போட்டு கலக்கவும். பின்னர் அதில் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வேக விடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு தக்காளி நன்கு வேகும் வரை வேக விடவும். தக்காளி நன்கு வெந்ததும் அதில் எலுமிச்சை சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். பின்பு நறுக்கி வைத்திருக்கும் பிரட்டு துண்டுகளை போட்டு அது நன்கு மசாலாவோடு சேருமாறு பக்குவமாக கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு பிரட் உப்புமாவை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அசத்தலான பிரட் உப்புமா தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.