Spinach Vadai: இரும்புச் சத்து நிறைந்த முருங்கை கீரை வடை செய்யும் ஈஸி ரெஸிபி! ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு பெஸ்ட் சாய்ஸ்!
Sep 29, 2024, 05:36 PM IST
Spinach Vadai: உடலுக்கு பல விதமான பயன்களை தரும் திறன் உடையது கீரை வகைகள், அனைத்து கீரைகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் ஏதேனும் நோயை திறக்க வல்ல சக்தி உள்ளது.
உடலுக்கு பல விதமான பயன்களை தரும் திறன் உடையது கீரை வகைகள், அனைத்து கீரைகளிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் மற்றும் ஏதேனும் நோயை தடுக்க வல்ல சக்தியும் உள்ளது. அன்றாடம் சாப்பாட்டில் ஒரு வகை கீரை சேர்க்க வேண்டும். ஆனால் குழந்தைகள் கீரையை அவ்வளவு விரும்பி சாப்பிடுவதில்லை. கீரை சாப்பிடும் மறுக்கும் நபர்களுக்காகவே கீரையை வைத்து பல விதமான உணவு வகைகள் உள்ளன. அதில் ஒன்றுதான் முருங்கை கீரையை வைத்து வடை செய்வது. இந்த வடை மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த முருங்கை கீரை வடையை எப்படி செய்வது என்பதை தெரிந்துக் கொள்ள இதனை முழுமையாக படியுங்கள்.
தேவையான பொருட்கள்
200 கிராம் கடலை பருப்பு
1 கைப்பிடி அளவு முருங்கை கீரை
1 பெரிய வெங்காயம்
4 காய்ந்த மிளகாய்
சிறிதளவு இஞ்சி
சிறிதளவு சோம்பு
தேவையான அளவு எண்ணெய்
தேவையான அளவு உப்பு
சிறிதளவு கொத்தமல்லி
சிறிதளவு கறிவேப்பிலை
செய்முறை
முதலில் கடலை பருப்பை எடுத்து அதை நன்கு சுத்தமாக கழுவி 2 மணி நேரம் வரை ஊற விடவும். பின்பு வெங்காயம், முருங்கைக்கீரை, இஞ்சி, கொத்தமல்லி, மற்றும் கறிவேப்பிலையை நறுக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பின்னர் ஊற வைத்திருக்கும் மாவை எடுத்து அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, காய்ந்த மிளகாய், சோம்பு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை சற்று மொறு மொறுப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் நறுக்கி வைத்திருக்கு வெங்காயம், முருங்கை கீரையை சேர்க்க வேண்டும். மாவில் தேவையான அளவு உப்பை போட வேண்டும்.
பிறகு இந்த மாவில் இருந்து சிறிதளவு மாவை எடுத்து அதை உருண்டையாக உருட்டி அதை கையில் வைத்து ஒரு தட்டு தட்டி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இவ்வாறு மீதமுள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதை தட்டில் தயாராக வைத்து கொள்ளவும். பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் இந்த வடையை போட்டு பொரித்து எடுக்கவும். வடை இரு புறமும் பொன்னிறமானதும் அதை ஒரு ஜல்லி கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து அதை ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சத்தான முருங்கைக்கீரை வடை தயார். இதை கட்டாயம் உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்கள் குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.
மேலும் இதே முறையில் மற்ற கீரைகளையும் போட்டு வடை செய்யலாம். மதுரையை ஒட்டிய சில மாவட்டங்களில் கீரை வடை மிகவும் பிரபலமான உணவுப் பொருளாகும். மேலும் இதனை பல மக்கள் விரும்பி உண்ணுகின்றனர். உடலுக்குத் தேவையான பல சத்துக்கள் கீரையில் உள்ளன. மருத்துவர்களும் தினமும் கீரை சாப்பிட பரிந்துரை செய்கின்றனர். எனவே கீரை வடை ஒரு சிறந்த சத்தான ஸ்நாக்ஸ் ஆகும்.
டாபிக்ஸ்