தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garden : செப்டம்பர் மாதத்தில் பயிரிட ஏற்ற சிறந்த 8 தாவரங்கள் என்ன தெரியுமா? விதைத்து விளைச்சலை அள்ளுங்கள்!

Garden : செப்டம்பர் மாதத்தில் பயிரிட ஏற்ற சிறந்த 8 தாவரங்கள் என்ன தெரியுமா? விதைத்து விளைச்சலை அள்ளுங்கள்!

Priyadarshini R HT Tamil

Aug 26, 2024, 05:02 PM IST

google News
Garden : செப்டம்பர் மாதத்தில் பயிரிட ஏற்ற சிறந்த 8 தாவரங்கள் என்ன தெரியுமா? விதைத்து விளைச்சலை அள்ள தயாராகுங்கள்.
Garden : செப்டம்பர் மாதத்தில் பயிரிட ஏற்ற சிறந்த 8 தாவரங்கள் என்ன தெரியுமா? விதைத்து விளைச்சலை அள்ள தயாராகுங்கள்.

Garden : செப்டம்பர் மாதத்தில் பயிரிட ஏற்ற சிறந்த 8 தாவரங்கள் என்ன தெரியுமா? விதைத்து விளைச்சலை அள்ள தயாராகுங்கள்.

செப்டம்பர் மாதம் வரப்போகிறது! இப்போது உங்கள் தோட்டத்தில் என்ன பயிரிட்டல் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று தெரிந்துகொள்ளுங்கள். செப்டம்பர் மாதத்தில் பயிரிட ஏற்ற காய்கறிகள் என்ன தெரியுமா? உங்கள் வீட்டில் அல்லது தோட்டத்தில் அல்லது சமையலறையில் எங்காவது இடம் இருந்தால் அல்லது தொட்களிலே கூட் நீங்கள் சில செடிகளை வளர்க்கலாம். அது உங்கள் வீட்டுக்கு தேவையான தாவரங்களை வளர்க்கும்போது, உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறிகளும் கிடைத்துவிடும். உங்கள் நேரமும் உபயோகமாக செலவாகும். உங்களுக்கு மனமகிழ்ச்சியையும் தரும். இதோ செப்டம்பர் மாதத் துவங்கப்போகிறது. உங்கள் வீட்டில் விதைத்து வளர்க்க ஏதுவான தாவரங்களை உங்களுக்கு பட்டியலிடுகிறோம். இதை நீங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே பயிரிட்டு விடவேண்டும்.

தக்காளி

தக்காளியை நீங்கள் எந்த சீசனில் வேண்டுமானாலும் எளிதாக வளர்த்துவிடலாம். செப்டம்பர் மாதத்தில் நீங்கள் செரி தக்காளி எனப்படும் குட்டி குட்டி தக்காளிகளை பயிரிட்டு மகிழுங்கள். நீங்கள் அவற்றை விதைகளை வாங்கியும் நடலாம் அல்லது உங்கள் வீட்டில் உள்ள தக்காளியில் இருந்து விதைகளை எடுத்தும் விதைக்கலாம். இது உங்கள் தோட்டத்தில் நன்றாக செழித்து வளரும். உங்கள் வீட்டுக்கும் உபயோகமான செடியாகும்.

கீரை

கீரைகள் குளிர்காலத்தில் அடர்ந்து படர்ந்து வளரக்கூடியவை. இந்த கீரையை நீங்கள் பயிரிட ஏற்ற தருணம் செப்டம்பர் மாதம்தான். இது அக்டோபர் மாதத்தில் அறுவடைக்கு தயாராக இருக்கும். அதற்கு நீங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே விதைத்துவிடவேண்டும். செப்டம்பர் மாதத்தில் நீங்கள் அதிகம் தண்ணீர் விடுவதை தவிர்க்கவேண்டும். அதிகம் தண்ணீர் ஊற்றினால், கீரையின் இலைகள் கருப்பாகிவிடும். எனவே கவனம் தேவை.

கத்தரிக்காய்

கத்தரிக்காயையும் நீங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் விதைக்கலாம். கத்தரிக்காயை வளர்க்கும்போது, நல்ல அகலமான இடத்தில், ஆழ உழுது, கத்தரிக்காய் விதைகளை நடவேண்டும். கத்தரிக்காயை வளர்க்குபோது, நீங்கள் தொட்டியில் விதைக்கிறீர்கள் என்றால் ஆழமான தொட்டியை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அதன் வேர்களுக்கு நல்ல இடம் வேண்டும். அது பற்றிப்பரவும் தன்மைகொண்டது. வேர்களும் வலுவானது. அதையும் தாங்கவேண்டும்.

முட்டைக்கோஸ்

முட்டைகோஸ், செப்டம்பரின் மத்தியில் விதைப்பது நல்லது. 80 நாளில் அது அறுவடைக்கு தயாராகிவிடும். இதை நீங்கள் நல்ல மண்ணில் விதைக்கவேண்டும்.

லெட்யூஸ்

லெட்யூஸ் படபடவென வளரும் தன்மைகொண்ட தாவரம் ஆகும். இதை செப்டம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே பயிரிட வேண்டும். உங்களுக்கு போதிய அளவு இடம் இருந்தால், விதைகளை இடைவெளிகளில் தோட்டத்திலே நேரடியாக விதைத்துவிடுங்கள். இந்த லெட்யூஸ்கள் 40 முதல் 60 நாளிலே அறுவடைக்கு தயாராகிவிடும்.

முள்ளங்கி

முள்ளங்கி தாவரம் வேகமாக வளரக்கூடிய தாவரமாகும். இதை நீங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்த்திலேயே பயிரிடவேண்டும். மண்ணின் தரத்தைப் பொறுத்து இதற்கு நீங்கள் உரங்களைத் தேர்ந்தெடுக்கவேணடும். இதை நீங்கள் 30 நாளில் அறுவடை செய்யலாம்.

பீன்ஸ்

பீன்ஸ் எல்லா காலத்திலும் வளரக்கூடிய தாவரமாகும். இதை நீங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்திலேயே விதைக்கவேண்டும். அப்போதுதான், வெயில் இதமாக இருக்கும். குளிரும் மிதமாக இருக்கும். பீன்ஸ் செடிகள் வளர ஏற்ற நேரம் இது. பீன்ஸை நீங்கள் 50 நாளில் அறுவடை செய்துவிடலாம்.

பூண்டு

பூண்டை அக்டோபர் மாதத்தின் துவக்கத்தில் விதைக்க வேண்டும். அதை நீங்கள் செப்டம்பர் மாதத்தின் இறுதியில் இதை விதைத்தால், பனிக்காலத்திற்குள் நல்ல விளைச்சலைப் பெறலாம்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை