Beetroot Cutlet: செரிமான மண்டலத்தை சீராக்கும் பீட்ரூட்டில் கட்லட் செய்யலாமா? தெரிஞ்சுக்க இத படிங்க!-how to make healthy snack beetroot cutlet - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beetroot Cutlet: செரிமான மண்டலத்தை சீராக்கும் பீட்ரூட்டில் கட்லட் செய்யலாமா? தெரிஞ்சுக்க இத படிங்க!

Beetroot Cutlet: செரிமான மண்டலத்தை சீராக்கும் பீட்ரூட்டில் கட்லட் செய்யலாமா? தெரிஞ்சுக்க இத படிங்க!

Suguna Devi P HT Tamil
Sep 29, 2024 11:20 AM IST

Beetroot Cutlet: குழந்தைகளுக்கு அதிக சத்துமிக்க காய்கறிகளை கொடுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஏனெனில் அவர்களுக்கு அந்த காய்கறிகள் பிடிப்பதில்லை.

Beetroot Cutlet: செரிமான மண்டலத்தை சீராக்கும் பீட்ரூட்டில் கட்லட் செய்யலாமா? தெரிஞ்சுக்க இத படிங்க!
Beetroot Cutlet: செரிமான மண்டலத்தை சீராக்கும் பீட்ரூட்டில் கட்லட் செய்யலாமா? தெரிஞ்சுக்க இத படிங்க!

தேவையான பொருட்கள்

2 பீட்ரூட்

5 உருளைக்கிழங்கு

அரை கப் பட்டாணி

1 பெரிய வெங்காயம்

1 பச்சை மிளகாய்

3 பல் பூண்டு

1 துண்டு இஞ்சி

சிறிதளவு மைதா மாவு

4 பிரட்

சிறிதளவு சீரக தூள்

சிறிதளவு கரம் மசாலா

சிறிதளவு சாட் மசாலா

5 முந்திரி

தேவையான அளவு எண்ணெய்

தேவையான அளவு உப்பு

சிறிதளவு கொத்தமல்லி

செய்முறை

முதலில் பீட்ரூட்டை தோல் சீவி, துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரி கொத்தமல்லி ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி பூண்டை அரைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். பின்னர் பிரட்டை சூடாக்கி ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தக் கொள்ள வேண்டும். பின்பு உருளை கிழங்கை வேக வைத்து எடுத்து மசித்து வைத்துக் கொள்ளவும். பின்பு பட்டாணியை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரியை போட்டு சிறிது நேரம் வறுக்கவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.  

இஞ்சி பூண்டு பேஸ்ட்டி வாசம் போனதும், துருவிய பீட்ரூட்டை போட்டு கிளறவும். அடுத்து அதில் சீரக தூள், கரம் மசாலா, சாட் மசாலா, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கிளறி விடவும். பிறகு அதில் மசித்த உருளைக்கிழங்கை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வரை வேக விடவும். பின்னர் அதில் வறுத்து வைத்திருக்கும் முந்திரி, மற்றும் கொத்தமல்லியை போட்டு அதை நன்கு கலந்து விடவும். பின்பு சோள மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து எடுத்துக் கொள்ளவும். வதக்கி வைத்திருக்கும் பீட்ரூட் கலவை ஆறியதும் அதை அவரவருக்கு விருப்பமான வடிவில் பிடித்து அதை கரைத்து வைத்திருக்கும் சோள மாவில் நன்கு முக்கி பின்பு அதை bread crumbs ல் போட்டு நன்கு உருட்டி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும். இதனை 15 நிமிடங்கள் ஃபிரிஜ்ஜில் வைத்து எடுத்துக் கொள்ளவும். 

கட்லட் தயார்

இப்பொழுது கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லட்டை போட்டு பொரிகக்கவும் எடுத்துக் கொள்ளவும். பின்பு அது ஒரு புறம் பொன்னிறமானதும் அதை மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து அதை கெட்சப்புடன் சுட சுட பரிமாறவும். இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் சுவையான பீட்ரூட் கட்லெட் தயார். 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.