Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க வேண்டுமா? இதோ நீங்களே தயாரிக்கலாம் இயற்கை மூலிகை உரம்!-gardening tips want to increase yield in your home garden here is a natural herbal compost you can make yourself - HT Tamil ,லைஃப்ஸ்டைல் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க வேண்டுமா? இதோ நீங்களே தயாரிக்கலாம் இயற்கை மூலிகை உரம்!

Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க வேண்டுமா? இதோ நீங்களே தயாரிக்கலாம் இயற்கை மூலிகை உரம்!

Priyadarshini R HT Tamil
Sep 24, 2024 01:56 PM IST

Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க வேண்டுமா? இதோ நீங்களே தயாரிக்கலாம் இயற்கை மூலிகை உரம். பயிர்களுக்கும், மண்ணுக்கும் பாதுகாப்பு ஆகும்.

Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க வேண்டுமா? இதோ நீங்களே தயாரிக்கலாம் இயற்கை மூலிகை உரம்!
Gardening Tips : வீட்டுத் தோட்டத்தில் விளைச்சலை அதிகரிக்க வேண்டுமா? இதோ நீங்களே தயாரிக்கலாம் இயற்கை மூலிகை உரம்!

மூலிகை இயற்கை உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்

வேப்பங்கொட்டை பொடி – ஒரு கிலோ

தயிர் – 2 லிட்டர்

அதிமதுரம் தூள் – 10 கிராம்

கடுக்காய்ப் பொடி – 100 கிராம்

தண்ணீர் – 5 லிட்டர்

பசுங்கோமியம் – 3 லிட்டர்

செய்முறை

முதலில் ஒரு மண் பானையில் ஒரு கிலோ வேப்பங்கொட்டைப் பொடியைபோட்டு அதில் 5 லிட்டர் தண்ணீர் ஊற்றி 12 மணி நேரம் ஊறவைக்கவேண்டும். பின்னர் இதை வடிகட்டிக்கொள்ளவேண்டும்.

அந்த சாறில் 3 லிட்டர் பங்கோமியம் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். அடுத்து இந்த கரைசலுடன் 2 லிட்டர் பசுந்தயிரை சேர்க்க வேண்டும். இக்கரைசலை 12 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் ஊறிய அனைத்தையும் வடிகட்டி அதில் அதிமதுரப்பொடி, கடுக்காய்ப்பொடியையும் சேர்க்கவேண்டும். இவற்றை கலந்தால் கிடைப்பது வேப்பங்கொட்டை மூலிகை தயிர் மிக்சர் எனப்படும், இது 8 லிட்டர் அளவு இருக்கும். இதை பத்திரமாக சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பயன்படுத்தும் முறை

இக்கரைசலில் ஒரு லிட்டர் எடுத்து அதனுடன் 10 லிட்டர் தண்ணீரை கலந்துகொள்ளவேண்டும். இதை உங்கள் வீட்டு தோட்டத்தில் உள்ள அனைத்து வகை மரங்கள், முருங்கை, பப்பாளி, நெல்ல போன்ற மரங்கள், தக்காளி, கத்தரி, வெற்றிலை, துளசி போன்ற செடிகளுக்கு காலை மற்றும் மாலை இருவேளையும் கொடுக்கவேண்டும்.

இதை ஸ்பிரேயர் மூலம் செடிகள் மற்றும் மரங்களில் அடிக்கவேண்டும். அப்போதுதான் பூக்கள் உதிராமல் காய்கள் அதிகமாகவும் நன்றாகவும் பிடிக்கும். இந்த இயற்கை உரத்தை பூப்பூக்கும் பருவத்தில் செடிகள் மற்றும் மரங்களுக்கு கொடுக்கவேண்டும். அப்போதுதான் விளைச்சல் அதிகமாகும்.

இந்த மூலிகை இயற்கை உரத்தை பயன்டுபடுத்துவதால் உங்கள் வீட்டு தாவரங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

இக்கரைசல் ஒரு மூலிகை மருந்தாகும்.

இதனால் உங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மண்ணில் நுண்ணுயிர்கள் அதிகளவில் பெருகும். இதனால் மண் சத்து நிறைந்ததாக மாறும்.

மண்ணின் வளத்தை பாதுகாப்பதுடன், அதை பெருகச் செய்யும்.

மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அதிகமாகும். இதனால் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் பெருகும்.

காய்கறிகள் மற்றும் பழங்களில் ருசி அதிகரிக்கும்.

இது இயற்கை உரம் என்பதால், சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.

பயிர்கள் காய்கறிகள் ஒரே சீராகக் வளரும் தன்மையுடன் இருக்கம்.

அழுகல் நோயைக் கட்டுப்படுத்தும்.

பூச்சிகள் மற்றும் ஈயைக் கட்டுப்படுத்தும். உங்கள் தாவரங்கள் செழித்து வளர உதவும் இந்த உரத்தை வீட்டிலே தயாரித்து பலன்பெறுங்கள். உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்துங்கள். ஆரோக்கிய வாழ்வு வாழ வாழ்த்துக்கள். இதுபோன்ற எண்ணற்ற குறிப்புக்களை உங்களுக்கு ஹெச்.டி தமிழ் தொகுத்து வழங்குகிறது. பல தகவல்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப்பக்கத்தில் எப்போதும் இணைந்திருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.